அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்

author
0 minutes, 41 seconds Read
This entry is part 11 of 17 in the series 23 அக்டோபர் 2022

 

கலாநிதி சு. குணேஸ்வரன்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்

                           இம்மாதம் 29 ஆம் திகதி

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் நடைபெறுகிறது.

சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வில்,  இலக்கியவாதியும் தமிழக முன்னாள் ஐ. பி. எஸ். அதிகாரியுமான திருமதி திலகவதி “ தமிழ்ச் சிறுகதைகள்- இன்று  “  என்ற தலைப்பிலும், 

 தமிழகத்தைச் சேர்ந்த , தேர்ந்த வாசகரும் வாசிப்பு அனுபவங்கள் சார்ந்து உரையாற்றி வருபவருமான திரு. பவா செல்லத்துரை                           “ வாசிப்பு – ஒரு மானுடத்திறப்பு “ என்ற தலைப்பிலும் உரையாற்றுவர்.

நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின்   இந்து மதத்தின் பரிணாமச்சிந்தனைகள் ( கட்டுரைகள் ) நூல் பற்றி  எழுத்தாளர் திரு. லெ. முருகபூபதியும், திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தியின்  “நோபோல்  “ என்ற சிறுகதைத் தொகுதி பற்றி, இலங்கையிலிருந்து கலாநிதி சு. குணேஸ்வரனும் உரையாற்றுவர்.

நிகழ்வில் இணைந்திருப்பவர்களின் கலந்துரையாடலும் இடம்பெறும்.

கலை, இலக்கியவாதிகளையும் , மற்றும் ஊடகவியலாளர்களையும்  வாசகர்களையும்  இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.

மெய்நிகர் இணைப்பு :

https://us02web.zoom.us/j/89529543173?pwd=bUUrQVBrZlZiMjNxcEVNdllXUVVnZz09


Meeting ID: 895 2954 3173
Passcode: 202886

—————————————————————————————————————————–

 

அவுஸ்திரேலியா :   இரவு :  8.00 மணி  

இலங்கை – இந்தியா : பிற்பகல்  2-30 மணி.

இங்கிலாந்து  :   முற்பகல்  10.00  மணி .  

பிரான்ஸ், ஜெர்மனி,  நோர்வே  : முற்பகல்  11.00  மணி.

                                       கனடா  :   காலை 5-00 மணி

 

Series Navigationதூங்கும் பனிநீர் –குறும் திரைப்படப்பிரதிவைக்கம் முஹம்மது பஷீரின் ஐசுக் குட்டி என்ற புத்தகம்..
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *