ஆர் வத்ஸலா
‘சடசட’ வென்று பெய்து நிற்கிறது கோடை மழை
பால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
வெளிச் சுவற்றில் பட்டு
கைமேல் தெறிக்கும்
தண்துளி சுடுகிறது
சிறு வயதில்
பின் கட்டில் இருக்கும் அம்மாவுக்குத் தெரியாமல்
முற்ற மழையில் தலை நனைத்து
அம்மா வருவதற்குள்
அண்ணனும் நானும்
ஒருவர் தலையை மற்றவர் துவட்டி விட்டு
சாதுவாக
அம்மா தரும் சுக்கு கஷாயத்தை
குடித்த ஞாபகத்தில்
எரிகிறது
தொண்டை
எரிகிறது
மனம்
கைபேசியில் கூட
பிறந்த நாள் வாழ்த்து கூறாத அண்ணனை எண்ணி
அறிவுஜீவி அண்ணனுக்கு
இதிலெல்லாம் நம்பிக்கையில்லையென
கணவனிடம் சாக்குச் சொன்னாலும்