வசந்ததீபன்
1) ஆகப் பெரிய துயரம்
______________________________ _
நிறமற்ற மீன்கள்
உயிர் காக்கும்
நிறமுள்ள மீன்கள்
கனவுகள் வளர்க்கும்
நிறங்கள் என்பது தோற்றப்பிழை
வாழ்தல் இனிது
வாழ வைத்தல் மிக இனிது
வாழ்விற்கு தம்மைக் கொடுத்தல்
மிக மிக இனிது
கனிந்த வாசனை
பறவைகளை அழைக்கிறது
பசி தீர்க்கவே நிகழட்டும் கொண்டாட்டம்
நாய்கள் அலைகின்றன
பசி தீர்க்க எதுவும் செய்யும்
எதிர்க்க வெற்றுக் கண்ணீர் போதாது
சர்வாதிகாரியின் கோரமுகம் அழிவதில்லை
அவன் ருசித்த உதிரத்தின் வாடை மறைவதில்லை
சண்டாள காலத்தின் வன்மம் தீருவதில்லை
வாழ்ந்த காலமெல்லாம் நரித்தந்திரம்
பொதுநலமென சுயநலம்
கழிவிரக்கம் மீறி
வஞ்சம் தான் எழுகிறது
பட்டினி கிடப்பவர்கள் கிடக்கிறார்கள்
பதுக்கி வைப்பவர்கள் வைக்கிறார்கள்
வந்தேமாதரம் பாடிட
எந்த முகாந்திரமும் இல்லை.
(2) ஆடுகளம்
__________________
பால்யத்தின் நிலவறைகள்
திறந்து கொண்டு
ரத்தவாடை மிக்க கனவுகள்
வேட்கை கொண்டு ஆடிய
உக்கிர அடவுகள்
நினைவில் சுழன்று சுழன்று எழுகின்றன
அப்பா இருந்தார்
அம்மா இருந்தாள்
அன்பு தான் இருந்ததே இல்லை
என் உடலை மீட்க நான் போராடுகிறேன்
கண்ணீரும் துயரமும் கசப்பும் திசையெங்கும் கசிகின்றன
கனவுகள் பற்றியெரியும் தேகம் மெளனமாயிருக்கிறது.
துக்கத்தினை பொதிந்து வைத்த
பொதி கனக்கிறது
கவலைகள் பூசப்பட்ட அறைகளில்
கண்ணீர் பூசனம்
நெருக்கப் படர்ந்திருக்கிறது
ஆங்கார வெறியோடு
ஆடுகிறது வெறுமை
அனுபவித்து ஓய்ந்தவன்
ஞானியாகிறான்
கிட்டாதவன் உபதேசம் கேட்கிறான்.
—-
அன்புமிகு புது திண்ணை மின்னிதழ் ஆசிரியர் அவர்களுக்கு.
வணக்கம்.
எனது கவிதையை அனுப்பி உள்ளேன்.
தயவு கூர்ந்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
மிகுந்த அன்புடன்,
வசந்ததீபன்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று
- ஸ்ரீரங்கம் பூங்கா !
- நாட்டுப்புற பாடல் – இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க
- வைதீஸ்வரனின் ஆவணப்படம்….
- அச்சம்(La Peur)
- தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்
- பூவம்மா
- தொடரும்…..!!!!
- உறவே! கலங்காதிரு…
- இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு
- மழைப்பொழியா மேகங்கள்
- காற்றுவெளி ஐப்பசி 2022
- 2 கவிதைகள்
- கபுக்கி என்றோர் நாடகக்கலை
- அன்னம் நடராஜனும் ,இலக்கியா நடராஜனும் அவரின் நாகராஜன்கள் கதைகளும்
- கனா கண்டேன்!
- அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்