செருப்பு

This entry is part 9 of 9 in the series 7 மே 2023

அவளைத் தேடி வந்த சுகந்தி “ஏன் என்னமோ போல இருக்கீங்க?” என்று வசந்தாவிடம் கேட்டாள். “இல்லியே. ஐம் கொயட் ஆல்ரைட்” என்று சிரித்தாள். உண்மையை மறைக்க வல்ல சிரிப்பைத் தான் சிந்தவில்லை என்று அவளுக்குத் தோன்றியதை மறைக்கும் வண்ணம் “கலியாணம்னு கேள்விப் பட்டேன். கங்கிராட்ஸ்” என்றாள்.  சுகந்தி “அதுக்குத்தான் வந்தேன்” என்றபடி கைப்பையைத் திறந்து மஞ்சள் குங்குமம் தடவிய ஒரு கவரை எடுத்து “மேரேஜுக்கு அவசியம் நீங்க வரணும்”  என்று சொல்லிக் கொடுத்தாள்.  “நிச்சயமா” என்று அவளுடன் கைகுலுக்கி விட்டு “என்னிக்கு?” என்றபடி பத்திரிக்கையைப் பிரித்தாள் “அடுத்த மாசம் ஆறாந் தேதி. […]

15 வது குறும்பட விருது விழா

This entry is part 8 of 9 in the series 7 மே 2023

15 வது குறும்பட விருது விழா   ஞாயிறன்று திருப்பூரில் நடைபெற்ற 15 வது குறும்பட விருது விழாவில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த குறும்பட, ஆவணப்பட இயக்குனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மக்கள் மாமன்றத் தலைவர் சி. சுப்ரமணியன் தலைமைதாங்கினார்.    திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் தலைவர் கே பி கே செல்வராஜ் விருதுகளை அளித்து சிறப்புரை ஆற்றும் போது “ இன்றைய இளைஞர்களின் கலை வெளிப்பாட்டின் முக்கிய அம்சமாக  குறும்படங்கள் அமைந்துள்ளன. திரைப்பட முயற்சிகளுக்குச் செல்லவும் நுழைவாயிலாக […]

நாவல்  தினை              அத்தியாயம் பதிமூன்று      பொது யுகம் 300

This entry is part 7 of 9 in the series 7 மே 2023

   விழித்தெழுந்த பொழுதில் நகர வேண்டியவை பறக்கத் தொடங்கின.  எங்கணும் பறவைக் கூச்சல். மருத்துவர் நீலனின் குடிலில் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது.  குடில் என்று ஒரு பழக்கத்தால் தான் குறிப்பிடுவது என்று அந்தக்   கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாலே புரியும். இரண்டு தளங்கள் செங்கல் கூரை மூடியும் வானம் பார்த்த மச்சுமாக வீட்டுடமையாளரின் செழிப்பைச் சொல்வதாக அந்த இல்லம் திகழ்ந்தது.  கீழ்த்தளத்தில் சஞ்சீவி மலையைச் சுமந்து கம்பீரமாகப் பறக்கும் அனுமனின் வண்ணப்படம் சுவரை நிறைத்திருந்தது. அந்த […]

கணம் 

This entry is part 6 of 9 in the series 7 மே 2023

ஆர் வத்ஸலா ஒவ்வொரு முறை அவன் நினைவு வரும் போதும் என்னை நானே அடித்துக் கொண்டு நினைவூட்டிக் கொள்கிறேன் அவனுக்கு நான் வேண்டாம் என்பதை “எப்படியடி கொள்ளி வைக்க முடிந்தது அவனால்  பல்லாண்டு அன்புக்கு ஒரு கணத்தில்?” என கேட்கிறது மனம் வயிறு எரிய சபிக்கிறேன் அவனை இதயம் தூங்கும் ஒரு கணத்தில் பின் துணுக்குற்று வேண்டுகிறேன் தெய்வத்தை என் சாபம் பலிக்காமல் போகட்டுமென

இந்த கணம்

This entry is part 5 of 9 in the series 7 மே 2023

இந்த கணம் ஆர் வத்ஸலா இந்த கணம் உனக்குத் தேவை எனதன்பு என் ஆதரவை பறைசாற்றும் சொற்கள் வழங்குகிறேன் அவற்றை நேற்று உன்னிடம் பெற்ற அதே உதாசீனம் நாளை நீ நிமிர்ந்த உடன் பெறுவேன் என்று அறிந்திருந்தும் நம்மிடையே சமுதாயம்  ஏற்படுத்திய கட்டாய உறவு காரணமாக  அல்ல தெருவில் போகும் ஒரு  பரிச்சயமற்றவனுக்கும் அதை செய்திருப்பேன் என்பதால்

