வால்ட் விட்மன் வசனக் கவிதை – 55 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 18 of 26 in the series 29 டிசம்பர் 2013

  (Children of Adam)

பெண்டிர் பெருமை ..!

 

 (1819-1892)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

 

 

என்னை விட மாதர்

இம்மி அளவும் திறமையில்

குன்றி யவர் அல்லர் !

பரிதி ஒளிவீச்சு பட்டுப்

பழுப்பான முகம் ! அவரது

சதை மேனி

முதியத் தெய்வீகக் குழைவு

பெற்றது.

வலுப் பெற்றது.

நீச்சல் தெரியும் அவர்க்கு

படகோட்ட,

குதிரை ஏறிச் செல்ல,

மல் யுத்தம் புரிய

முன்னேறப், பின்னேற,

சண்டையில் எதிர்த்து நிற்கத்

தெரியும் அவர்க்கு !

தமது

உரிமைத் தேர்வில் முடிவைக்

காண்பார்.

அமைதி யானவர்,

தெளிவு கொண்டவர்,

தமது

சுயத்துவ ஆக்கிர மிப்பில்

திறமை மிக்கவர் !

 

இளம் மாதே !

அணைத்துக் கொள்ள உன்னை

இழுத்துக் கொள்வேன்.

விலகிப் போக நானுன்னை

விட மாட்டேன் !

உனக்கு நல்லதே செய்வேன்,

எனக்காக நீ இருக்கிறாய்;

உனக்காக நான்,

நமக்கா கவும், பிறர்க்கா கவும்

நாமிருக் கிறோம்.

உனது உறக்கத்தில்

உன்னைச் சுற்றி யுள்ளவர்,

பெரும் தீரர்கள்,

பேரறிஞர்கள் !

விழித்தெழுவ தில்லை அவர்கள்

எவரும்

என் கை தொடாமல் !

 

இளம் மாதரே !

நான்தான் முன் வருவேன்,

எனக்குப் பாதை நானே

அமைப்பேன் !

அழுத்த மானவன்

வலுத்தவன், பெருத்தவன் நான்,

கருத்து மாறச்

செய்ய முடியா தென்னை,

கடுகடுப்பவன் !

ஆயினும் உன்மேல்

காதல் கொண்டுள்ளேன் !

அளவுக்கு மீறி

உனது மனத்தைக்

காயப் படுத்துவ தில்லை !

 

 

+++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [December 25, 2012]

 

 

****************

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *