சிறுகதைகளில் பெண்களின் பாத்திரப்படைப்பு

author
0 minutes, 3 seconds Read
This entry is part 3 of 7 in the series 17 ஜூலை 2022

 

 

                                            முனைவா் பெ.கி.கோவிந்தராஜ்

உதவிப்பேராசிரியா்

தமிழ்த்துறை

மஜ்ஹருல் உலூம் கல்லூரி

ஆம்பூா் 635 802

திருப்பத்தூா் மாவட்டம்

செல் 9940918800

Pkgovindaraj1974@gmail.com

 

முன்னுரை

சிறுகதைகளில் கரு, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, களம்காலம், உரையாடல், வருணனை போன்ற பல கூறுகள் அவற்றின் வடிவ அமைப்பை நிர்ணயிக்கின்றன எனலாம். எனினும் முதன்மைத் தன்மையை பெறுவது பாத்திரப் படைப்பே ஆகும். ஏனெனில் சமூகத்தின் முக்கியப் பிரச்சனையை கதையின் கருவாக சேர்ப்பன பாத்திரற்கள் ஆகும். “படைப்பாளிகளின் மன ஓட்டத்திலிருந்து புறப்படும் உயிர்த் துடிப்பே பாத்திரப் படைப்பு” (அகிலன் கதைக்கலை ப.30) என அகிலன் குறிப்பிடுகிறார். ஜெயகாந்தன், தமிழ் வாணன் கல்வி போன்ற பல்வேறு படைப்பாளா்கள் தங்கள் படைப்புகளில் கதைப்பாத்திரங்களையும் உயிரோட்டம் பெற்றவைகளாகப் படைத்ததால் இக்கட்டுரையும் வாரமலா் சிறுகதையில் இடம்பெறும் பாத்திரப் படைப்பு குறித்து ஆராய்கிறது.

பெண்ணியம் விளக்கம்

சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் இருத்தலைப் பேசுவது பெண்ணியமாகும். சமூக அக்கறையின் பெளிப்பாடான பெண்ணியம். ஆணாதிக்கப் பிடியிலிருக்கும் பெண்களின் நிகழ்கால வாழ்க்கைய பிரச்சனைகளைப் பேசுவதாகும். பெண்களின்  பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்க்க முயலும் பெண்ணியம் “மரபு“ என்ற சமூக மதிப்பீட்டைக் கேள்விக்கு ஆட்படுத்துகின்றது.

”பெண்ணியம் என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற சிந்தனை சமூகத்தில் பரவலாக நிலவுகின்றது உண்மையில் பெண்ணியத்தின் நோக்கம் அதுவன்று காலங்காலமாக அடிமைப்பட்டு வதைப்பட்டும் வாழும் பெண்களை அடிமைத் தளையிலிருந்து மீட்டு அவா்களுக்குக் கல்வியின் மூலமும் போதனைகளின் மூலமும் விழிப்புணர்வை ஊட்டி ஆண்களுக்கு இணையான சமூக மதிப்பினைப் பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கமாகும். அந்த இலக்கை அடைய ஆண்கள் தடையாக இருக்கும்போது மட்டுமே அவா்கள் பெண்ணியத்திற்கு எதிரிகளாகின்றனர்.

”ஆங்கிலத்தில் ‘Feminism’என்று வழங்கும் கலைச் சொல்லையே தமிழில் பெண்ணியம் என்று கூறுகிறோம் இந்த ஆங்கிலச் சொல் பெண்ணைக் குறிக்கும் “Femina’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லிருந்து தோன்றிது. பெண் என்னும் சொல் பெண்களுக்கு உரிய இயல்புகளை உடையவன் என்று பொருள்படும் பெண்ணியம் என்ற இச்சொல் 1890 இல் இருந்து பாலினச் சமத்துவக் கோட்பாடுகளையும் பெண்ணுரிமைகளைப் பெறச் செயற்படும் இயக்கங்களையும் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது. எனினும் இருபதாம் நூற்றாண்டிலேயே இச்சொல் பெருவழக்கில் வந்தது. தமிழில் பெண்ணியம் பெண் நிலைவாதம் பெண்ணுரிமை ஏற்பு என்ற சொற்கள் இதற்குரிய சொற்களாக வழங்கி வருகின்றன.

பெண்ணியம் என்பதற்குரிய விளக்கம் ஒவ்வொரு சமுதாயத்தின் வரலாறு பண்பாடு இவற்றைப் பற்றிய உணர்வு நோக்கு செயல் இவைகளைப் பொறுத்து மாறுபடும் பெண்ணியத்தின் தொடக்க  காலமாகிய 18ஆம் நூற்றாண்டில் இச்சொல் குறித்த பொருளிலிருந்து 2004ல் இச்சொல் குறிக்கும் கருத்துக்கள் மாறுபட்டிருக்கும் ஓரினத்து மக்களிடையே கூடவும் அவா்களுடைய கல்வி, விழிப்புணர்ச்சி, ஆண், பெண் வேறுபாடு, ஆணாதிக்கம் இவற்றைப் பொறுத்து இச்சொல்லின் விளக்கம் மாறுபடுவதைக் காணலாம்.

பாத்திரப் படைப்பு விளக்கம்

பாத்திரபப் படைப்பு என்பது சிறுகதைக் கூறுகளுள் இன்றியமையாத ஒன்றாகும். பாத்திரங்களின் பண்புகள் எண்ணங்கள் செயல்கள், வாசகா்களின் உள்ளங்களில் இடம் பிடிக்கும் வண்ணம் படைக்கப்பட்டால்  சிறுகதையானது நன்றாக அமையும் எனலாம். பாத்திரப் படைப்பைப் பற்றி ”படைப்பாளா் தம் வாழ்க்கையில் பல்வேறு மக்களின் இயல்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோ்ந்தெடுத்து, அவ்வியல்புகளை ஒரு பாத்திரத்தின் கண் அமைத்து அப்பாத்திரத்தை உருவாக்குவார். அவ்வாறு உருவாக்கப்பட்ட பாத்திரங்களானது கதையில் உண்மைத் தன்மையோடும் வாழ்க்கையில் உண்மையயாக நடந்ததைப் போலவும் தோன்றுகின்றன” (மா.இராமலிங்கம் விடுதலைக்கு முன் தமிழ் சிறுகதைகள் ப.260) என தா. ஏ ஞானமூா்த்தி குறிப்பிடுகின்றார். கதையில் படைக்கப்படும் பாத்திரங்கள் வாசகா் உள்ளத்தில் நிலைப்பேறு உடையனவாய் அமையும் கதையானது வெற்றி பெறுகிறது.

பெரும்பாலான சிறுகதைகளில் பாத்திரங்களை வைத்தே கதை பின்னப்படுகிறது. கருப்பொருளைச் சொல்ல உதவும் துணைக்கூறாகவே சிறுகதையில் பாத்திரம் பயின்று வருகிறது எனலாம். “அறிவு நலம் மிக்க பாத்திரப் படைப்பு நம்மைத் திருப்தி செய்வதற்காக சிறுகதையில் படைக்கப்படுகின்றது” (தி.ஜானகிராமன் சிறுகதைகள் ஒரு திறனாய்வு பழ. முத்து வீரப்பன் ப. 119) என்பா் ஜெரால்டு புல்லட் எனவே கதைப்பின்னல், கரு அமைப்பு அல்லது வடிவம் போன்றவற்றில் பாத்திரப் படைப்பும் ஒன்றிணைந்து கூறுகள் என அறியலாம்.

பாத்திர வகைகள்

சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் முழு நிலை மாந்தா்கள் அல்லத மாறும் பாத்திரங்கள் ஒரு நிலை மாந்தா்கள் அல்லது மாறா பாத்திரங்கள் என வகைப்படுத்துவா். இம்மூன்று வகைகளை மையப்படுத்தியே சிறுகதையில் பாத்திரப் படைப்பானது செயல்படுகிறது எனலாம்.

