ஆழ்வார்கள் கண்ட அரன்

               

  இந்து மதத்தின் இரு கண்களாக விளங்குவது

1)சைவம் 2) வைணவம். சைவ சமயத்தைத் தேவாரம் பாடிய மூவ ரோடு மணிவாசகரும் வைணவத்தைப் பன்னிரு ஆழ்வார்களும் போற்றிப் புகழ்ந்து வளர்த்தார்கள். இறைவனிடம் (திருமால்) ஆழங்கால் பட்டவர்கள் ஆழ்வார்கள் ஆனார்கள். தங்கள் பாசுரங் களில் திருமாலையும் அவன் எடுத்த பத்து அவதாரங்களையும், சிறப்பாக ராம, கிருஷ்ண, வாமன, நரசிம்ம அவதாரங்களையும்

பாடிப் பரவினார்கள்.ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்கள் தொகுக்கப்பட்டு நாலாயிர திவ்யப்பிரபந்தம் என வழங்கப் பெறு கிறது.

        இப்பாசுரங்களில் பிரமனையும், சிவனையும்

பற்றிப் பாடியிருக்கிறார்கள். அவற்றை கூர்ந்து கவனிக்கும் நமக்கு வியப்பு ஏற்படுகிறது.சிவனுக்குத்தான் எத்தனையெத்தனை

அடைமொழிகள்! இத்தனை நாமங்களா? விஷ்ண ஸஹஸ்ர நாமம் வட மொழியில் இருப்பது போல் தூய தமிழில் சிவனுக் கும் ஒரு சஹஸ்ர நாமம் பாடி விடலாம் என்று தோன்றுகிறது.

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் 

            திரு நாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டலாம்

பன்னிரு ஆழ்வார்கள் கண்ட அரனை நாமும் காண முயல்வோம்

                   1. பெரியாழ்வார்

    திருமாலுக்கே பல்லாண்டு பாடிய பெரிய ஆழ்வார் இவர்! தன்னை யசோதையாகவும் வில்லிப்புத்தூரை

ஆய்ப்பாடியாகவும் பாவித்து கண்ணனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடி கண்ணனின் பால லீலைகளை அனுபவிக்கிறார்.

1விடையேறு காபாலி ஈசன்—–காளை வாகனனான சிவன்

  குழந்தை கண்ணன் தொட்டிலில்

தூங்குகிறான். கண்ணனைக்கண்டு அவனுக்குப் பரிசு வழங்க  சிவனும் மாதுளம்பூ இடயிடையேகோர்க்கப்பட்ட அரைவடமும் இடைச்சுரிகையும் பரிசாக அனுப்பியிருக்கிறா      

          உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ

  இடை விரவிக்கோத்த எழில் தெழ்கினோடு

  விடையேறு காபாலி ஈசன் விடு தந்தான்aa

  உடையாய் அழேல் அழேல்

  1ம் பத்து 4ம் திருமொழி  [தாலப் பருவம்] 45

என்று தாலாட்டுகிறார் பெரியாழ்வார்

2] இண்டைச் சடைமுடி ஈசன்

ஒரு சமயம் ஈசன்,பிரமனின் கர்வத்தை அடக்க எண்ணி அவன் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ள, அக்கபாலம் ஈசன் கையில் ஒட்டிக் கொள்ள, என்ன முயன்றும்

அதை விடுவிக்க முடியவில்லை. இப்பாவம் தீர சிவன் பிச்சை எடுக்க வேண்டும் என்று முனிவர்கள் பரிகாரம் சொல்ல சிவன் மண்டை ஓட்டில் பிச்சை எடுக்கலானார்.காலம் ஓடியதே தவிர பலன் இல்லை. ஒரு நாள் பத்ரிகாச்ரமம் சென்று நாராயணனை வணங்கி இரந்தவுடன் அப்பெருமான் பிச்சையிட பிரும்ம கபாலம் அகன்றது. இதை

கண்ட கடலும் மலையும் உலகோடு

முண்டத்துக்கு ஆற்றா முகில் வண்ணா! ஓ என்று

இண்டைச் சடைமுடி ஈசன் இரக் கொள்ள

மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ

[1ம் பத்து 9ம் திருமொழி] அச்சோப் பருவம் 105

என்று போற்றுகிறார்

3.ஈசன்—–சிவன்

              யசோதை(பெரியாழ்வார்) கண்ணனுக்குக் கண்ணேறு வராமல் காக்க காப்பிட நினக்கிறாள் மாலை நேரத் தில் அந்திக்காப்பிட கண்ணனை அழைத்து,அழகா! இந்த அந்தி நேரத்தில் இந்திரன் பிரமன் சிவன் முதலிய தேவர்கள் வேத மந்திரங்களை உச்சரித்த வண்ணம் மலர்களோடு மறைவாக நிற்கிறார்கள். அந்திக்காப்பிட கண்ணா வா என்கிறாள்

இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவரெல்லாம்

மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார்

அந்தியம் போது இதுவாகும் அழகனே! காப்பிட வாராய்

[2ம்பத்து]  ,[8ம் திருமொ சடையில்ழி].காப்பிடல் 192

என்று அழைத்துக் கண்ணேறு கழிக்கிறாள்

4.நீரேறு செஞ்சடை நீலகண்டன்——–கங்கயைச்சடையில் வைத்த

கருமையான கழுத்தை உடையவன்

                           ராம கிருஷ்ண அவதாரங்களில் ஈடுபாடு கொண்ட பெரியாழ்வார் தம்மை, ராம கிருஷ்ணனைத் தேடுபவ ராகவும் கண்டு கொண்டவராகவும் பாவித்துப் பாடுகிறார்

   நீரேறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால்

   சீரேறு வாசகஞ் செய்யநின்ற திருமாலை நாடுதிரேல்

   வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு

  தேரேற்றி சேனை நடுவுபோர் செய்யச் சிக்கெனக் கண்டாருளர்

[4ம்பத்து]  [முதல் திருமொழி]  332

கண்ணன், உருக்குமணிப் பிராட்டியைக் கவர்ந்து சென்றதைக்

குறிப்பிடுகிறார்

4.நலந்திகழ் சடையன்

கங்கைக் கரையிலுள்ள “திருக்கண்டங்கடி” என்னும் திவ்ய தேசத்தில் கோயில் கொண்டிருக்கும் புருஷோத்த மனைப் பாடுகிறார். திரிவிக்கிரமனாக உருக்கொண்டு உலகை அளந்த பொழுது பெருமானின் திருவடி பிரும்ம லோகம் வரை

செல்ல, பிரும்மா தனது கமண்டல நீரால் அத் திருவடியை அலம்ப அந்த நீரே கங்கையாய் சிவன் திருச் சடையில் தங்க.  அந்நீரில் சிவன் சடைமுடியிலிருந்த கொன்றை மலரும் நாரண னின் பாதத்திலிருந்த திருத்துழாயும் கலந்து பூமிக்கு வந்ததாம்

நலந்திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும்

நாரணன் பாதத்துழாயும்

கலந்திழி புனலால் புகர்படு கங்கைக் கணமென்னும்

  கடி நகரே.

[4ம்பத்து]  [7ம் திருமொழி]  392

 மும்மூர்த்திகளான பிரமன் திருமால், சிவன் ஆகியோரில் திரு

மால் சிவன் என இருவரின் அடி முடி சம்பந்தம் பெற்ற பெரு மையுடைய கங்கைக் கரையிலுள்ள கண்டமென்னும் கடிநகரைப் 

பாடியிருக்கிறார்.

6.சங்கரன்

          இருவரோடு மட்டுமல்ல மும்மூர்த்திகளோடும் தொடர்புடைய பெருமைபெற்றது கங்கை நதி என்பதை

சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளிற் சங்கரன்

சடையினில் தங்கி

கதிர்முக மணி கொண்டு இழிபுனல் கங்கைக்

கண்டமென்னும் கடி நகரே

[4 ம் பத்து ]  [7ம் திருமொழி] 393

7.ஒற்றை விடையன்—–காளை வாகனன்

                           தமது இறுதிக் காலத்தில் யமதூதர்களிட மிருந்து தன்னைக் காக்க வேண்டுமென்று அரங்கனிடம் விண் ணப்பம் செய்கிறார். பெருமானே! உலகுக்குக்கெல்லாம் காரண மானவனே. ஒருவராலும் உன்னை அறிய முடியாது. உலக மெங்கும் நீயே விரிந்து பரந்து விளங்குகிறாய்

ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியாப்

பெருமையோனே

முற்ற உலகெல்லாம் நீயேயாகி மூன்றழுத்தாய

                                            முதல்வனேயோ

அற்றது வாழ்நாள் இவர்க்கு என்றெண்ணி அஞ்ச நமன்

  தமர் பற்றலுற்ற

அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்

தரவணைப் பள்ளியானே!

[4ம் பத்து ]  [10ம் திருமொழி]  426 

8.எருத்துக் கொடியுடையான்——–தன் கொடியில்எருதைக் 

                                                   கொண்டிருப்பவன்

பிறவி எனும் நோய்க்கு மருந்து தேடும்

பெரியாழ்வார் அம்மருந்தை அறிந்தவர்கள் பெருமானைத் தவிர எவரும் இல்லை என்பதை உணர்ந்து திருமாலிருஞ்சோலைப் பெருமானிடம் சரணடைகிறார்.

  எருத்துக் கொடியுடையானும் பிரமனும் இந்திரனும்

மற்றும்

  ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு

மருந்தறிவாரும் இல்லை

  மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா! 

                                   மறு பிறவி தவிரத்

  திருத்தி உன் கோயில் கடைப்புகப் பெய்

  திருமாலிருஞ்சோலை எந்தாய்!

[5ம் பத்து ] [3ம் திருமொழி] 458

பிறவி நோய்க்கு மருந்தும் அவனே மருத்துவனும் அவனே என்று

வலியுறுத்துகிறார்

2. குலசேகர ஆழ்வார்

  இவர் சேர நாட்டை ஆண்ட மன்னர் பரம்பரையில் பிறந்தவர், என்றாலும் அரச போகங்களில் ஈடுபாடு

இல்லாமல் வாழ்ந்தவர். அரங்கனுக்கு ஆட்பட்டு அடியார்களின் பெருமையை உணர்ந்து அவர்களோடு சேர்ந்து அரங்கன் முற்றத் தில் ஆடிப்பாடி மகிழ விரும்பியவர்.

ராமாவதாரத்தில் ஆழ்ந்தவர்.

திருமலையில் ஏதானும் ஒருவகையில் தொடர்பு கொண்டு பெரு மானின் அருகிலேயே இருக்க எண்ணினார். பெருமாளின் கரு வறையில்குலசேகரப் படியாக விளங்குகிறார். இவர் அருளிச் செய்த பாசுரங்கள் “பெருமாள் திருமொழி என்று வழங்கப் படு கிறது. இவர் அரனைக் கண்ட விதத்தை பார்ப்போம்.

1.அரன்—-சிவன்

            அரங்கனுக்கு ஆட்பட்ட இந்த ஆழ்வார் பெருமானின் அருகில் சென்று அவன் திருமுக மண்டலத்தைக் கண்டுகளிக்க விரும்பி,

       அளிமலர் மேல் அயன் அரன், இந்திரனோடு ஏனை 

அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்

தெளிமதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தித்

திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்

களி மலர் சேர் பொழிலரங்கத்து உரகமேறிக்

கண் வளரும் கடல் வண்ணன் கமலக் கண்ணும்

ஒளி மதிசேர் திருமுகமும் கண்டு கொண்டு என்

உள்ள மிக என்றுகொலோ உருகும் நாளே?

[பெருமாள் திருமொழி]  [முதல் திருமொழி] 652

    அரங்கத்து அரவணைப் பள்ளியானைச் சேவிக்க எத்தனை யெத்தனை பேர்கள்? அயன், அரன், இந்திராதி

தேவர்கள், அரம்பையர்கள், முனிவர்கள் என்று பலரும் மலர் களைத் தூவியபடி செல்கிறார்கள்.அப்பெருமானைக் கிட்டி நின்று

உள்ளம் உருகி நிற்கும் பேறு எப்போது கிட்டும் என்று தவிக் கிறார்

2 பின்னிட்ட சடையான்.

திருமலையில் பெருமானோடு தொடர்

புடைய ஏதேனும் ஒரு பொருளாக இருந்தாலும் போதும் என்றும் 

தோன்றுகிறது இவருக்கு. ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்கிறார். 

        பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்

துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள் வாசல்

மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும் 

பொன்வட்டில் பிடித்துடனே புகப் பெறுவன் ஆவேனே

      [பெருமாள் திருமொழி]   [4ம் திருமொழி] 679

                      பூலோக வைகுண்டமான திருமலைக் கோயில் உள்ளே செல்லமுடியாமல் சடை முடியனான சிவனும் பிரமனும் இந்திரனும்  தவிக்கிறார்கள் குலசேகர ஆழ்வாரால் நுழைய முடி யுமா? திருவேங்கடமுடையான் வாய் நீர் உமிழும் தங்க வட்டி லைக் கைகளில் ஏந்திய வண்ணம் செல்லும் அடியவருடன் தானும் ஒரு வட்டிலை ஏந்தியபடி உள்ளே செல்ல விழைகிறார்.

3.பிறையேறு சடையான்——-பிறைச்சந்திரனைச் சடையில் வைத்தவன்

  பொன்வட்டில் ஏந்தும் பேறு கிடைக்கா விட்டால்?அதற்கும் ஒரு மாற்று வைத்திருக்கிறார் ஆழ்வார். வேங்கட மலைக்குத் தினமும் ஆயிரக் கணக்கில் மக்கள் தரி சனத்திற்காக வருவார்களே? அடியவர்கள் நடந்து செல்ல வசதி யாக ஒரு பாதையாக இருந்தால் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும், அடியவரின் தொடர்பும் கிட்டும் என்று நினைத்து

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்

முறையாய பெரு வேள்விக் குறை முடிப்பான்

மறையானான்

வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலை மேல்

நெறியாய்க் கிடக்கும் நிலையுடையன் ஆவேனே

        பெருமாள் திருமொழி]   [4ம் திருமொழி]  684

எந்த விதத்திலாவது பெருமானின் அருகாமயைப் பெறத்துடிக்கும் ஆழ்வாரின் மனோ நிலையைப் பார்க்கிறோம்

4.விடையோன்—-காளை வாகனன்

                                     இராமவதாரத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவராதலால், இராமன் வனம் சென்றதைக் கேட்ட தயரதன் புலம்பியதை பாட்டில் வடித் திருக்கிறார்

வா, போகு, இன்னம் வந்தொருகால்

கண்டு போ மலராள் கூந்தல்

வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா

விடையோன் தன் வில்லைச் செற்றாய்

நீ போக என்னெஞ்சம் இரு பிளவாய்ப் 

போகாதே நிற்குமாறே!

[பெருமாள் திருமொழி] [8ம் திருமொழி]  743                   

                          சீதையை மணப்பதற்காக விடையோனான சிவபெருமானின் வில்லை முறித்து அவளை மணந்தாய். நீ

வனம் போவதைக் கேட்டும் கண்டும் என் மனம் உடைந்து பிளந்து போகாமல் இருக்கிறதே என்று புலம்புகிறான் தயரதன்.

தயரதன் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆழ்வார்.

5.சின விடையோன்.—-சீற்றமுள்ள காளையை வாகனமாக

                                                  உடையவன்

    இராமாவதாரத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட இந்த ஆழ்வார் தில்லைச்  சித்ரகூடத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமானை இராமனாகவே கொண்டு இராமா வதார நிகழ்ச்சிகளைப் பாடுவதைக் கேட்போம்.

    செவ்வரிநற் கருநெடுங்கண் சீதைக்காகிச்

சினவிடையோன் சிலையிறுத்து மழுவாளேந்தி

    வெவ்வரிநற் சிலைவாங்கி வென்று கொண்டு

வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்

[பெருமாள் திருமொழி] [10ம் திருமொழி]  743

என்று சீதையின் கரம்பிடிப்பதற்காகச்சிவதனுசை முறித்ததையும் அயோத்தி வரும் வழியில் எதிர்ப்பட்ட பரசுராமனின் கர்வத்தை

அடக்கியதையும் விவரிக்கிறார்

=======================================================================

3.திருமழிசையாழ்வார்

சென்னைக்கு அருகிலுள்ள திருமழிசை என்னுமி டத்தில் அவதாரம் செய்ததால் திருமழிசையாழ்வார் என்று பெயர் பெற்றார். சிறிய வயதிலேயே யோகத்தில் ஈடுபட்டவர் நாராய ணனே அனைத்துக்கும் காரணமானவன் என்று உணர்ந்து கொண்டார்.

இவருடைய சீடரான கனிகண்ணனுக்கும் மன்ன னுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் கணிகண்ணனை நாட்டை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டான் மன்னன். இதையறிந்த ஆழ்வார்

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி

மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா—துணிவுடைய

செந்நாப் புலவனும் போகின்றான் நீயும் உன்றன்

பைநாகப் பாய் சுருட்டிக் கொள்”

என்றுபாட பெருமாளும் அகலகில்லேன் என்றுறையும் பிராட்டி யோடும் ஆதிசேடனோடும் புறப்பட்டு விட்டார்! காஞ்சி மாநகரம் இருண்டு பொலிவிழந்தது.

தவறை உணர்ந்த மன்னன் ஆழ்வாரை வேண்ட,

கண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி

மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும்—துணிவுடைய

செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயும் உன்றன்

பைநாகப்பாய் படுத்துக் கொள்

என்று வேண்ட பெருமானும் தன் பாம்புப் படுக்கையை விரித்து சயனித்தார்! சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற பெயரும் பெற்றார். இவர் பாடியதில் திருச்சந்த விருத்தமும் நான்முகன் திரு வந்தாதியும் மட்டுமே கிடைத்துள்ளன. திருச்சந்தவிருத்தம் அழ கான சந்தப்பாடல்களால் ஆனது.அவற்றில் அரனைப் பற்றிப் பார்ப்போம்.

                        [திருச்சந்த விருத்தம் 9]  760

1ஒன்றிரண்டு கண்ணினான்—–மூன்று கண்களையுடைய சிவன்

                                         (முக்கண்ணன்)

  திருமாலே தெய்வம் என்றுணர்ந்த

ஆழ்வார், பெருமானே! நீயே விஷ்ணு மூர்த்தியாகவும் பிரும்மா, சிவன் என்ற மூர்த்திகளாகவும் விளங்குகிறாய். சத்வ ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்களூம் நிறைந்த கால புருஷன் நீ.கடல் சூழ்ந்த பூமிக்குத் தலைவனும் நீயே. மூன்று விதமான அக்கினி களுக்கும் தலைவனான நீ பசுக்கூட்டங்களை மேய்ப்பவனாகவும் காப்பவனாகவும் விளங்கிகிறாய். மூன்று கண்களையுடைய சிவ னும் உன்னை உள்ளபடி அறிந்து தோத்திரம் செய்ய வல்லனோ?

        ஒன்றிரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்

ஒன்றிரண்டு காலமாகி வேலை ஞாலம் ஆயினாய்

ஒன்றிரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே!

ஒன்றிரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே

[திருச்சந்த விருத்தம் 7]  758

2.கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்—கொன்றை

                 மாலை அணிந்த சிவந்த சடையுடைய சிவன்

    சிவந்த சடையில் கொன்றை மாலை யணிந்த சிவனும் வணங்கும் படியான பெருமை உடையவனே!

கற்றறிந்தவர்களூம் யாகங்கள் செய்பவர்களும் வணங்கும் படி

யான தன்மை உன் ஒருவனுக்கே உரியது.

  தாதுலாவு கொன்றைமாலை துன்னு செஞ்சடைச் சிவன்

நீதியாய் வணங்குபாத! நின்மலா! நிலாயசீர்

    வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்

         நீதியால் வணங்கிகின்ற நீர்மை நின் கண் நின்றதே

                        [திருச்சந்த விருத்தம் 9]  760

3.புன்சடை கீறு திங்கள் வைத்தவன்—-

    செம்மேனியம்மானான சிவன் வெண்ணீறு அணிந்து சடாமகுடத்தில் பிறைச் சந்திரனை அணிந்தி

ருப்பவன். அப்பெருமான் கையிலிருந்து நீங்காத பிரும்ம கபாலத் தில் தன் மேனியில் ஊறிய குருதியால் நிறைத்தார் திருமால். கபாலம் நிறைந்ததும் சிவன் கையை விட்டு அகன்றது கபாலம்.

ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னையை மணந்த பெருமானே! அக்கபாலத்தை எப்படி உன் குருதியால் நிறைத்தாய் என்பதைச் சொல்ல வேண்டும் என்கிறார் ஆழ்வார்.

வேறிசைந்த செக்கர்மேனி நீறணிந்த புன்சடை

கீறு திங்கள் வைத்தவன், கைவைத்தவன் கபால் மிசை

ஊறு செய் குருதியால் நிறைத்த காரணந்தனை

ஏறு சென்றடர்ந்த ஈச! பேசு கூசமின்றியே!

[திருச்சந்த விருத்தம் 42]  793

4 முக்கணான்—-மூன்று கண்களையுடையவன்

        ஆயிரம் கைகளையுடைய வாணாசுரனோடு ஏற்பட்ட போரில் ஒரு சாபம் காரணமாக முக்கண்ணனான சிவன்

தன் சேனைகளோடும் காளியோடும் தோற்று ஓட நேரிட்டது. அப்

பொழுது உலக நாயகனான திருமால் வாணாசுரனுடைய ஆயிரம்

கைகளையும் வெட்டி வீழ்த்தினான். அப் பெருமான் காவிரிக் கரை யில் திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கிறான்.

மோடியோடு இலச்சையாய சாபமெய்தி முக்கணான்

கூடுசேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து

ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதிமால்

பீடு கோயில் கூடுநீர் அரங்கமென்ற பேரதே

  [திருச்சந்த விருத்தம் 53] 804

5.முண்டன் நீறன்

                 வாணாசுரன் தன் மகள் உஷைக்காக, சீற்றம் 

கொண்டு வந்ததைக் கண்ட திருமால் வாணாசுரனுடைய ஆயிரம்

தோள்களை வெட்டி வீழ்த்திய போது, நீறணிந்த முக்கண்ணனான

சிவனும் அவனுடைய குமாரர்களும் காளியும் அக்கினியும் ஓட

வாணாசுரனுக்கு இரங்கி இரண்டு தோள்களை அருள் செய்தவன்

காத்தல் கடவுளான திருமால். இதை

    வண்டுலாவு கோதை மாதர் காரணத்தால் வெகுண்டு

  இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்

    முண்ட நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிட

    கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம்மாயனே

            [திருவிருத்தம் 71] 822

6 மாது தங்கு கூறன்—–உமாதேவியை இடப்பாகத்தில்

                                      கொண்டவன்

மலர்மகளும் பூமகளும் எம்பெருமானு டைய தேவிகளாகவும் நாபீகமலத்தில் தோன்றிய பிரமன் மக னாகவும் விளங்குகிறார்கள். உமா தேவிக்கு இடப்பாகம் கொடுத்த சிவன் பிரமனின் குமாரன் என்று வேதம் சொல்கிறது

         போதில் மங்கை பூதலக் கிழத்தி தேவி அன்றியும்

போது தங்கு நான்முகன் மகன், அயன் மகன் சொல்லில்

மாது தங்கு கூறன், ஏறது ஊர்தி என்று வேதநூல்

ஓதுகின்றது உண்மை அல்லதில்லை மற்றுரைக்கிலே

[திருச்சந்த விருத்தம் 72]  825

7.நெற்றி பெற்ற கண்ணன்——-நெற்றியில் மூன்றாவது

                                  கண்ணுடையவன்               திருமாலைத் தவிர வேறு தெய்வம் பிறிதில்லை என்று நம்பும் ஆழ்வார் வேறு எந்த ஒரு பொருளைப் பற்றியும் நினப்பதே யில்லை.

      நெற்றியிலே மூன்றாவது கண்ணையுடைய முக் கண்ணனான சிவனும், பிரமனும் இந்திரனும் மற்றுமுள்ள வான வர்களும் தங்கள் தங்கள் பாணியில் வந்து வணங்கும் பெருமை யுடையவனே! வேதம் உன்னைப் பேசும் அளவு உயர்ந்தவனே! உன்

னைத்தவிர வேறு எதையும் நான் பெரிதாக நினைப்பதில்லை.

நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு

போதின்மேல்

நற்றவத்த நாதனோடு மற்றுமுள்ள வானவர்

கற்ற பெற்றியால் வணங்கு பாத! நாத! வேத! நின்

பற்றலால் ஓர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே

[திருச்சந்த விருத்தம் 87] 838

8.செஞ்சடைக் கறுத்த கண்டன்-சிவந்த சடையும் கறுத்த கழுத்தும்

உடையவன்

    இப்பாசுரத்தில் தன் மனதுக்கு உப தேசிக்கிறார்.ஏ மனமே! நான் சொல்வதைக் கேள். கங்கையைச் சடைமுடியில் தாங்கி, ஆலகால் விஷத்தால் கருமையான கழுத்தை உடைய நீலகண்டனான சிவன், பிரமன் கர்வத்தை அடக்க, பிரமனின் ஒரு தலையைக் கிள்ள, அத்தலை சிவன் கை   ஒட்டிக் கொண்டு விடுகிறது! என்ன செய்தும் அக்கபாலம் நீங்கு வதாயில்லை.

        சிவன் தன் துயர் தீர, திருமாலிடம் யாசகம் கேட்டவுடன் துழாயணிந்த திருமால் தன் மார்பிலிருந்து குருதியை வழங்க அக்கபாலம் அகன்றது. சிவன் துயர் தீர்த்த பெருமானின் அருளை நினைத்து வழிபடு 

    சலங்கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்தலைப்

    புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் கெட

    அலங்கல் மார்வின் வாசநீர் கொடுத்தவன் அடுத்த சீர்

    நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி

                                                  நெஞ்சமே!

                  [திருச்சந்த விருத்தம் 113]  

========================================================================

                   தொண்டரடிப்பொடியாழ்வார்

author

எஸ். ஜயலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *