ஜெயானந்தன்
நடைப்பயணத்தில்
எதிர் திசையில்
மழலை ஒன்று
கையசைத்து
மழலை பள்ளிக்கு தவழ்ந்தது.
திரும்பிப்பார்க்கையில்
ரோஜா மொட்டவிழ்த்து
புன்னகை பூத்தது.
முதல் மாடியில்
சாருகேசி
வீணை வருடினாள்.
மூன்றாம் மாடியில்
மாலி புல்லாங்குழல்
தவழ்ந்தது.
நேற்று சென்ற
அதே பூங்காவிற்கு சென்றேன்.
கொஞ்சம் பட்டாம்பூச்சிகளும்
புறாக்களும்
பறந்தன.
சில பூக்கள்
எனக்காக பூத்திருந்தன.
சிலர் அமர்ந்திருந்தார்கள்
யாரும் யாரோடும்
பேசவில்லை.
நான்
என் கவிதை
பிரசவத்திற்கு
தவம் கிடந்தேன்.
-ஜெயானந்தன்.