ஜெயானந்தன்.
நீயும் நானுமாய்
கைகோர்த்து, வாழ்வின்
கடல் நீந்தி வெகுதூரம்
வந்துவிட்டோம்!
நாற்பதாண்டில்,
“நீ” நானுமாய்,
“நான்” நீயுமாய்
மாறிமாறி உருமாறி
அர்த்தநாரியாய் உலாவந்தோம்.
காமம் உடல்வரை
காதல் உள்ளம்வரை
கரைபுரண்டு ஓடி, கால்கடுத்து,
வாழ்வை தவமாய் மாற்றினாய்.
இன்று,
முதுமையில்
நீயும் நானுமாய்
கோணல் பாதங்களுடன்
நுரைத்தள்ளும் கடல்புரத்தில்
கானும் தொடுவானம் , தொலைதூரம்!
என் அன்பே
என் சுயம் அழிக்க
உன் முத்தம் ஒன்றே போதும்….,
நம் இளமை முக்தி பெற்று
முதுமையில் காமம் கரைந்து காதலாய்…….,
காதலாய்……,காதலாய்……..,
ஜெயானந்தன்.
- கனடா, ரொறன்ரோவில் நூல் வெளியீட்டு விழா
- நாளைய சொர்கம்
- கரையேறும் காதலாய்……