ஆண்டி, ராணி, அவ

This entry is part 3 of 10 in the series 30 ஏப்ரல் 2023

ஸிந்துஜா 

ல்லேஸ்வரம் சர்க்கிள் சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஒன்றாக அவர்களதும் இருந்தது. காரோட்டியின் பக்கத்தில் அவன் உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்தான். நடைபாதையின் மேல் எல்லாவிதமான கடைகளும் பரவிக் கிடந்தன. சிக்னல் கிடைத்து வண்டிகள் நகர ஆரம்பித்தன. சிக்னலைக்  கடக்கும் போது அவள் அவன் பார்வையில் பட்டாள். அவன் துள்ளியெழுந்து அவள்தானா என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். காரோட்டி ஏய், ஏய், ஒளுங்கா உக்காரு. உனக்குப் பயித்தியமா பிடிச்சிருக்கு? என்று சத்தம் போட்டான். வெளியே தென்பட்ட ஒரு போலீஸ்காரர் அவன் தலையைப் பார்த்துக் கன்னடத்தில் திட்டினார். பிகிலை எடுத்து ஊதினார். அவன் பயந்து போய் சீட்டில் உட்கார்ந்து கொண்டான். ஆனால் அவன் எம்பி எம்பி அவள் தென்படு

கிறாளா என்று பார்த்தான்.காரோட்டியைப் பார்த்து நிறுத்து, நிறுத்து என்று கத்தியபடி கதவைத் திறக்க முயன்றான். கதவைத் திறக்கும் பட்டன் காரோட்டியின் இருக்கைக்குப் பக்கத்தில் இருந்தது. அவன் விடாமல் நிறுத்து  நிறுத்து  நிறுத்து  நிறுத்து  நிறுத்து  நிறுத்து  நிறுத்து  நிறுத்து  நிறுத்து  நிறுத்து  நிறுத்து  நிறுத்து என்று இரைச்சலிட்டான். எதுக்குடா? என்னா ஆச்சு? என்று கேட்டபடி காரோட்டி வண்டி செல்லும் வேகத்தைக் குறைத்து இடது பக்கம் ரோட்டோரமாக ஒதுங்கினான். அவ போறா, நான் போய் நிறுத்தணும். என்று அவன் காரோட்டியைப் பார்த்துக் கெஞ்சினான். யார்ரா அவ? நீ எதுக்குடா இப்பிடித் தலை தெறிக்க ஓடணும்னு பாக்கறே? என்று கடுமையாக அவனிடம் பேசினான். ப்ளீஸ் ப்ளஸ் ப்ளீஸ் என்று அவன் கெஞ்சினான். சரி. நா இங்கியே நிப்பேன். போயிட்டு அஞ்சு நிமிசத்திலே 

ஓடியாந்துரணும். சரியா? சீக்கிரம் வந்திரு என்னா ?என்று கதவைத் திறந்து விட்டான். அவன் இறங்கி பாய்ச்சலுடன் ஓடினான். சில பேர் மேல் மோதிக்கொண்டு ஓடும் அவனைப் பார்த்து மோதப்பட்டவர்கள் கத்தினார்கள்.அவன் காரிலிருந்து அவளைப் பார்த்த போது அவள் கடந்து சென்ற இடத்துக்கு வந்து நின்றான். முன்னாலும் பின்னாலும் விரிந்து கிடந்த சாலை அவனை வாய் விரித்துத் தின்றது. கண்ணுக்கு எட்டிய தூரம் பரவிக் கிடந்த மனித உடம்புகளின்    ஊடே அவன் பார்வை அவளைத் தேடி ஊடுருவியது. ஆனால் அவளைக் காணோம். சாலையின் இருபுறங்களிலும் உள்ளே கடைகளில் ஏதாவதொன்றுள் நுழைந்தி

