ஆர் வத்ஸலா
தீர்மானங்கள் தாண்டாது
ஒரு நாள் கூட
எனத் தெரிந்தும்
செய்த நாட்கள்
போய் விட்டன
துரோகங்களுக்காக கொதித்த நாட்கள்
போய் விட்டன
நம்பிய கட்சியும்
தெரிந்த குட்டையில் ஊறியது தான் என்று ‘மைக்’கில் குரலோங்கிய
நாட்கள்
போய் விட்டன
அனுபவங்கள் கனக்கின்றன
அவற்றை
தூக்கி போட்டு
மிதித்து
மீண்டும் போராடும்
மன இளமை
தா
தாயே பராசக்தி!