ஆர் வத்ஸலா
நீ இல்லாமல்
நான் படும் பாட்டை
கவிதையாக வடித்து
என்னை வதைக்கும்
தாபத்தை தீர்க்க முயன்றேன்
தாபத்தின் அனல் என்னவோ குறையவில்லை
மேலதிகமாக
அந்த ‘நீ’
யாராக இருக்கும் என்று என் முகத்தை பார்த்து அனுமானிக்க முயற்சிக்கும் சிலரும்
அதை பற்றி வம்பு பேசி மகிழும் சிலரும்
பொறுக்காமல்
என்னிடம் ரகசியமாக
கேட்டே விடும் சிலருமாக
எனது நட்புலகம் சிறுத்துக் கொண்டிருக்கிறது
தினம் தினம்
- அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்
- நட்பு 1
- முதியோர் இல்லம் கட்டுரைத் தொடருக்கு என் வாழ்த்துகள்
- நட்பு 2
- ஹிரோஷிமா, நாகசாக்கி அழிவு நாட்கள் நினைவு தினம்
- இந்தியா ஏவிய சந்திரயான் -3 விண்சிமிழ் தற்போதைய பயணக் குறிப்பிடம்
- துயர் பகிர்வோம்: ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன்
- நாவல் தினை அத்தியாயம் இருபத்தாறு