ருப்பாளோ என்று சந்தேகம் வந்தது. ஆனால் அவளைக் கண்டுபிடித்ததாக வேண்டும். எல்லாக் கடைகளிலும் நுழைந்து பார்ப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் செய்துதான் ஆக வேண்டும். அவன் அருகிலிருந்த கடையில் நுழைந்தான். வாங்க சார் வாங்க என்ற வரவேற்புடன் எதிர்ப்பட்ட கடைக்காரப்  பையன் என்ன சார் வேணும் என்று சிரித்தபடி கேட்டான்.அவ அவ என்றான் இவன். என்னது? என்று கேட்டான் கடைப்பையன். அவ வேணும் அவ  வேணும் என்று கடையின் உள்புறத்துக்குள் செல்ல முயன்றான். கடைப் பையன் தடுத்து நிறுத்தி அவனை வாசல் வரை கொண்டு சென்று போ போ என்று விரட்டினான். கடையில் இருந்தவர்கள் இதை வேடிக்கை  பார்த்தார்கள். அடுத்த இரண்டு கடைகளிலும் இதேதான் நடந்தது. ஒரு கடையில் அவனை அடிக்க முயன்றார்கள். அவன் கடைக்கு வெளியே தெருவில் நின்றான் .அப்போது அவன் கையை யாரோ தொடுவது போலிருந்தது. திரும்பினான். ஒரு பெண் நின்று அவனைப் பார்த்துச் சிரித்தாள். யார் வேணும் உனக்கு என்று கேட்டாள். அவ என்றான் இவன். யாரு அவ?  ஏய் அவ ஏய் அவ என்னை மாதிரியா? ஆமா.ஆமா என்றான். சரி வா தேடிப் பாக்கலாம்  என்றாள். 

அவன் கையைத் தன் கையோடு பிணைத்துக் கொண்டு நடந்தாள். அவள் கை

சூடாக இருந்தது. அது அவனுடைய அம்மாவின், அக்காவின் மகளுடைய கைகளைப்  போல் சில்லென்று இல்லை என்று நினைத்தான். அவர்கள் எட்டாம் கிராஸைக் கடக்கும் போது வண்டிகள் போவதற்காக 

நடப்பவர்களைப் போலிஸ்காரர் காக்க வைத்திருந்தார். அவன் அவர்களுக்கு முன்னால் நின்ற ஒரு மனிதரின் வழுக்கைத் தலை மேல் சூரிய ஒளி

பட்டுப்  பிரகாசிப்பதை பார்த்தான். பாரு, அவரு  தலை மேலே சூரியனைத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்காரு என்று சிரித்தான். அதை பார்த்து விட்டு அவளும் சிரித்தாள். அவனிடம்நீ  சூரியனைப் பாத்தே; ஆனா  நிலாவைப் பாக்கலியே என்றாள் அவள். அவன் எங்கே எங்கே என்று கேட்டபடி சுற்றுமுற்றும் பார்த்தான். அவள் தன் முகத்தை வலது கைவிரல்களால் வட்டமடித்து இதோ என்றாள். இந்தச் சந்திரன் சில்லுன்னு இருக்குமா என்று கேட்டுக் கொண்டே அவள் முகத்தைத் தன் விரல்களால் தடவினான். ஏன் இருக்காது என்று அவள் அவன் முகத்தைத் தன்னை நோக்கி இழுத்து உதடோடு உதடு பொருந்த அழுத்தமான முத்தம் ஒன்றைக் கொடுத்தாள். சில்லுன்னு இருக்கா? என்று கேட்டாள். ம். இருக்கு ஆனா அந்த முத்தம் மாதிரி இல்லே என்றான். அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். மகாலட்சுமி என்றான், அது யாரு? என்னோட பெரியம்மா பொண்ணு என்றான். எவ்வளவு வயசு? யாருக்கு? அவளுக்கா? முப்பது முப்பத்தி அஞ்சு வயசு இருக்கும். எப்போ கொடுத்தா? போன வருஷம். கலியாணம் ஆயிருச்சா? ஓ, ஆனா குழந்தை இல்லே. அவ ஹஸ்பெண்டு? அவரு ஓசூர்லே இருக்காரு. சனி ஞாயிறுதான் வருவாரு. அவருக்கு இது தெரியுமா? தெரிஞ்சு போச்சு. அன்னிக்கி வெள்ளிக்கிழமே. ஆனா திடீர்னு வந்துட்டாரு. என்னையப் பாத்து பதினோரு மணிக்கு காலேஜு போகாம இங்கே எதுக்கு இருக்கடேய்ன்னு கேட்டாரு. சரி. அந்தக் கதை போறும் என்று அவன் கையை மறுபடியும் தேடி எடுத்துத் தன்  கையுடன் பிணைத்துக் கொண்டாள். உம் பேரென்னா என்று கேட்டான். ராணி என்றாள்  நல்ல பேரு. நான் ஆண்டி என்றான்.  ஒன்னோடதும் நல்ல பேருதான். ராஜா மாதிரி இருக்குறவனுக்கு ஆண்டின்னு பேர் வச்ச உங்க அம்மா பேரு மனோரமாவா என்று அவள் சிரித்தாள். யாரு அந்த ஜில் ஜில் ரமாமணியா? என்று கேட்டான். தொடர்ந்து உனக்குப் பத்மினியைப் 

பிடிக்குமா என்று கேட்டான். ஏன் அதை விடக் கிழவி உனக்கு வேற யாரும் ஆம்பிடலையா? என்று கேட்டாள்  எங்க பெரியப்பாவுக்கு பத்மினியை ரொம்பப் பிடிக்கும். ஆமா அவருக்கு ஆன வயசுக்கு பத்மினியும் கண்ணாம்பாவுந்தான் கனவிலே வருவாங்க என்றாள். ஐயோ இவ்வளவு நேரம் ஆச்சு. அவளைக் காணலையே என்றான் திடீரென்று நினைவுக்கு வந்தவன் போல. அவ வீடு மல்லேஸ்வரத்திலேதானா என்று ராணி 

கேட்டாள் . அவன் ஆமென்று தலையை ஆட்டினான். அவ வீடு எங்க இருக்கு? பதினஞ்சாம் கிராஸிலே என்றான். சரி வா அங்கே போவோம் என்றாள். போகும் வழியில் அவ பேரென்ன என்று கேட்டாள். அவ என்றான். டேய் பேரைச் சொல்லுடா என்றாள் சற்றுக் கோபத்துடன். அதான் அவ பேரு. அவ. உங்க பக்கத்து வீட்டுலே இருக்காளா? இல்லே. அவ வீடு சிக்ஸ்த் மெயின். என்னோடது போர்த் மெயின். என் ஸ்கூல்ல படிச்சா. நல்ல அழகா? அவன் உடனே பதில் பேசாமல் நடப்பதை நிறுத்தி விட்டான். அவளும் நின்று என்ன என்பது போலப் பார்த்தாள். அவன் அவள் முகத்தைப் பார்த்தான். பார்வை கழுத்து, மார்பு, இடை, கால் என்று கீழிறங்கிப் பயணம் சென்றது. அவளைப் பார்த்து அவ அழகுதான். ஆனால் அவளை விட நீ அழகு என்றான். ஒன் மூஞ்சி என்றாள். பொய் சொல்

லாதே.இல்லே நிஜமாத்தான். உனக்குப் பாரு, உன் பல்வரிசை எவ்வளவு அழகா இருக்கு? அவ கிட்டே  பல்லவ ராஜ்ஜியத்தோட இளவரசி மாதிரி முன்பல் ரெண்டும் லேசா தூக்கியிருக்கும் என்றான். அதனாலென்ன,

ஆண்டிக்கு அவ்வளவு அழகு போறாதான்னு ராணி கேலி செய்தாள். அதை விடு. அவளோட பல்வரிசையினாலே எங்க ரெண்டு பேருக்கும் சண்டை வந்திருச்சு