பாத்திரப் படைப்பு கதைப்பின்னலும்

தனித்தன்மையான பண்புகளை விளக்கி வருவன நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகளின் சங்கிலிக் கோவையும் காரணகாரிய இயைபும் கதைப் பின்னல் ஆகும். கதைப் பின்னலுடன் நெருங்கிய தொடா்புடையதே பாத்திரம் ஆகும். ”பாத்திரம் என்பது நிகழ்ச்சி, நிகழ்ச்சி என்பது பாத்திரத்தினுடைய விளக்கம்” (தி.ஜானகிராமன் சிறுகதைகள் ஒரு திறனாய்வு பழ. முத்து வீரப்பன் ப. 120)

 என்று ஹென்றி ஜேம்ஸ் குறிப்பிடுவது பொருத்தமானதே ஆகும். கருப்பொருளாக  வரும் கதைகளில் பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது என்பதனை அடிப்படைக் கருத்தாக கொண்டுள்ளன எனலாம்.

பாத்திரப் படைப்பு முறைகள்

”பாத்திரங்களைப் படைக்கும் முறையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நேரடி முறை இரண்டு நாடக முறை நேரடி முறையில் ஆசிரியரே கதை மாந்தரின் பண்புகளை விளக்குவார். நாடக முறையில் கதை மாந்தரின் செயல்கள், எண்ணங்கள், உரையாடல் இவற்றின் மூலம் படிப்பவரே அறியும் வண்ணம் செய்வார். (தி.ஜானகிராமன் சிறுகதைகள் ஒரு திறனாய்வு பழ. முத்து வீரப்பன் ப. 123) நேரடி முறையில் பாத்திரங்களைச் சிந்தரிக்கும் போது அவா்களின் உருவம், வயது பண்பு நலன் ஆகிய அனைத்தும் ஆசிரியராக மிகத் தெளிவாக வருணிக்கப்படுகின்றன.  நாடக முறையில் கதை மாந்தரின் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் அவா்களின் பண்புகளை வெளிப்படச் செய்வதாகும்.

 

பாத்தரங்களும் அவற்றின் வடிவங்களும்

          நடைமுறை வாழ்வில் நாம் சாதாரணமாக பார்க்கும் ஒரு மனிதனைக் கதையிலே பாத்திரமாக வடிவம் கொடுத்து நடமாடவிடும் போது அவனுடைய பண்புகள் செயல்கள் அன்றாட அலுவல்கள் போன்றவற்றை ஒரு கதாசிரியன் கற்பனையாக உருவாக்கி பாத்திரப் படைப்பாக உருவாக்குகின்றான் எனலாம். ” பாத்திரங்களையும் அவற்றின் வடிவங்களையும் ஊடுருவிப் பார்த்து அவற்றினோடு நிற்கும் நிலையான உணா்ச்சித் தத்துவங்களைக் காணுவதுதான் சிறுகதையின் உண்மையான அனுபவம்” என மி.ப.சோமசுந்தரம் குறிப்பிடுகின்றார். (மீபா. சோமசுந்தரம் சிறுகதைப.44)

சிறுகதையில் இடம்பெறும் பாத்திரப்படைப்பின் தன்மை

சிறுகதையின் கதை வளா்ச்சியும் கட்டமைப்பும் பாத்திரங்களின் பாத்திரங்களின் படைப்பு நலங்களால் வளம் பெறுகின்றன. படைப்பாளியின் படைப்பாற்றலின் அவா் படைத்த பாத்திரங்களில் சிந்தையும் பேச்சும் செயலும் ஒளிவீக்கின்ற அழியாக் கோலங்களாகின்றன எனலாம். ”பாத்திரம் படைப்பின் வெற்றியை பொறுத்தே சிறுகதை வெற்றி நடை போடுகிறது. (த.ராசு சிறுகதைகளில் பாத்திரப்படைப்பு, ப.5) என த. ராசு குறிப்பிடுகின்றார். ஒரு பாத்திரம் முழு வடிவம் பெறுவதும் மனத்தில் பதியும்படி அமைவதும் பாத்திரப் படைப்பின் சிற்பாகும். ”பாத்திரம் என்பது உருப்பெற காரணமாகின்றன. (தமிழ்ச்சிநுகதைகள் ஒரு மதிப்பீடு, ச. செந்தில்நாதன் ப.21)என்பதனை ச. செந்தில்நாதன் தெளிவாக கூறுகிறார்.

