Articles Posted by the Author:

 • கவிதையும் ரசனையும் – 14 ஆத்மாநாம்

  கவிதையும் ரசனையும் – 14 ஆத்மாநாம்

  அழகியசிங்கர்                  இந்தப் பகுதியில் இதுவரையில் ஆத்மாநாம் பற்றி எதுவும் எழுதியதில்லை.  ஏன்?  உண்மையில் நான் ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தத் தொடரில் அவருடைய சில கவிதைகளை எடுத்து எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.               ஆத்மாநாம் உயிரோடு  இருந்தபோது நான் இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன்.  ஒரு முறை கவிஞர் வைத்தியநாதனுடன் ஆத்மாநாமைச் சந்தித்திருக்கிறேன். வேறு ஒரு நண்பர் வீட்டிற்குப் மூவரும் போனோம்.  அப்போதுதான்             நான் ஆத்மாநாமிடம் அந்தக் கவிதையைப் பற்றி அர்த்தம் கேட்டேன்.     நிஜம்   நிஜம் நிஜத்தை நிஜமாக  […]


 • எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்

  எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்

  அழகியசிங்கர் எஸ்எம்,ஏ ராம் இறந்து விட்டார் (02.04.2021) என்ற செய்தியை பாரவி மூலம் அறிந்து வருத்தப்பட்டேன். ராமைப் பல ஆண்டுகளாக அறிவேன். நானும் அவரும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் விடைபெறும் தறுவாயில் பல மணி நேரம் பேசியிருக்கிறோம் அவர் அதிகம் படித்தவர். தனியார்ப் பள்ளியில் மிகக் குறைந்த ஊதியத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் நாடகம், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒரு நாவலும் கூட. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில். ‘தாத்தா காலத்து பீரோ’ என்ற அவருடைய சிறுகதைப் புத்தகம் […]


 • முதல் மரியாதை தமிழில்  ஒரு செவ்வியல் திரைப்படமா ?

  முதல் மரியாதை தமிழில்  ஒரு செவ்வியல் திரைப்படமா ?

    நடேசன் –  அவுஸ்திரேலியா   —————————————————————————— இளமைக்காலத்தில்  இயக்குநர் பாரதிராஜாவின்  முதல் மரியாதை திரைப்படத்தை   பார்த்தபோது,  என்னைக் கவர்ந்தது என்னவென்றால்,   அக்காலத்தில்  சிவாஜி ரசிகனாக இருந்த  எனக்கு   மத்திய வயதான ஒரு வருக்கு  இளம் பெண்ணில் ஏற்பட்ட காதல் ஒரு புதுமையாகவிருந்தது.   இது நல்ல திரைப்படமென்ற நினைவே மனதிலிருந்தது. சமீபத்தில்  அதனை  தமிழின் செவ்வியல் படம் எனக்குறிப்பிட்டு  பலர் எழுதியதைப் படித்தபின்பு,  மீண்டும் பார்ப்போம் எனச் சமீபத்தில் பார்த்தபோது இந்தப்படம் புரட்சியானதோ புதுமையானதோ அல்ல,  படு […]


 • பூராம்  கவிதைகள்

  பூராம்  கவிதைகள்

      1.   கவிதை விற்றவனின் பிரதிகள்  காலவிதை உருமாற்றிய பிம்பம் தன்னைத் தேடி காலம் தொலைத்து காலமாகி கரைந்துபோக…   முடிவில்லா வெளியில் தானுமாகி அவையுமாகி அவளுமாகி …   நீக்கமற நிறைந்த ஏதோவொன்றின் மறுபிரதி நான்.   2.   எனக்குள் இருக்கும் என்னை என்ன ஆனாலும் எனக்குள் இருக்கும் என்னை எப்படி ஆனாலும் எனக்குள் இருக்கும் என்னை நான் அறிந்துகொள்ள அன்றாடம் மறவாமல் பேசும் அந்தப் படிகட்டுகளுக்கும் தெரியும் அவளோடு பயணித்த […] • திருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…

  திருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…

  கோ. மன்றவாணன் நண்பர் ஒருவருக்காகத் திருமண அழைப்பிதழை எழுதி அச்சடிக்கக் கொடுத்தேன். மெய்ப்புத் தந்தார்கள். திருநிறை செல்வன் என்றும் திருநிறை செல்வி என்றும் நான் எழுதித் தந்திருந்தேன். ஆனால் அவர்கள் திருநிறைச் செல்வன் என்றும் திருநிறைச் செல்வி என்றும் தட்டச்சு இட்டிருந்தார்கள். ச் போடக் கூடாது என்று, ச் – ஐ சிவப்பு மையால் மறைத்திருந்தேன். ஆனால் அச்சகத்தார் ச் – ஐ நீக்காமல் அச்சடித்துவிட்டார்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, ச் போட்டு அடிப்பதுதான் […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகை 244 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

  சொல்வனம் இணையப் பத்திரிகை 244 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 244 ஆம் இதழ் இன்று (11 ஏப்ரல் 2021) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: தேர்தல் திருவிழா – லோகமாதேவி காருகுறிச்சியைத் தேடி… – லலிதா ராம் மருந்தில்லா மருத்துவத்தின் மயக்கும் கதை -கடலூர் வாசு மின்சக்தி விமானங்கள் – பானுமதி ந. புவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும் – கோரா கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’  – கடலூர் வாசு (மொழியாக்கம்) பய வியாபாரியா ஹிட்ச்காக்? – பஞ்சநதம் (மூலம்: ஜான் பான்வில்) குங்குமப்பூவே! – லோகமாதேவி மொபைல் தொடர்பாடல் வரலாறு-2G பாகம் 2 – கோரா விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து  -(பாகம் 21)  ரவி நடராஜன் நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – குளக்கரைக் குறிப்புகள்: பானுமதி ந. கவிதைகள்: குமிழிகள் சுமக்கும் பால்யம் – குமார் சேகரன் அலைகள் – ஆனந்த் குமார் […]


 • மனிதர்களுக்கு மரணமில்லை

  மனிதர்களுக்கு மரணமில்லை

    குமரி எஸ். நீலகண்டன்   காற்று போன உடல் மாயமாகலாம். உள்ளிருந்த இதழினும் மெல்லிய அன்பும் இதமான ஈரமும் வளமான இடம்தேடி வானுயர வளர்ந்து விடுகின்றன.   அந்த ஆலமரங்களின் அகன்ற விழுதுகளில்தான் தலைமுறைகள் தணலினில் தொங்கி விளையாடுகின்றன.   நல்ல மனிதர்களின் மரணம் நல்ல விதைகளை பலரிடம் தூவித்தான் செல்கின்றன. அவர்களுக்கு மரணமேது? ( மூத்த மொழிபெயர்ப்பாளரும் எனது ஆகஸ்ட் 15 நாவலை இந்தியில் மொழிபெயர்த்தவரும் சாகித்ய அகாதமி விருதாளருமான டாக்டர் ஹெச். பாலசுப்ரமணியம் […]


 • மலை சாய்ந்து போனால்…

  மலை சாய்ந்து போனால்…

      மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை   சரியப்போகும் பெரும் மலையை சரியாமல் தடுத்துக் கொண்டிருக்கும் குட்டிச் சுவரை எங்கேயாவது பார்க்க முடியுமா?  நிச்சயமாக எங்களது பள்ளி விடுதியில் பார்க்க முடிந்தது.. மலை அடிவாரத்தில் இருக்கும் விடுதியின் காம்பவுன்டு சுவரை எப்போது நெருங்கினாலும், மலை சரிந்து நமது தலையில் விழுந்து விடும் என்றே தோன்றும், இறைவனின் அளப்பெரும் அருளால் இயற்கையாகவே அமைந்த விந்தை அது..   நம்ம பிரதமரும் சீன அதிபரும் பரஸ்பரம் கைகுலுக்கி […]


 • ஒரு கதை ஒரு கருத்து – தி.ஜானகிராமனின் பாயசம்

  ஒரு கதை ஒரு கருத்து – தி.ஜானகிராமனின் பாயசம்

            அழகியசிங்கர்                         ‘பாயசம்’ என்ற கதையைப் படித்தேன்.  சாமநாது என்பவரின் மன வக்கிரம்தான் இந்தக் கதை.  சிறப்பாக எழுதி உள்ளார் தி.ஜானகிராமன்.                ஆரம்பிக்கும்போதே தி.ஜானகிராமன் இப்படிக் குறிப்பிடுகிறார்.                ‘சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார்.  கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார்.  நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப் பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும் இழுத்துக்கொண்டார்.’               இதையெல்லாம் செய்துகொண்டு வரும் தன் மனதில் வக்கிரத்தை வளர்த்துக்கொண்டு வருகிறார். […]