ஹிந்தியில் : வினோத் பத்ரஜ்
தமிழில் : வசந்ததீபன்
__________________________
எனது கையில் ஒரு கடிதம் இருக்கிறது
உள் நாட்டுக் கடிதம்
அதன் மீது என்னுடைய முப்பது வருட பழைய முகவரி எழுதப்பட்டு இருக்கிறது
ஆ..! அந்த கையெழுத்தில்…
அந்த கையெழுத்தின் அனைத்துக் கடிதங்களை
நான் கிழித்துப் போட்டேன் எரித்துப் போட்டேன் தூரக் கொட்டினேன்
துச்சமான வாழ்வை பாதிப்பில்லாமல் ஆக்குவதற்காக…
ஆனால் தப்பித்து வாழ்ந்து கொண்டிருந்தது இது , ஏனெனில் ஒருவேளை
எப்போது இது கிடைக்கலாம் என்று
அக்கம்பக்கம் இருந்து கொண்டிருக்கலாம் ஏதாவது
மற்றும் நான் இதை ஒளித்து வைத்திருக்கலாம்
பிறகு தேட கிடைக்காது போயிருக்கலாம்
அழுது இருக்கலாம் வருந்தியிருக்கலாம்
ஆனால் தேட கிடைக்காது போயிருக்கலாம்
இன்று
அன்ன கரேனினாவைத் திறந்தவுடன் தான்
வெளிவந்தது இது
30 வருடமாக காத்திருப்பில் பதுங்கி இருந்தது
நான் சிரமத்துடன் எனது ஐம்பத்தி ஐந்து வருட இருதயத்தை சமாளித்து
நடுநடுங்கும் விரல்களால் இதை திறக்கிறேன்
ஆனால் உள்ளே
மை பரவிப் போயிருக்கிறது இவ்வளவு அதிகமென
அன்பே பிறகு
படிக்க முடியவில்லை ஒரு எழுத்துக்கூட
இது 30 வருட பழைய கண்ணீரால் நிரம்பிஇருக்கிறது ஆரம்பம் முதல் இறுதி வரை
30 வருட பழைய கண்ணீரின் இந்த கைப்பிரதியை
நான் எழுத்து எழுத்தாக படிக்கிறேன்
மற்றும் கண்கள் நிரம்பி வருகிறது
மேலும் என்னுடைய கண்ணீர்…
அவை கண்ணீரோடு கிடைத்திருக்கிறது 30 வருடங்களுக்கு பிறகு.
ஹிந்தியில் : வினோத் பத்ரஜ்
தமிழில் : வசந்ததீபன்
அன்ன கரேனினா : ரஷ்ய நாவலாசிரியர் டால்ஸ்டாய் எழுதிய நாவலின் பெயர்.
வினோத் பத்ராஜ்_
_______________________
பிறப்பு :
_________ 1960
பிறந்த இடம் :
_______________ ஸவாஈ மாதோபுர் , ராஜஸ்தான்
இவர் ஒன்பதாம் தசாப்தத்தில் தோன்றிய கவிஞர். அவரது கவிதையின் கருப்பொருள் மதச்சார்பற்றதிலிருந்து அறிவொளி வரை இருந்தது.