This entry is part 5 of 5 in the series 6 அக்டோபர் 2024

ரவி அல்லது

எனக்குள் இருக்கும்
உன் வார்த்தைகளுக்கு
சிறகுகள் முளைக்கிறது
திடீரென
காத்த மௌன இடைவெளியில்.

திசைக்கொன்றாக
பறப்பதில்
கலைப்பு மேலிடுகிறது
ஆசுவாசங்கொள்ள
அருகாமையை
எதிர் நோக்கியதாக
அன்றாடங்கள்
வெறுமையை மென்று.

வாய்த்திருக்கும்
தனிமைப் பாடில்
இருப்பவைகள்
யாவும்

நேற்று
சொர்க்கமென சுகம்
காண வைத்தவைகள்தான்.

வாசனையற்ற
வாழ்க்கை
உழல வைக்கிறது.
நோதலின்
நரகத்தில்
விடியலுக்கான
வரவின்
வேண்டலாக
எஞ்சியிருக்கும்
தெம்பில்
இந்த
உயிர்
எப்பொழுதும்
உன் திசை நோக்கியத் தவத்தில்.


-ரவி அல்லது.
ravialladhu@gmail.com

Series Navigationஒரு காதலின் நன்னம்பிக்கை முனை