முரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்

Spread the love

அன்புடையீர், வணக்கம்.

இப்பொழுது இ.புக் படிக்கும் பழக்கம் அதிகமாகி- வருகிறது. எதிர்காலத்தில் அச்சுப் புத்தகங்களின் தேவை மிக மிகக் குறைந்து போகும். அப்போது நிற்பது இ.புக்காகத்தான் இருக்கும்.

அனைத்தையும் கையளவு மொபைலில் திறந்து படிக்கும் நிலை விறு விறுவென்று மேலேறி விட்டது.

இந்த ஊடகத்தைக் கையிலெடுத்துக்கொண்டு முதல் முயற்சியாக எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றை அமேஸான் கிண்டிலில்-இ.புக்காக வெளியிட்டிருக்கிறேன். 294 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 190 ரூபாய் விலை நிர்ணயித்திருக்கிறேன். சில பக்கங்கள் சாம்பிளாகவும் கிடைக்கின்றன. படித்துப் பார்க்க வசதியாக. ஆன்ட்ராய்டு ஃபோன் வைத்து இன்டர்நெட் வசதியுள்ளவர்கள் இதை அமேசான் கிண்டிலில் சென்று திறந்து படிக்கலாம். இத்தகவலை நம் திண்ணையில் வெளியிட்டு வாசகப் பெருமக்களுக்குத் தெரியப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.

உஷாதீபன்

Series Navigationமருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சிபர்ணசாலையில் இராவணன்..