அந்த கணம்

This entry is part 4 of 9 in the series 7 மே 2023

ஆர். வத்ஸலா 1. நீயும் நானும் நடந்தோம் புல்நுனியில் நடனமாடிய பனித்துளியின் வண்ணங்களை வகைப்படுத்தி சுட்ட மணலில் கால் பாவாமல் கரங்கோர்த்து ஓடி மின்னல் ஒளியில்  குட்டிக் குட்டைகளை கண்டுபிடித்து  பாதம் தோய்த்து இன்னமும்  நாம் சேர்ந்துதான் நடக்கிறோம் ஆனால் லயம் வேறுபட்டு கரம் தீண்டுவது பாதை குறுகும்போது தான் இனி என்னால் முடியாது பின் நோக்கிச் செல்வேன் அப்பொழுதை சந்திக்க  சந்தித்து அதனை இல்லாமல் ஆக்கிட பின் நோக்கிச் செல்வேன் நம் உறவு நழுவிய அப்பொழுதை சந்திக்க […]

வளவதுரையனின் கண்ணாடிக்குமிழ்கள் கவிதை நூல் குறித்து…….   

This entry is part 3 of 9 in the series 7 மே 2023

எஸ்ஸார்சி வளவதுரையன் என்றும்  மரபுக்கவிதைகளின் உரைகல். அழகுப் புதுக்கவிதைகள்  சளைக்காமல் எழுதுபவர். புதினம் சிறுகதை கட்டுரை என இலக்கியப்பங்களிப்புச் செய்பவர். சங்கு இலக்கிய இதழின் ஆசிரியர். இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம் அமைப்பின் ஆணிவேர். கண்ணாடிக்குமிழ்கள் வளவதுரையனின் மற்றுமொரு புதுக்கவிதைத்தொகுப்பு. இதனை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 144 பக்கங்கள்.பதிப்பகத்தார் வளவதுரையன் பற்றித்தரும் குறிப்பு நிறைவாக வந்திருக்கிறது. கடலூர் கவிஞர் அன்பன் சிவா.  கவிஞர் அவருக்கு இப்புத்தகத்தைச் சமர்ப்பித்து இருக்கிறார். என்னுரையில்  வளவதுரையன் கம்பனின்  ‘ நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப்பின்னைப்போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் […]

சூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது ?

This entry is part 1 of 9 in the series 7 மே 2023

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா Looking at the  Water Planet Earth from the Moon http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h3kB0Z4HdSo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ye8bROSSq2g http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hahpE8b6fDI http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WGTBJHFNywI http://www.space.com/14908-moon-evolved-video-guided-tour.html http://www.space.com/14442-grail-mission-snaps-side-moon.html ********************* பொங்கிவரும் பெருநிலவைப்புலவர் புனைந்தார் !மங்கிப் போனகரு முகத்தில் தடம் வைத்தார் !முழு நிலவுக்குத்தங்க முலாம் பூசுவதுவெங்கதிர்ப் பரிதி  !கடல் அலை எழுப்பும் நிலவு !அச்சின்றி நகர்வது !அங்கிங் கெனாதபடிஎங்கும்முகப் பருக்கள் ! பெருங்குழிகள் !சுற்றியும் சுழலாத பம்பரம் !ஒருமுகம் காட்டும் !மறுமுகம் மறைக்கும் !நிலவில்லை யென்றால்முடங்கி […]

எனக்கென்ன?

This entry is part 2 of 9 in the series 7 மே 2023

கோவிந்த் பகவான் இன்றோடு முப்பத்தெட்டு நாள் முக்கால் பொழுது மூன்று மணி நேரம் கழிகிறது இதற்குள் இப்படியெல்லாம் நான் மாறி  இருந்திருக்கக்கூடாது மாற்றியும் இருந்திருக்கக் கூடாது கட்டுப்படாத வார்த்தைகளல்லாத வார்த்தைகளை ஒரு பெருமழைப்போல் நள்ளிரவிலும் உன்மேல் தூவி இருந்திருக்கக்கூடாது தான் மாறாக ஓர் அழுத்தும் பொத்தான் கைக்குடையை உடன் அளித்திருக்கலாம் ஐபிஎல் 2023-ன் இன்றைய கிரிக்கெட் போட்டியில் யார் வென்றால் எனக்கென்ன? உனக்கென்ன? நமக்கென்ன? பேச்சை வளர்க்க சாரமில்லாத ஏதோவொன்றைப் பற்ற அவசியம் என்ன வேண்டி இருக்கிறது? […]