ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்
தமிழில் : வசந்ததீபன்
___________
நதிகள் இருந்தன எமது வழியில்
அவைகள் மீண்டும்_ மீண்டும் கடப்பதற்கு இருந்தன.
ஒரு சூரியன் இருந்தது
அது மூழ்காமல் இருந்தது
எப்படி யோசித்து இருக்கிறாய் ?
அதற்குப் பிறகு…
நமக்கு என்ன நடக்கும் என்று.
ஒரு காடு இருந்தது
நவம்பரின் வெயிலில் குளித்து இருந்தது
கொஞ்சம் பூக்கள் இருந்தன
நாங்கள் அவற்றின் பெயர்கள் அறியாமல் இருந்தோம்.
ஒரு வயல் இருந்தது
நெல்லினுடையது
விளைந்து இருந்தது
அது கூரான அரிவாளின் தொடுதலால்
இருந்தது சந்தோஷமாக…
ஒரு நீலப்பறவை இருந்தது
நெல்லிக்காய் மரத்தின் வளைந்த கிளையிலிருந்து
இப்போது பறப்பதற்கு தயாராக…
நாங்கள் இருந்தோம்
விஷயங்களின் பழைய பொட்டலங்களை அவிழ்க்கிறோம்
எமது பசி மற்றும் களைப்பு மற்றும் தூக்கத்தோடு சண்டையிடுகிறோம்
தூசி இருந்தன தொடர்ச்சியாக பறந்தபடி இருந்தன
அவை எமது புன்னகையை மூடி மறைக்க முடியாமல் இருந்தன
ஆனால் எமது கூந்தல் நிச்சயம்
சணல் போல காட்சியளித்தபடி இருந்தது
குளிர் இருந்தது மலையின்…
எமது எலும்புகளில் இறங்கி இருந்தது
விளக்கு ஏற்றும் நேரமாக இருந்தது
எப்படி மலையின் மேல் எங்கே எங்கே
மறைந்து இருக்கின்றன ஒளி_ பூக்கள்.
ஒரு கரடுமுரடான சாலை இருந்தது
தொடர்ச்சியாக எங்களுக்கு
ஆறுதலைத் தந்தபடி இருந்தன
நீ மிகச் சரியாக சேர்வாய் வீடு என்று.
ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்
தமிழில் : வசந்ததீபன்
ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்
_______________________
பிறப்பு :
_____________
08 பிப்ரவரி 1964
பிறந்த இடம் :
_________________
ச்சுரா , சத்தீஸ்கர் மாநிலம்
எழுதிய நூல்கள் :
____________________
1. உணவாக இருக்கின்றன எனது வார்த்தைகள்
2.மண்ணிடம் சொல்லுவேன் , நன்றி
3. விதையிலிருந்து பூ வரை
- *விதண்டா வாதம்*
- யாத்திரை