வாரமலா் சிறுகதையில் பெண் வழிப் பாதிப்புகள்

பெண்களைப் பாதிக்கும் செயல்கள் பல தொடர்ந்து நடக்கின்றன. ஆண்களுக்குக் கீழ்படிந்து தான் பெண்கள் நடக்க வேண்டும் என்பது அக்கால  நடைமுறையில் தீவிரமாயிருந்த நிலை இன்றைய காலக் கட்டத்தில் சற்று மாறியுள்ளது. என்றாரும் இன்னும் பல இடங்களில் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டு அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலையையே காணமுடிகிறது. இத்தகைய சூழ்நிலையை உள்ளடக்கமாக கொண்ட சிறுகதையொன்று வாமைலரின் இடம் பெற்றுள்ளது.

18-04-2004 அன்று வெளிவந்த அக்கதையின் பெயா் வித்யாசமாய்“ என்பதாகும். இக்கதையில் குடிகாரனாக இருக்கும் தன் கணவன் கோபதியை உதறித்தள்ளிவிட்டு அவன் மனைவி புஷ்பரதா தன் இரு பிள்ளைகளுக்கும் தன் பெரியரின் முதல் எழுத்தை இன்ஷியலாக வைத்துக் கொண்டதைப் பற்றி வாரமலா் விளம்பரத்தில் அறிக்கை விடுகிறாள்.

          இக்கதையில் வரும் புஷ்பலதாவைப் போல சமூகத்தில் பல பெண்கள் கணவனை மீறிச் செயல்படும் நிலையிலேயே வாழ்கின்றனா். கதையில் வரும் புஷ்பலதாவைப் போன்று குடிகாரார்களைக் கணவனாய் பெற்ற பல பெண்களின் நிலை இதுவேயாகும். சிலா் இத்தகைய கணவன் துணையில்லாமலேயே வாழ்கின்றனா். தன் பிள்ளைகளுக்காகப் பெண்கள் வாழ வேண்டும் என்ற சூழ்நிலை இன்றையக் காலக்கட்ட சமூகத்தில் காணப்படுகின்றது.

முடிவுரை

          பெண்களைப் பல்வேறு கோணங்களில் சிறுகதைகளில் பாத்திரங்கனாகப் படைத்தளிக்கின்றன. குடும்பப் பெண்கள் தாயின் பெருமை பெண்ணின் பாதிப்புகள் பெண்ணடிமையின் நிலை, பணிபுரியும் பெண்கள் நிலை எனச் சிறுகதைகளில் காட்டப்பட்டுள்ள பெண்கள் பலவரத் தனித்தனியாக ஆராய்ந்துள்ளது.

     பயன்பட்ட நூல்கள்

  1. அகிலன் –         கதைக்கலை

                                                            தமிழ்ப்புத்தகாலயம் தாகம்

                                                            தி. நகா் சென்னை -17 

  1. மா.இராமலிங்கம் விடுதலைக்கு முன் தமிழ் சிறுகதைகள்

தமிழ்ப்புத்தகாலயம் தாகம்

                                                            தி. நகா் சென்னை -17 

 

Series Navigationபிரபஞ்சத்தின் யூகிப்பு வடிவம் என்ன ?நாசாவின் மிகப்பெரும் ஜேம்ஸ் வெப் [james webb] தொலைநோக்கி அனுப்பிய முதல் தெளிவான விண்வெளிப் படங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *