Posted in

15 வது குறும்பட விருது விழா

This entry is part 8 of 9 in the series 7 மே 2023

15 வது குறும்பட விருது விழா

  ஞாயிறன்று திருப்பூரில் நடைபெற்ற 15 வது குறும்பட விருது விழாவில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த குறும்பட, ஆவணப்பட இயக்குனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மக்கள் மாமன்றத் தலைவர் சி. சுப்ரமணியன் தலைமைதாங்கினார்.  

 திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் தலைவர் கே பி கே செல்வராஜ் விருதுகளை அளித்து சிறப்புரை ஆற்றும் போது “ இன்றைய இளைஞர்களின் கலை வெளிப்பாட்டின் முக்கிய அம்சமாக  குறும்படங்கள் அமைந்துள்ளன. திரைப்பட முயற்சிகளுக்குச் செல்லவும் நுழைவாயிலாக சிலருக்கு அமைகின்றன. இலக்கியப் படைப்புகளை எடுத்துக் கொண்டு குறும்படங்களாகவும்., திரைப்படங்களாகவும் மாற்றும் ரச வித்தையில்  தேர்ச்சி கண்டவர்கள் பலர்  வெற்றி பெறுகிறார்கள். அதற்கு இலக்கிய வாசிப்பு என்பது மிகவும் அவசியமாகிறது “ என்றார்.

” ஆவணப்படங்களும் குறும்படங்களும் சந்திக்கும் புள்ளி  “ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்க நிழ்ச்சியில் விருது பெற்ற ஆவணப்பட இயக்குனர் கோவை மயன், குறும்பட இயக்குனர் தாரபுரம் புகழ் , மேட்டுப்பாளையம் ஓவியர்  தூரிகை சின்னராஜ், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆகியோர் பங்கேற்று

 “ ஆவணப்படங்களின் நிஜத்தன்மையும், குறும்படங்களின் புனைவுத்தன்மையும் கொண்ட படைப்புலகம் தேவையாக இருக்கிறது ”  என்ற கருத்துக்களை முன்வைத்தனர்.

குறும்பட விருதுகளை புகழ், கிளமண்ட் விக்டர், திருமூர்த்தி, பெ. மணிவண்ணன்,மோகன் பிரசாத்  உட்பட 8 பேர் பெற்றனர். ஆவணப் படத்திற்கான விருது மயன் அவர்களுக்கு வழங்கப்பட்டது கொங்கு பகுதியைச் சார்ந்த 8 நாடகக் கலைஞர்களுக்கு பாராட்டு நடைபெற்றது.

·         நூல் வெளியீடு :

·         கனவு சிறுகதைகள் ·         ( தொகுப்பு சுப்ரபாரதிமணியன், ரவி – ரூ440 / 52 சிறுகதைகள். கனவு இதழில் 37 ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் )

நூலை           ஆவணப்பட இயக்குனர் கோவை மயன் வெளியிட , குறும்பட, மேட்டுப்பாளையம் ஓவியர்  தூரிகை சின்னராஜ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

. விழா ஒருங்கிணைப்பை நாதன் ரகுநாதன், மாரிமுத்து செய்திருந்தனர்.

நாதன் ரகுநாதன் விழாவை ஒருங்கிணைத்திருந்தார்.மாரிமுத்து நன்றி கூறினார்.

30/4/23, காலை 10 மணி

மக்கள் மாமன்ற  நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் நடைபெற்றது.

Series Navigationநாவல்  தினை              அத்தியாயம் பதிமூன்று      பொது யுகம் 300செருப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *