This entry is part 7 of 10 in the series 6 ஜனவரி 2025

ஜெயானந்தன் 

எல்லா 

அறைகளையும் பூட்டி 

சாவி கொத்தை 

சிங்கார வேலர் 

எடுத்து விட்டு 

ஒவ்வொரு பூட்டையும் 

இழுத்துப்பார்த்தார். 

ஸ்டேசன் 

அடைவதற்குள் 

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் 

பறந்துவிட்டது. 

பிளாட்பார ஓரத்தில் 

எட்டணா டீயோடு 

காத்திருப்பார் 

அடுத்த வண்டிக்கு.

இடையே 

மூன்றாவது 

அறையை 

பூட்டினோமா 

சந்தேகம் வரவே 

கால்கடுக்க ஓடினார் 

வீட்டுக்கு. 

எல்லா அறைகளும் 

பூட்டித்தான் இருந்தன. 

ஸ்டேசன் 

அடைவதற்குள் 

அடுத்த வண்டியும் சென்றுவிட்டது. 

காலியான 

ஸ்டேசனில் 

அடுத்த வண்டிக்காக 

காத்திருக்கும் 

கடைசி ஆள் 

இவரோ.

– ஜெயானந்தன் 

Series Navigationபாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்ரொறன்ரோவில் பனிக்கால உள்ளக விளையாட்டுகள்