அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டி முடிவுகள்.
இலங்கை நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெறும் நான்கு எழுத்தாளர்கள்.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும் புதியவர்களை எழுதத் தூண்டுவதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் கடந்த சில வருடங்களாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க வகைகளில், ஒவ்வொன்றிலும் கடந்த 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களில் சங்கத்தின் இந்த பரிசளிப்புத் திட்டத்திற்குக் கிடைக்கப்பெற்ற நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்யப்பட்டு தலா. 50, 000 இலங்கை ரூபாவைப் பரிசாகப் பெறும் நூல்களையும், அவற்றை எழுதியவர்களையும் பற்றிய விபரங்கள் வருமாறு:
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் பரிசுபெறும் நூல்களினதும், அவற்றை எழுதிய எழுத்தாளர்களினதும் பெயர் விபரங்களும்: .
நாவல்: ஒரு நாள் பாவம்
நூலாசிரியர்: சீமான பத்திநாதர் பர்ணாந்து .
ஜீவநதி வெளியீடு – அல்வாய்.
சிறுகதைத்தொகுதி: தைலாப்பெட்டி
நூலாசிரியர்: ஏ பீர் முகம்மது
கஸல் பதிப்பகம் ஏறாவூர்
கட்டுரை: நாட்டார் வழக்காறுகள்

நூலாசிரியர்: நாராயணபிள்ளை நாகேந்திரன்
கவிதை
மோகனம் – மருதூர்க்கொத்தன் கவிதைகள்
நூலாசிரியர்: மருதூர்க்கொத்தன்.
கவிஞர், மருதூர்க்கொத்தன் அவர்கள் அமரத்துவம் அடைந்துவிட்டார். . மருதூர்க்கொத்தன் அவர்கள் கவிதை நூல்கள் எதனையும் முன்னர் வெளியிடவில்லை.. இதுவே அவரது முதலாவது கவிதை நூலாகும்.
“மருதூர்க்கொத்தன் அறக்கட்டளை”யின் சார்பில், மருதூர்க்கொத்தன் அவர்களது மகன், ஆரிஃப் இஸ்மாயில் இதனை வெளியிட்டுள்ளார்.
பரிசுபெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு தலா ஐம்பதினாயிரம் ரூபா வீதம் வழங்கப்படும். குறிப்பிட்ட பணப்பரிசில்கள் விரைவில் நூலாசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
—–0—-
- விரவிய உளம்
- நூல்கள் பரிசளிப்புத் திட்டம் (2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்)
- அவரவர்
- ஜகமே மந்திரம், ஜகமே தந்திரம்
- சங்கஇலக்கியங்களில் அடிக்கருத்தியல் சிந்தனை
- இழுத்துவிட்டதன் அசௌகரியம்
- சென்னையில் நடந்த 48வது புத்தகத் திருவிழா