Posted in

தகுதி 1

This entry is part 3 of 5 in the series 26 நவம்பர் 2023

ஆர் வத்ஸலா

வேண்டியவர்களுக்கு

கணினியில்

மின்னஞ்சல்

செய்து கொண்டு

அறித்திறன் பேசியில்

மற்றதை 

தன்னை

புகைப்படங்கள்

வீடியோ‌க்கள்

எடுத்துக் கொண்டு 

புலனக் குழுக்களில்

உள்ளூர் வெளியூர்

உறவுகளுடன்

நண்பர்களுடன்

குறுஞ்செய்திகளில்

(முகம் பார்க்காமலும் 

பார்த்தும்)

புலன அழைப்புகளில்

நட்பும் விரோதமும்

பாராட்டிக்

கொண்டு 

தேவைப்படும் பொழுது காதில் 

குட்டிக் கருவிகள் அணிந்து 

மற்றவரை தொந்தரவு செய்யாமல் 

இணைத்திரை ரசித்துக் கொண்டு

புது செயலி வரும் போதும் 

தெரிந்த செயலி

புது அவதாரத்தில்

தெரியாமல் போகும் போதும் 

பேரக் குழந்தைகளிடம்

பாடம் கற்றுக் 

கொண்டு 

இருக்கும் வரை

இருக்கிறது 

தகுதி

எனக்கு

இருக்க

எனக் கருதும் உலகம்

Series Navigationநாவல்  தினை         அத்தியாயம் நாற்பத்தொன்று  பொ.யு 5000தகுதி 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *