பீட்டில்ஸ் இசைப் பாடல்கள்

Spread the love

 

துயரம் நேர்கையில்

 

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

துயரம்  நேரும் போதெல்லாம்

துணை கிட்டும் எனக்கு

அன்னை மேரியின்

உன்னத  அறிவுரை மொழிகளாய் !

இருள் மூண்டு காலம் கடுக்கும் போது

என்னெதிரிலே வந்து நிற்கிறாள்,

அன்னை மேரி

உன்னத அறிவுரை சொல்லி !

 

முணு முணுப்பாள் என் காதிலே

நுணுக்க மான அறிவுரைகள்.

மாநிலத்தில் வாழும்

மனம் உடைந்து போன மனிதர்

ஒப்புக் கொள்வார்.

ஒரு பதில் உண்டு அதற்கு.

மரித்துப் போனாலும்

மீண்டும் காண வாய்ப்புண்டு.

ஒரு பதில் இருக்க வேண்டும்.

 

முகில் மூட்டத்தில் இரவு உள்ள போது

ஒளிக்கதிர் என்மேல் மினுக்கும் !

அடுத்த நாளும் மினுக்கும் !

விழித் தெழுவேன்

ஒலிக் கீத விளிப்புக்கு !

அன்னை மேரி அருகில் வருவாள்,

பொன்மொழி களைப் பொழிந்து கொண்டு !

ஓர் அறிவுரைப் பதில் கிடைக்கும்

உறுதி யாகச் செவிதனில்

ஓதப்பட்டு !

 

++++++++++++++++++++

Series Navigationஇரண்டு விண்மீன்கள் மோதிக் கொள்ளும் போது ஒன்றாகி விண்வெளியில் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.மருத்துவக் கட்டுரை — சொறி சிரங்கு ( SCABIES )