This entry is part 2 of 9 in the series 30 மார்ச் 2025

ரவி அல்லது

மிடறுகளின்

சுவையில்

மிதந்து கிடக்கிறது

வெளி.

வெற்றுக் கோப்பையின்

இறுதிப் பருகலில்தான்

உயிர்த்திருக்கிறது

தருணம்

அழைத்துவிட்ட

ஏதோவொன்றுக்காக கவனம் கொடுத்து.

யாவற்றுக்குமான

இந்த

அனுசரணையில்

இச்சொற்களுக்கு

மட்டும் 

தேவையாக இருக்கிறது 

கதகதப்பூட்டும்

மௌனம்

இத்தனிமையின்

ஓய்வைப்போல.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigationஆபிரிக்காவின் மாறா நதிக்கரையில்…மருள் விளையாட்டு