காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு – ஜூன் 8, 2023

This entry is part 14 of 14 in the series 28 மே 2023

காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு – ஜூன் 8, 2023 கனக்டிகட் மானிலம் Milford நகரில் காலச்சுவடு இதழ் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணனுடன் ஒரு சந்திப்புநிகழவுள்ளது.  நாள் – ஜூன் 8, 2023 நேரம் – மாலை 6 மணி இடம் மற்றும் இதர விபரங்களுக்கு  Editor@thinnai.com மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 

இடம்

This entry is part 13 of 14 in the series 28 மே 2023

ஆர் வத்ஸலா சேர்த்து வைத்திருக்கிறேன் மூன்று வருடங்களாக தீபாவளிக்கு பொங்கலுக்கு உன் பிறந்த நாளுக்கு என் பிறந்த நாளுக்கு நமது மணநாளுக்கு எப்போதும் போல் நம்மிருவருக்கும் உடைகள் வாங்கித்  தனித் தனி பெட்டிகளில் அவை நிரம்புவதற்குள் வந்து விடுவாய்  நீ எனக்குத் தெரியும்  நிரம்பாவிட்டாலும்… சொல்லி விடுகிறேன் இப்போதே.. முடிந்து வைத்துக் கொள் வீர வணக்கம் செலுத்திய பின்  உன் தேகத்திலிருந்த உரித்தெடுக்கப் பட்ட உன் சீருடைக்கு இவற்றில் இடமில்லை

வீட்டுச் சிறை

This entry is part 12 of 14 in the series 28 மே 2023

ஆர் வத்ஸலா வீட்டினுள் கைது கதவில் பூட்டில்லை கையில் விலங்கில்லை துப்பாக்கியுடன் யாருமில்லை பார்க்கப் போனால் “வீட்டை விட்டுப் போடீ” என ஓங்கும் அதிகாரக் குரல் காதில் அவ்வப்பொழுது நிசப்தத்தை கிழித்துக் கொண்டு ஆசைதான் ஆனால் தூக்கம் கலைந்து ஓலமிடத்‌ தயாராகும் சிசு  மடியில்  பூவிலங்காய்

  நாவல்  தினை              அத்தியாயம் பதினாறு     CE 300

This entry is part 11 of 14 in the series 28 மே 2023

   குகை. குகைக்குள் இருந்து இடமும் வலமும் பாதை பிரிந்து இன்னும் இரண்டு குகைகள். அவற்றில் ஒன்றில் பிரவேசிக்க தண்ணீர் குகையின் கூரையில் இருந்து சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கிறது. இந்தக் குகையைக் கடந்தால் அந்தகாரம் தான்.  இருள் பிரபஞ்ச இருள்பொதியோடு இணைந்து பிசையப்பட்டுத் தனிமை இழக்கக் கூடும். இடது பக்கம் பாதை  பிரியும் குகைக்கு மேலே சிறு பாறை நகர்வு வழியே மறையும் சூரிய வெளிச்சம் ஒரு கம்பித் தாரையாக உள்நுழைந்து கீழே   கசிந்து […]

புத்தகக் கொள்ளையும்,  பாலஸ்தீனக்குழந்தைகளும்

This entry is part 10 of 14 in the series 28 மே 2023

சுப்ரபாரதிமணியன் பாலஸ்தீனத்து பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் நடமாட்டம்…..  அவர்களின் கைகளில் இருக்கும் துப்பாக்கிகளையும் பார்வையையும் கண்டு பயந்து மக்கள் ஒளிந்து கொள்கிறார்கள். வீட்டுக்  கோழிகள் கூட அங்கிருக்கும் ஆலிவ்  மரங்களில் ஏறி கை தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றன. ஆலீவ்மரத்து கிளை துணுக்கு  ஒன்றை ஒரு சிறுவன் ஒரு  இஸ்ரேல் ராணுவ வீரனுக்கு பரிசு போல் தருகிறான். தூரமிருந்து பயத்துடன் வேடிக்கை பார்க்கும் அவன் அம்மாவின் கையில் வெங்காயம் இருக்கிறது. ஏதாவது கண்ணீர் புகை வீச்சு இருந்தால் உடனடியாக […]

யாக்கை

This entry is part 9 of 14 in the series 28 மே 2023

ராமலக்ஷ்மி வெறித்து நிற்கிறாள் போதை இறங்காது வீழ்ந்து கிடப்பவனை. எக்கவலையுமற்றவன் தருந்துயரும் தனியொருவளாய்த் தாங்கும்  அன்றாடத்தின் பாரமும்  அழுத்துகிறது  உள்ளத்தையும்  உடலையும். ஒவ்வொரு உறுப்பும் ஓய்வு கேட்டுக் கெஞ்ச எண்ணிப் பார்க்கிறாள் கடிகாரத்தின் முகத்திற்கும், அதன்  நொடி நிமிட மணிக் கைகளுக்கும், நாற்காலியின் முதுகிற்கும் நாளெல்லாம் நிற்கும் மேசையின் கால்களுக்கும் ஒருபோதும் சோர்வு ஏற்படாததை. வீசும் காற்றில் ஓசை எழுப்பும் மணிகளின் நாக்குகளுக்கு இருக்கிறது சுதந்திரம்  நினைப்பதை அரற்றிட. விம்மிச் சிவக்காத மூக்குடன் கூஜாவும் நெரிக்கப்படாத கழுத்துடன் […]

வேவு

This entry is part 8 of 14 in the series 28 மே 2023

ஸிந்துஜா  அம்புஜம் பஸ்ஸிலிருந்து இறங்கிக் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். ஒன்பதரை அடிக்க இன்னும் பத்து நிமிஷம் இருந்தது. வீட்டை விட்டுக்  கிளம்பும் போது அன்று நிச்சயம் பஸ் கிடைக்காது. ஒன்று தாமதமாகப் போய்த் திட்டு வாங்க வேண்டும் அல்லது ஆட்டோவுக்குத்  தண்டம் அழுது போக வேண்டும் என்று நினைத்துதான் விறுவிறுவென்று பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தாள். காலில் போட்டிருந்த செருப்பு பல விழுப்புண்களைக் கொண்டிருந்ததால் ரொம்பவும் வேகமாகவும் நடக்க முடியவில்லை. ஆனால் அன்று கடவுளுக்கு அவள் மீது பிரியம் வந்திருக்க வேண்டும். சற்றுத் […]

அவனை அடைதல்

This entry is part 7 of 14 in the series 28 மே 2023

கோவிந்த் பகவான் அவன் ஒரு விசித்திரன் எப்போதும் உடனிருப்பவன் உடன் சாப்பிடுபவன் உடன் உறங்குபவன் உடன் கனவு காண்பவன் உடன் சிறுநீர் கழிப்பவன் உடன் தேநீர் அருந்துபவன் உடன்‌ சண்டையிடுபவன் தனிமையைப் பழக்கி தன் இன்பத்தை அறிமுகப்படுத்தியவன் உச்ச பேரானந்தம் கையளித்து  வெறுப்பை அவன் பெற்றவன்  ஓய்ந்து உறங்கியெழுந்த ஒரு சாம்பல் அதிகாலையில் உடனில்லாத அவனை சுற்றும் முற்றும் அதிர்ச்சியில் தேடியலைந்தேன் நிசப்தம் நிரம்பிய தூரத்துக் குன்றின் மீதமர்ந்து பெயர் தெரியாத இசைக்கருவி ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தான் மீண்டும் […]

யாதுமாகி

This entry is part 6 of 14 in the series 28 மே 2023

கோவிந்த் பகவான் ஒருக்களித்து காம்புகள் தெரிய உறங்கும் இணை இணையாத இளம் வீதி நாயின் கனவினைப்போல் விரிகிறாய் துருவேறி செதிலுதிர்க்கும்  குளியலறை ஜன்னல் கம்பிகளின் மீது படர்ந்த  அணில்கொடியின் சொரசொரப்பாய் படர்கிறாய் நான்கு வழிச் சாலையில் குருதி வழிய துடித்துப் புலம்பும் விபத்தின் உயிர் நோக்கி விரையும் அவசர ஊர்தியின் சைரன் ஒலியாய் அலறுகிறாய் அகன்ற வாயுடைய சமையலறை குண்டானுக்குள் துண்டு துண்டாய் வெந்து கொதிக்கும் மாமிசத்தின்  வீச்சமாய் வீசுகிறாய்  போதாது மூங்கில் கொம்புகளால் வேயப்பட்ட பாடையில் […]

உனக்குள் உறங்கும் இரவு

This entry is part 5 of 14 in the series 28 மே 2023

கோவிந்த் பகவான் உனக்குள் உறங்கும் இரவு எலுமிச்சைச் சாறு பிழியும் கருவியைப்போல் பிழிந்தெடுக்கிற இந்த இரவு துயர் மிகுந்த நம் நினைவுகளை கசியவிடுகிறது புளிப்பேறிய சுவைடர்ந்த அவை தலைக்கேறி தள்ளாடச் செய்கின்றன அடுக்களை டப்பாவில் அடைக்கப்பட்ட மீத நினைவுகளையும் சில தேக்கரண்டி அள்ளிக் கலக்கி ஒரே மிடறில் சுவைக்கத்தொடங்கியதும் இந்த இரவு எனக்குள் ஊறி உறங்குகிறது.      -கோவிந்த் பகவான்