பெங்காலியில் : சுனில் கங்கோபாத்யா
ஹிந்தியில் : ரண்ஜீத் ஸாஹா
தமிழில் : வசந்ததீபன்
(1) எழுதுவதும் எழுதியபடி வாழ்வதும்
____________________________________________
புத்தகங்கள் பயமுறுத்த தொடங்கியிருக்கின்றன இப்போது
நான்கரை ஆண்டுகளின் வயதில் தான் எழுத்துக்களின் அறிமுகம்
மற்றும் அதற்கு பிறகு கடவுளே……
தெரியவில்லை எத்தனை யுகமும் நித்தியமும் கழிந்து
அச்சடிக்கப்பட்டது எழுத்துக்களும்… எழுத்துக்களும் தான்
கண்களுக்கு முன்னால் முறைத்துப் பார்த்துக் கொண்டு ஆயிரம் _ ஆயிரம் பக்கங்கள்
மற்றும் எத்தனை படிக்கப்பட்டு இருக்கிறது
என்ன அதைவிட அதிகமாக எழுதப்பட்டும் இருக்கிறதா?
சில நினைவில்லை என்று எவ்வளவு வெள்ளைப் பக்கங்கள் ஆக்கப்பட்டு இருக்கின்றன கறுப்பு
மற்றும் எவ்வளவு பேர் பின்வாங்கி
திரும்பி இருந்தார்கள்
சுவாதிக்கு ( கவிஞரின் மனைவி ) இன்னொரு அலமாரி செய்யப்பட வேண்டியிருந்தது.
விளையாட்டுப் போக்கில் எழுதப்பட்டன எல்லாம் _எல்லாம்
காலபுருஷனை முழங்கை அடித்து_அடித்து எழுதியிருக்கிறேன் நான்
எனது இரண்டு _ மூன்று ஏழை மனிதர்களுக்கு எனது கனவுகளை சொல்வதென
எழுதி இருக்கிறேன் நான்
எனது வலி துன்புறுத்தும் நடு இரவுகளில் தூக்கம் கலைந்த பிறகும்
எழுதி இருக்கிறேன்
ஏற்றுக் கொள்
தலைமீது பூதம் சவாரி செய்கிறது
எண்ணிக்கையற்ற மக்கள் எப்போது ? கொண்டாட்டத்தில் திளைத்து, சிரித்து மற்றும் பாடி ஆடிக் கொண்டிருக்கிறார்களோ
அப்போதும் எழுதும் மேஜை மீது என்னையே அழுத்திக்கொண்டிருக்கிறேன் நான்
அனைத்து வயதில் , சிகரெட்டின் பஃப் இழுத்து _ இழுத்து சல்லடை ஆனது என்னுடைய நுரையீரல்கள்
கழுத்து வலித்தபடி இருக்கிறது ஒவ்வொரு நொடி…
நடுச் சாலையிலிருந்து ஓடிக் கொண்டிருக்கிறேன்
வார்த்தை அகராதிகளின் பக்கம்
பார்க்க முடியவில்லை மனைவியை, ஆகாயத்தின் பக்கம் வரை கிடைக்கவில்லை
இதனால் எங்கேயும்
பாவமோ ஏற்படவில்லை
என்ன இவ்வளவு எல்லா வருடங்கள் வீணாகப் போய் விட்டன
ஏன் பயமாக உணர்கிறது
சுயமாக எழுதப்பட்ட புத்தகங்களைப் பார்த்து _ பார்த்து?
ஏன் உனது பெயர் கேட்டபடி இருக்கிறாய்?
இவன் ஏதோ இன்னொரு மனிதன்_ அன்னிய மனிதன்
ஏன் இருக்கிறது நாலாபுறங்களில் நிலையற்ற தன்மையின் அப்படிப்பட்ட குளிரும் பனிக்கட்டி வாசனையும் |
பெங்காலியில் : சுனில் கங்கோபாத்யா
ஹிந்தியில் : ரண்ஜீத் ஸாஹா
தமிழில் : வசந்ததீபன்
சுனில் கங்கோபாத்யா
_________________________
பிறப்பு :
__________ . 07 செப்டம்பர் 1934
இறப்பு :
_____________ 23 அக்டோபர் 2012
பிறந்த இடம் : ஆம்கிராமம் , பரீத்புர் மாவட்டம் , வங்கதேசம்.
படைப்புகள் :
_______________. 200க்கு அதிகமான நூல்களின் எழுத்தாளர். இலக்கியத்தின் அத்துனை துறைகளிலும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.பிரசித்திப் பெற்ற கவிதை இதழான ” க்ருத்திவாசனின்” ஆசிரியர். ஆனந்த புரஸ்கார் ,
இந்திய அரசின் மூலம் தங்கத்தாமரை விருது , மேற்கு வங்க அரசு மூலம் வழங்கப்படும் பங்கிம் விருது , தில்லி சாஹித்ய அகாதமி விருது , சரஸ்வதி ஸம்மான் விருது ஆகியவைகளை பெற்றுள்ளார்.
- விந்தையிலும் விந்தை
- வாக்குமூலம்
- சிரிப்பு
- எழுதுவதும் எழுதியபடி வாழ்வதும்