அஞ்சலி : எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி ( வழக்கறிஞர் ரவி )

அஞ்சலி : எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி ( வழக்கறிஞர் ரவி )
This entry is part 5 of 11 in the series 1 டிசம்பர் 2024

..

 சாமக்கோடாங்கி ரவி என்ற பெயரில்25 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்100 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார்.

திருப்பூர் இலக்கிய விருது நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக பல சாதனைகள் புரிந்தவர்.

0

மூத்த வழக்கறிஞர் திரு ரவி அவர்கள்  27/11/24 எதிர்பாராத விதமாக உடற்பயிற்சி மையத்தில் கீழே விழுந்ததனால் ஏற்பட்ட. தலைக்காயத்தின் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் காலமாகிவிட்டார் எனும் துயர செய்தியை அறிந்து வேதனையுறுகின்றோம் .

00

திருப்பூர் இலக்கிய விருதுக்காக வந்த நூல்கள் அவர் முகவரியில் இருந்ததை சென்ற வாரம் பெற்று கொண்ட போது

எல்லாம் கொடுத்து விட்டேன்.எல்லாம் முடிந்தது என்றார்.

எல்லாமுமாக முடித்து கொண்டார்.

கடைசி சந்திப்பு…

அவை கடைசி வார்த்தைகள்

0

அஞ்சலி

போய் விட்டாயா ரவி

சமீபமாய் தங்கள் உடல் பரும்ன் குறைக்க ஜீம்முக்கு போவதாக சொன்னீர்கள்.வீட்டுக்கதவு அடைபட ஏமாற்றத்துடன் திரும்பினேன் பலதரம்

..

இன்று பூட்டப்பட்ட கதவை பார்த்து கண்ணீர் வடித்தேன்.

ஓசோ..புதுமைப்பித்தன் முதல் பலரது படைப்புகள் பற்றிய பேச்சு.

இசை…முதல் வீட்டு பிராணிகள் வளர்ப்பு வரை எல்லாம் பேசியிருக்கிறோம்… அனுபவ பேச்சு.

5 ஆண்டுகள் திருப்பூர் எழுத்தாளர்கள் தொகுப்பைக் கொண்டு வந்தீர்கள்.பல வேளைகளில் தாங்கள் சமைத்த அசைவ உணவு அமிர்தம்.

உடல் பயிற்சி நிலையத்தில் வெற்று உடலாகி விட்டீர்கள்.

தங்கள் பேச்சு நின்று போன நாள் இன்று .

0

… உடல் தானம். விடை பெற்று கொண்டார் வழக்கறிஞர் ரவி.சாமக்கோடாங்கி ரவி.

அவர் எழுதிய 25சிறுகதைகளைத் தொகுத்து வெளியீடு செய்ய ஓர் ஆண்டாய் கேட்டேன்.11சிறுகதைகள் கனவு இதழில் வெளிவந்தவை.பார்க்கலாம் என்று காலம் கழித்தார்.

நகரின் மத்தியில் இரண்டு வீடுகள்.ஆயிரக்கணக்கான நூல்கள்.வீணை உட்பட இசைக்கருவிகள்.. ஓசோவின் பெரிய படம்.கடலூர் தமிழரசன் வரைந்த அவரின் கறுப்பு வெள்ளை ஓவியம் உட்பட சில ஓவியங்கள்

அவர் வீட்டில் இருக்கும் மாட்டை வணங்க பல பெண்கள் வந்து போவர்.

தனியாள்.குடும்பத்தை ஓசோவை முன் வைத்து தவிர்த்தார்.

ஓசோ கம்யூனில் ஆறு மாதங்கள் வாழ்ந்தவர்

வாசிப்பு.எழுத்து.இசை .. அரட்டை என்று வழக்கறிஞர் தொழில் தவிர தனிமையை தவிர்க்க நினைத்தார்.தனியானார்

விடைபெற்றார் ரவி…58வயதில்.. 33   ஆண்டுகள் நட்பிலிருந்தார்.

00

00

சுப்ரபாரதிமணியன்

Series Navigationகொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.சாகித்திய ரத்னா  விருது பெற்ற பெண் ஆளுமை –   ‘ யாழ்நங்கை’ அன்னலட்சுமி இராஜதுரை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *