This entry is part 3 of 4 in the series 28 ஜனவரி 2024

                                    வளவ. துரையன்

                       வெயிலில் நடந்து

வாடும்போதுதான்

நினைவுக்கு வருகிறது

தோட்டத்துச் செடிக்கு

நீர் ஊற்றாதது

நடும்போதே நான்

சொன்னேன்ல

தெனமும் வந்து

தண்ணி ஊத்தணும்னு

அம்மா கத்துவார்

ஆனால்

நம்பிக்கை இருக்கிறது

திட்டித் திட்டி எனக்குச்

சோறு போடுவதுபோல

அம்மா அதற்குத்

தண்ணீர் ஊற்றி இருப்பார்

நான் என்னை

நம்பியா வைத்தேன்

அம்மாவை நம்பித்தானே

அம்மா இல்லையா?

Series Navigationபார்வைஓடிப் போன பெண்கள்