ஜெயானந்தன்.
ஜி.நாகராஜனை பற்றி எழுதும் போது, பொதுவாக அவர், வேசிக்கதைகளை அதிகமாக எழுதக்கூடியவர் என்ற கணிப்பு பலரிடையே உண்டு.
அவரது நாவல், “நாளை மற்றுமொரு நாளே”, பிரலமாக பேசப்பட்ட நிதர்சனங்களின் தரிசனம்.
யாரும் தொட பயந்த, மனித நாகரிகமான செயலுக்கு அப்பாற்பட்ட லிகதம் நிறைந்த வாழ்வின், இன்னொரு இருண்ட சந்தினுள் வாழும் பெண்களின் வாழ்வின் சுயப்புராணங்களை , பயமின்றி எழுதிய,
ஜி.நாகராஜன், யாரையும் சமரசத்திற்கு
அழைக்காமல் எழுதி சென்றவர்.
இவர், வெறும் வேசிக்கதைகளை மட்டும் எழுதியவர்அல்ல, அந்த காலத்திலேயே,
மேஜிக்கல் ரியலிஷம் என்று சொல்லக்கூடிய, சிறுகதையினையும் எழுதியுள்ளார். (டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்).
“வேசி தேவயானைக்கு, இந்த வாழ்வின் மீது ஒரு அலுப்பு வந்தது.
தீராத காமமும், தீராத காதலும் இந்த பெளதீக வாழ்வின் பெரும் சுமை. இதனை கழுதைப்போல் சுமந்து செல்வதுதான் வாழ்க்கை.
இதனை ஞானிகள் மறுகரையிலிருந்து
பார்க்கின்றனர். கானல் நீர்போல் தெரிகின்றது. வேண்டாம் போய்விடு என்றும் எந்நாளும் பாடுகின்றனர். வேதங்களின் மூலம் ஒலிக்கின்றனர்.
மன்னர்கள் கோயில்கட்டி, காமத்தை கலையாக கல்லில் வடித்தாண்டு வாழ்வை சிறப்பிக்கின்றனர்.
வள்ளுவம் சிறப்பான வாழ் முறைகளை கூறிச்செல்கின்றன. இத்தனையும் கற்ற,
நாகராஜன் மீண்டும் மீண்டும் புதைக்குழிக்குள் விழுகின்றார். அதுவே அவரது வாழ்க்கை தரும் வேதனை.
காமத்தீ அவரது உடலெங்கும் எரிகின்றது. அதில் தன்னையை எரித்துக்கொள்கின்றார்.
தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை, கதவை தாழிக்கொண்டு செய்ய முனைகின்றாள் வேசி.
உத்திரத்தில் கயிற்றைமாட்டி, தொங்கிவிடுவது என்ற முடிவுக்கு வருகின்றாள்.
இந்த வாழ்க்கை, குடும்ப பெண்களை மட்டுமல்ல; இந்த சமுதாயத்தால், வேசிகளாக்கப்பட்ட பெண்களையும், தற்கொலை மனோ நிலைக்கு தள்ளுகின்றது. கடித்துக்குதறும் வெறிநாய்களுக்கு மத்தியில், இனி போடுவதற்கு சதையில்லை என்ற ஏவாள் தோட்டத்து கனிகள் கதறுகின்றன.
குடும்ப பெண்களுக்கு வரதட்சணை கொடுமை என்றால், வேசிகளுக்கு
இந்த வாழ்க்கையே கொடுமைதான்.
அவளுடன் இருந்த மற்ற வேசிகளும், சொந்த ஊருக்கு சென்றவர்கள் , திரும்பி வரவில்லை. வெறுமையும், தனிமையும் சாத்தானின் கதவைத்தட்டும்.
ஆள் பிடிக்க சென்ற புரோக்கர் அத்தானையும் காணவில்லை.
தீடீரென, கதவு தட்டப்படுகின்றது.
கதவை திறந்தாள் தேவயானை.
வெளியே அத்தானும் அவர் அழைத்துவந்த அந்த மனிதரும்,
ம். .இவரை அழைச்சிட்டு ரூமுக்கு போ என்றார் அத்தான்.
அவரை அழைத்துக்கொண்டு ரூமிற்கு சென்று, லைட்டைப்போட்டாள்.
பாகவதர் கிராப் வைத்து, டெர்லின் ஷர்ட்டும், எட்டு முழ வேஷ்ட்டியும் கட்டியிருந்த அவர், ரூமையும், சுவற்றையும் சுற்றி பார்த்துவிட்டு, சுத்தமாத்தான் இருக்கு என்றார்.
இங்க எல்லாம் சுத்தமா தான் இருக்கும் என்று, அத்தான் சிரித்துக்கொண்டே சொல்லி, கதவை சாத்திவிட்டு வெளியே சென்று விட்டார். உடல் சுத்தம் மட்டுமல்ல, உள்ளமும் சுத்தமாகும், கொடுக்கும் வெள்ளிப்பணம் கனக்கையிலே!.
வந்தவர் சாய்ந்தக்கொள்ள ஒரு நாற்காலிக்கேட்டார்.
தேவயானைக்கு ஒன்றுமே புரியவில்லை.
யாரும் வந்தவுடன், துணியைதான் அவிழ்க்க சொல்வார்கள். பஞ்சணையில் படுக்கைக்கு அழைப்பார்கள்.
ஆனால், இவர் அவள் அழகை ரசித்துக்கொண்டிருந்தார். அவளுக்கு, அவரை புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவளின் அந்தரங்க ஆத்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
வந்தவர், தேவயானையை உட்கார சொல்கின்றார். கொஞ்சம் சரிந்து உட்கார்ந்து, மராப்பு தெரியும்படி, சேலையை விலக்க சொல்லி பார்த்து ரசிக்கின்றார். எதையோ தவறவிட்ட ஒன்றை மனதால் வரைகின்றார்.
அவள் படுத்துக்கொண்டாள். அவரை தொடச்சொல்கின்றாள். அவர் தொடவில்லை. ஆனால், அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு சதை சுகம் தேவைப்படவில்லை.
அவள் கையில் ஒரு ஐந்து ரூபாயை திணிக்கின்றார். அவள் தலையனைக்குள் அந்த பணத்தை வைத்துக்கொண்டாள்.
கொஞ்ச நேரத்தில், கதவுத்தட்டும் சத்தம் கேட்கின்றது.
தேவயானை கதவைத்திறந்தாள்
அத்தான் புதுப்பார்டியை அழைத்தவந்தார்.
ரூமில் ஏற்கெனவே வந்தவர் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்க்கின்றாள். மாமா வேலை செய்யும் அத்தானையும் , புதிய நபரையும் பார்க்கின்றாள்.
அந்த அறையில் யாருமில்லை.
புரோக்கர் மாமா, தேவயானி யிடம் விசாரிக்க, அவள் அந்த டெர்லின் சர்ட் காரை சொல்லி அவர் கொடுத்த, ஐந்து ரூபாயை தேடுகின்றாள். அதுவும் காணவில்லை.
புரோக்கர் மாமா, இதுவரை எந்த டெர்லின் சர்ட் காரனையும் அழைத்துவரவில்லை என்று கூறுகின்றார்.
தேவயானிக்கு எல்லாம் கற்ற
கனவாகவும், கானல்நீராக வும் தெரிகின்றது. இதுவரை காணத ஒரு உயர்ந்த ஜீவனின் காலடிச்சுவடுகளை தேடுகின்றாள். பெண்ணுடல் சதை விரும்பாத, ஆணைத்தேடுகின்றாள்.
இது எப்படி சத்தியமான உண்மையா,என்று ஆச்சரியப்படுகின்றாள்.
நாகராஜனின், மேஜிக்கல் ரியலிஷம்,
இந்த கதையின் சிறப்பான தத்துவம்.
எல்லாமே கனவுதான். இந்த பூதவுடலின் மேல் படர்ந்த வாழ்வின் சந்தோஷங்களும்,வேதனைகளும்
காமத் தீயும் ஆண்டிக்கோலமும் இந்த வாழ்வின் பரிசே !
பொருளற்ற வாழ்வில் பொருள் தேடி அலையும் மாந்தர் கூட்டமும் நாமே!
****************