This entry is part 5 of 6 in the series 17 டிசம்பர் 2023

வளவ. துரையன்   

என் தோழனே!

நான் உன்னை

வானத்தை வில்லாக

வளைக்கச் சொல்லவில்லை.

மணலை மெல்லியதொரு

கயிறாகத் திரிக்கச்

கூறவில்லை.

என் கடைக்கண்ணிற்கு

மாமலையும் கடுகென்றாயே

அந்த மாமலையைத்

தோளில் தூக்கிச்

சுமக்குமாறு நான்

வற்புறுத்தவில்லை.

நான்

தானாக அழும்போது

ஆறுதலாய்ச் சாய

உன் தோளில்

கொஞ்சம் இடம் கொடு. 

உன் ஒற்றைவிரலால்

என்

கண்ணீரைத் துளியைத்

துடைத்துவிடு.

அதுவே போதும்

Series Navigationஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 8அறிதல்