வசந்ததீபன்
பிச்சைப் பாத்திரம் ஏந்தித் திரிகிறான்
வீடுகளெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன
புத்தன் அலுக்காமல் அலைகிறான்
பொம்மைகளிடம் பேசக் கற்றுக் கொண்டேன்
குழந்தைகளிடம் பாடக் கற்றுக் கொண்டேன்
கண்ணாடியிடம் சிரிக்கக் கற்றுக்கொண்டேன்
கவிதைகள் பூக்கின்றன
பூக்கள் பூக்கின்றன
ஈர இதயம்
போர்க்களம்
பூக்களம்
பாக்களம்
மன்னிப்பதா ?
தண்டிப்பதா ?
மனசைக் கேட்டுச் சொல்கிறேன்
புனைவுகளால் நெய்யப்பட்டது என் உள்ளம்
அதிர்வுகளை தாங்காது எழுப்பிடும் சப்தம்
கனவுகளையே ஜனித்துக் கொண்டிருக்கிறது
குமிழியிட்டுக் கொண்டிருக்கிறது
நின்றபாடில்லை
தூர்ந்து போன கிணறு.