கோவிந்த் பகவான்
அவன் ஒரு விசித்திரன்
எப்போதும் உடனிருப்பவன்
உடன் சாப்பிடுபவன்
உடன் உறங்குபவன்
உடன் கனவு காண்பவன்
உடன் சிறுநீர் கழிப்பவன்
உடன் தேநீர் அருந்துபவன்
உடன் சண்டையிடுபவன்
தனிமையைப் பழக்கி
தன் இன்பத்தை அறிமுகப்படுத்தியவன்
உச்ச பேரானந்தம் கையளித்து
வெறுப்பை அவன் பெற்றவன்
ஓய்ந்து உறங்கியெழுந்த ஒரு சாம்பல் அதிகாலையில்
உடனில்லாத அவனை
சுற்றும் முற்றும் அதிர்ச்சியில் தேடியலைந்தேன்
நிசப்தம் நிரம்பிய
தூரத்துக் குன்றின் மீதமர்ந்து பெயர் தெரியாத இசைக்கருவி ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தான்
மீண்டும் எனதுடல் இன்பம் கிளர்ந்து
சிலிர்த்தடங்கியது.
-கோவிந்த் பகவான்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ்
- நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்
- பாவண்ணனின் நயனக்கொள்ளை
- சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள்
- உனக்குள் உறங்கும் இரவு
- யாதுமாகி
- அவனை அடைதல்
- வேவு
- யாக்கை
- புத்தகக் கொள்ளையும், பாலஸ்தீனக்குழந்தைகளும்
- நாவல் தினை அத்தியாயம் பதினாறு CE 300
- வீட்டுச் சிறை
- இடம்
- காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு – ஜூன் 8, 2023