என்றான். இதென்ன புதுக் கதையா இருக்கு? என்று கேட்டாள். போன வாரம் அவ வீட்டு மாடியிலே உக்காந்திருந்தோம். திடீர்னு என் மேலே பாய்ஞ்சு ரெண்டு கையாலையும் என்னோட முகத்தை இறுக்கப் பிடிச்சு முத்தம் கொடுத்தா. நான் திமிறினேன். அவ விடலை. அவ வாயை வச்சு அழுத்தமா முத்தம் கொடுத்ததாலே அவ முன் பல்லு என்னோட உதடைக் குத்தி எனக்கு ஒரே வலி. நான் திமிறி எழுந்து என்ன என் கிட்டேயே விளையாடுறியான்னு அவ வாய என் வாயாலே மூடி நல்லா கடிச்சு விட்டுட்டேன். அவ ஆய் ஊய்ன்னு கத்தி என்னைத் தள்ளி விட்டா. அவ வாயைத் துடைச்சிட்டு கையைப் பாத்தா. ரத்தம்.  நாயே இனிமே என் கூடப் பேசாதேன்னுட்டு கீழே இறங்கிப் போயிட்டா. நான் வேகமாக் கீழே போயி மன்னிச்சுக்கோ மன்னிச்சுக்கோ மன்னிச்சுக்கோன்னு அவ தாப்பா போட்டு மூடிண்டு உள்ளே இருந்த ரூம் வாசல்லே நின்னு கெஞ்சினேன். திறக்க மாட்டேன்னுட்டா. அதுக்கு அடுத்த ஒரு வாரமா தினம் அவளைப் பார்க்கணும்னுதான் ஓடிகிட்டு இருக்கேன். இன்னிக்கிப் பாத்துட்டேன். ஆனா இப்ப கண்ணுலே படலையே என்றான். சரி, வா அவ வீட்டுக்குத்

தானே போறோம் என்று இருவரும் நடந்தார்கள். பதினோராம் கிராஸ் மார்கெட்டைத் தாண்டும் போது அவன் அவளிடம் அந்தக் கடையிலே கூட்டத்தைப் பாத்தியா என்றான். ஆமா. ஒரே ஆம்பளைங்களா இருக்காங்களேன்னு ராணி சொன்னா. அங்க ஒரு பொம்பளை பழக் கடை வச்சிருக்கா. அவ எல்லாப் பழமும் வச்சிருப்பா.  ஆனா அவ  புடவை மார்லேயே நிக்காது.அங்க நிக்கறவங்க எல்லாம் அவ கிட்டே எனக்கு ரெண்டு கொய்யாப்பழம் வேணும், ரெண்டு கொய்யாப்பழம் வேணும்னு கேட்டுகிட்டே நிப்பாங்க. அவ வேறே எது வேணுமினாலும் கேளு. தாரேன். கொய்யாப்பழம் மட்டும் கேக்காதேன்னு சொல்லுவா. என்றான். அடச்சீ, இவ்வளவுதானா? முட்டாப்பசங்க. வா, நாம போகலாம் என்று அவள் மேலே நடந்தாள். சற்றுத் தொலைவு நடந்ததும் அவன் திடீரென்று அவள் கையை இழுத்து இடப்பக்கம் சென்ற சந்துக்குள் நுழைந்தான். அவள் அவனிடம் ஏன் என்ன ஆச்சு என்று கேட்டாள், அப்போது மெயின் ரோடில் அவர்கள் இருந்த இடத்தைக் கடந்து சென்ற ஒருவரைக் காண்பித்து எங்க இங்கிலீஷ் லெச்சரர்.சரவணா என்றான். யாரு சரவணா மாணிக்கவாசகமா என்று அவள் கேட்டாள். அவன் திகைப்படைந்து உனக்குத் தெரியுமா? எப்படி? என்று கேட்டான். உங்க கிளாஸ்லே படிக்கிற பொண்ணுங்க எனக்குச் சொல்லியிருக்காங்க என்றாள். ஆமா, ஆமா. அவருக்குப் பொம்பளைப் பிள்ளைங்கள்னா ரொம்பப் பிடிக்கும். அதுவும் வெளியூர்னா இன்னுமே ஜாஸ்தியாப் பிடிக்கும். திருச்சி, சிங்கப்பூரு, ஆஸ்திரேலி

யாலேர்ந்து படிக்கச் வராங்கள்லே அவங்களைத் தனியா கவனிப்பாரு. அதுங்களுக்கெல்லாம்  மார்க்கை அள்ளிப் போடுவாரு. பத்துப் பதினஞ்சு  பொம்பளைப் பிள்ளைங்களுக்கு ரேங்க் போட்டுட்டு ரெண்டு ஆம்பளை பசங்களுக்கும் ரேங்க் கொடுப்பாரு. நாளைக்குப் பேச்சு வந்திரக்கூடாதாம். கடி மன்னன். தமிழ்லே கடிக்கிறது போறாதுன்னு இங்கிலீஸ் க்ளாஸும் எடுத்துக் கடிப்பாரு. அவன் பேசிக் கொண்டே 

நடந்தான். பதினைந்தாம் கிராஸ் வந்து விட்டது. அவர்கள் திரும்புவதற்கு முன்னால் அந்த நேரத்திலும் ஒரு பஜ்ஜிக் கடையில் கூட்டம் நின்று வாழைக்கா பஜ்ஜி வெங்காய பஜ்ஜி மொளகா பஜ்ஜி என்று வாங்கித் தின்று கொண்டிருந்தார்கள்.  பஜ்ஜின்னா அவவுக்கும் ரொம்பப் பிடிக்கும். வாங்

கிட்டுப் போலாமா என்று அவன் ராணியிடம் கேட்டான். நீ ரொம்பப் பொல்லாதவன்டா என்றாள் ராணி. எதுக்கு? பத்துப் பதினஞ்சுரூபாயி

லேயே காதல் பரிசை வாங்கிக் கொடுக்கப் பாக்கறியே! சீ, நான் ஒண்ணும் அப்படியிலே. அவ வேணும்னு கேட்டா தாஜ்மகாலையே கட்டித் தருவேன் என்றான். அடேயப்பா! ஆண்டி கட்டிய தாஜ்மகால்! பேரு ரொம்ப நல்லா இருக்கு என்று சிரித்தாள். அவர்கள் பதினைந்தாம் கிராசில் இடப்பக்கம் திரும்பி, நான்காவது மெயினைத் தாண்டி நடந்தார்கள். ஊரில் வியாதி

களும் மனஸ்தாபங்களும் பெருக்கெடுத்து ஓடுகின்றன என்பதை நிரூபிக்கும் பெரிய வீட்டு வாசல்களில் டாக்டர்கள், வக்கீல்கள் என்று பெயர்ப் பலகைகள்

விம்மின. ஆறாவது மெயின் குறுக்கே ஓடிய இடத்தில் இடது புறம் பெரிய வீடு ஒன்று காணப்பட்டது. ஆண்டி திடீரென்று ராணியிடம் அதோ பாரு, அங்க நிக்கறா என்றான். அவள் அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் பார்த்தாள். எந்த யுவதியும் அங்கே காணப்படவில்லை. எங்கே இருக்கா? எனக்குக் கண்லே படலையே என்றாள் ராணி. நீ ஒரு பொட்டைக் கண்ணு, அதோ நிக்கறா பாரு மாடியிலே. சிவப்பு டிரஸ் போட்டுண்டு.  ஏய் அவ ஏய் அவ என்று தெருவிலிருந்தே கத்தினான். ராணி அவன் சொன்ன இடத்தில் பார்த்தாள். அங்கே ஆறேழு வயது மதிக்கத் தக்க சிறுமி ஒருத்தி சிவப்புக் கலர் பாவாடை சட்டையுடன் நின்று 

கொண்டிருந்தாள். 


—————————————————-                

Series Navigation2023 ஆம் ஆண்டு, சித்திரை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 148) சன்மானம்
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *