ஹிந்தியில் : ஆலோக் தன்வா
தமிழில் : வசந்ததீபன்
_______________________________
ஒன்று
______________
வீட்டின் சங்கிலிகள்
எவ்வளவு அதிகமாக காணப்படுகின்றன ?
எப்போதும்
வீட்டிலிருந்து ஏதாவதொரு சிறுமி ஓடிப்போகிறாள்?
என்ன அந்த இரவின் நினைவு வந்து கொண்டிருக்கிறதா?
அது பழைய சினிமாக்களில் அடிக்கடி வந்து இருந்தது
எப்போதும் ஏதாவதொரு சிறுமி வீட்டிலிருந்து ஓடிப் போயிருந்தாளா?
மழைக் காலத்தினால் வீழ்ந்த அந்தக் கல் விளக்குத் தூண்
வெறுமனே கண்களின் அமைதியின்மை காட்டும் அதிகமாக
அதனின் ஒளியா?
மற்றும் அந்த அனைத்து பாடல்கள் வெள்ளித்திரையில்
பைத்தியக்காரத் தனம்
இன்று அவரவர் வீட்டில்
உண்மை வெளிப்பட்டது.
என்ன நீ இதை யோசித்து இருந்தாயா?
அந்த பாடல்கள் வெறுமனே
நடிக _ நடிகையருக்காக
எழுதப்பட்டது? என
மற்றும்
லைலாவின் அழிவான
அந்த ஆபத்தான நடிப்பு
அந்த மேடையால் உறுதியாக எழுப்பட்டிருந்தது
பார்வையாளரின் தனிப்பட்ட வாழ்வில் பரவிப் போயிருந்ததா?
இரண்டு
______________
நீயோ படித்துக் கேட்பாயா?
இல்லை
எப்போதும் அந்தக் கடிதம்
அதை ஓடுவதற்கு முன்பாக
உனது
அந்த மேஜை மேல் வைக்கப்பட்டது
நீயோ ஒளித்துவைப்பாயா?
முழு சுவற்றால்
அவனுடைய உரையாடலை…
திருடுவாயா?
அவனுடைய சீசா
அவனுடைய பாதரசம்
அவனுடைய கருங்காலி
அதனுடைய
ஏழு பாய்மரங்களுடைய படகு…
ஆனால்
எப்படி திருடுவாய்?
ஒரு பாகமாயிருந்த சிறுமியின் வயதது
இப்போதும்
போதுமானளவு மிஞ்சியிருக்க முடிகிறது
அவளுடைய துப்பட்டாவின் நகைச்சுவையில்.
அவளுடைய
மிச்சம் _ சொச்சம் பொருள்களை
எரித்துப் போடுவாயா?
அவளுடைய வருகையின்மையையும் எரித்துப் போடுவாயா?
அது ஒலித்துக் கொண்டிருக்கிறது அவளுடைய வருகையாக
ரெம்ப அதிக
குங்குமத்தைப் போல
கேசத்தில்.
மூன்று
__________
அவளை அழிப்பாயா?
ஒரு பாகமாயிருந்த சிறுமியை அழிப்பாயா?
அவளுடைய வீட்டை காற்றாலே
அங்கேயிருந்தும் அதை அழிப்பாயா?
அவளுடைய அந்த குழந்தைப்பருவம் இருக்கிறது உனக்குள்
அங்கேயிருந்தும்
நான் அறிகிறேன்
ஒட்டு மொத்தமான ஹிம்ஸை.
ஆனால் அவளின் ஓடிப் போனதின் விஷயம்
நினைவிலிருந்து போவதில்லை
பழைய காற்றாலைகள் போல.
அது எந்தவொரு முதலாவது சிறுமி இல்லை
அவள் ஓடிப்போய் இருக்கிறாள்
மற்றும் அவள் கடைசி சிறுமியாக இருக்கமாட்டாள்
இப்போதும் மற்றும் பையன்கள் இருப்பார்கள்
மற்றும் சிறுமிகள் இருப்பார்கள்
அவர்கள் ஓடிப் போவார்கள் மார்ச் மாதத்தில்.
சிறுமி ஓடிப் போகிறாள்
எப்படி?
பூக்கள் மறைகிறது போல
நட்சத்திரங்களில் மறைந்தன
நீச்சல் உடையில் ஓடின
நிரம்பி வழிந்து பூர்த்தியானது
ஜகர்மகர் ஸ்டேடியத்தில்.
நான்கு
__________
ஒரு சிறுமி ஓடுகிறாளானால்
இது எப்போதும் அவசியமானதாக இல்லை
என்று ஏதாவதொரு பையனும் ஓடிப் போகலாம்
இன்னும் பல வாழ்க்கை பிரசங்கங்கள் இருக்கின்றன
அவர்களோடு அதுபோக முடிந்து இருக்கிறது
கொஞ்சமும் செய்ய முடிந்து இருக்கிறது
வெறுமனே பிறப்பு தருவதில் தான் பெண்ணாக இருப்பதில்லை
உன்னுடைய அந்த டேங்க் போன்ற அடைப்பு மற்றும் பலம்
வீட்டிலிருந்து வெளியே
சிறுமிகள்
போதுமானதளவு
மாற்றமாகி இருக்கிறார்கள்
நான் உனக்கு
இந்த அனுமதி கொடுக்கமாட்டேன்
என்று நீ
அந்த சாத்தியத்தினையும் கடத்திவிடு
அவள் எங்கேயும் இருக்க முடிகிறது
விழ முடிகிறது
சிதற முடிகிறது
ஆனால் அவள் தானாக இணையலாம் அனைவருள்
தவறுகளும் தானாகவே செய்வாள்
எல்லாவற்றையும் கொஞ்சம் பார்ப்பாள் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை
தனது முடிவையும் பார்ப்பாள்
ஏதாவது இன்னொருவரின் மரணம்
இறப்பதில்லை
ஐந்து
___________
சிறுமி ஓடுகிறாள்
வெண் குதிரை மீது சவாரிபோல
பேராசை மற்றும் சூதாட்டத்தின்
இக் கரையும் அக்கரையும்
பழைய மணமகனிலிருந்து
எவ்வளவு தூசி எழுகிறது
நீ
அந்த
மனைவிகளை தனியாக வைத்து இருக்கிறாய்
வேசிகளிடமிருந்து
மற்றும் காதலிகளை தனியாக வைத்திருக்கிறாய்
மனைவிகளிடமிருந்து
எவ்வளவு திகிலடைந்திருக்கிறாய்
பெண் பயமற்று சுற்றி அலைகிற போது
தேடியபடி உனது தனித்தன்மை
ஒன்றாகியே
உடன் வேசிகளும் மனைவிகளும்
மற்றும் காதலிகளில்.
இப்போதோ அவள்
எங்கேயும் இருக்க முடிகிறது
அந்த எதிர்காலத்து தேசங்களில்
அங்கே அன்பு
ஒரு வேலையாக இருக்கும் முழுமையாக.
ஆறு
________
எத்தனை _ எத்தனை சிறுமிகள்
ஓடுகிறார்கள் மனதிற்குள்
உனது இரவு விரிப்புகள்
உனது டைரியில்
உண்மையாக ஓடிப் போன சிறுமிகளிடமிருந்து
அவர்களின் ஜனத்தொகை
ரெம்ப அதிகமாக இருக்கிறது.
என்ன உனக்காக
ஏதாவதொரு சிறுமி ஓடிப்போனாளா?
என்ன உனது இரவில்
ஒன்றும் சிவப்பு மொரம்கார சாலை இல்லையா?என்ன உனக்கு தாம்பத்யம் கொடுக்கப்பட்டு விட்டதா?
என்ன நீ அதை எடுத்துக் கொண்டாயா?
உனது சாமர்த்தியம்
உனது வலிமையால்?
நீ எடுத்துக்கொண்டாயா?
ஒரே முறையில்
ஒரு பெண்ணினுடையது முழுவதும் இரவுகள்
அவளுடைய அழிவிற்குப் பிறகும் இரவுகள் !
நீ அழவில்லை
பூமியின் மீது ஒருமுறையும்
ஏதாவதொரு
பெண்ணின் நெஞ்சோடு சேர்ந்து
இன்றைய இரவு மட்டும் நின்று போ
உன்னிடம் சொல்லவில்லை
எந்தவொரு பெண்…
இன்றைய இரவு மட்டும் நின்று போ
எத்தனை_ எத்தனை முறை சொன்னது எவ்வளவு பெண்கள் உலகம் முழுவதும்
சமுத்ரம் முழுவதும்
கதவுகள் வரை
ஓடிவந்தன அவைகள்
இன்றைய இரவு மட்டும் நின்று போ
மற்றும் உலகம் எப்போது வரை வாழும்?
இன்றிரவும் மட்டும் வாழும்.
ஹிந்தியில் : ஆலோக் தன்வா
தமிழில் : வசந்ததீபன்
அலோக் தன்வா
_______________________
பிறப்பு :
__________ 02, ஜூலை 1948
இடம் :
________ முங்கேர் , பீஹார்
சில முக்கிய படைப்புகள் :
_____________________________
(1) துனியா ரோஜ்பன்தீ ஹை
(2) ஜனதா கா ஆத்மி
(3) கோலி தாகோ போஸ்டர்
(4) கப்டே கே ஜூதே
(5) ப்ரூனாங் கீ பேட்டியாங் மற்றும் கவிதைகள் ருஷ்ய , ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
பெற்ற விருதுகள் :
_______________________
(1) போல் விருது ,
(2) நாகார்ஜுன் விருது ,
(3) ப்பிராக் கோராக்புரி விருது
(4) கிரிஜா மாதூர் விருது
(5) பவானி பிரஸாத் மிஸ்ரா நினைவு பரிசு.
- ஜெயபாரதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
- பார்வை
- நம்பிக்கை
- ஓடிப் போன பெண்கள்