Articles Posted by the Author:

 • ஜேம்ஸின் மலர்ச்சாலை

  சபா.தயாபரன் (பரிமாணம் பத்திரிகையில் பிரசுரமானது ) அப்போதெல்லாம் இரவுகள் துப்பாக்கிச் சத்தத்துடன்தான்  கழிந்தன. .சில  நேரங்களில்  பகலில் கூடதெருக்கள்  கூட  நிர்வாணமாகவே காணப்படும்.அந்த  மரணபயங்கள்  நிறைந்த  கால பொழுதுகளில்  ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரேதப்  பெட்டிக்கான தேவை என்ற எண்ணமே நிர்ப்பந்தமாக   மனதளவில்  நிறைந்தே இருந்தது. எப்போதும் எங்கேயும்  நடக்கலாம் என்ற அச்சப்பாடு. பேரிடர் ஒன்று வருவதற்கான முன்னாயர்த்தமாகதிட்டமிடுதல் என்பது  இதுவாகத்தான் இருத்தல் வேண்டும்.. உலக மயமாக்கலின் அதிதீவிர செயற்பாடுகளுள் ஒன்றாகவே இதை கருத வேண்டியும்  உள்ளது.     […]


 • புலரட்டும் புதுவாழ்வு

  புலரட்டும் புதுவாழ்வு

  ஜெனிகாபிஷன்   புது இரவு புன்னகையுடன் புலரட்டும் புது வாழ்வு நம்பிக்கையுடன் மிளிரட்டும் புதுத்தென்றல் மனையெல்லாம் வீசட்டும் மனமெல்லாம் சந்தோஷத்தில் மிதக்கட்டும்   அழகான உலகில் அமைதியாக வாழ்ந்திடவே புலரட்டும் புதுவாழ்வு தனிமையில் தத்தளிக்கும் வெறுமையான வாழ்வது நீங்கியே உன்னத உறவுகளுடனே புலரட்டும் புதுவாழ்வு   இல்லாதவனும் வாழத்தான் வேண்டும் பொல்லாத கதை பேசாமல் மற்றோர் மனதை வதைக்காமல் அகமகிழ்வோடு புலரட்டும் புதுவாழ்வு   முன்வீட்டு செய்தியினை முகப்பு புத்தகத்தில் பார்த்திடாமல் முகம் பார்த்து பேசியே புலரட்டும் […]


 • கவிதையும் ரசனையும்

  அழகியசிங்கர்                 நீல பத்மநாபனின் 60 ஆண்டுக்கால நண்பர் நகுலன்.  நகுலன் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த தருணத்தில், நீல பத்மநாபன் அவருடைய மாணவராக இருந்திருக்கிறார்.                நகுலனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு நீள் கவிதையாக ‘நகுலம்’ என்ற பெயரில்  உருவாகியிருக்கிறது.               பொதுவாக எனக்கு நீள் கவிதையில் உடன்பாடில்லை. அது படிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.  உண்மையில் நான் ரசித்த நீள் கவிதைகளை நகுலன் எழுதியிருக்கிறார். அவருடைய அஞ்சலி என்ற நீள் கவிதையையும், மழை,மரம்,காற்று என்ற கவிதையையும் என்னால் நிறையவும் ரசிக்க முடிந்தது.                அதன் […]


 • ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் – (முதல் முதல் அமைச்சர்) -நூல் மதிப்பீடு

  (முதல் முதல் அமைச்சர்) கோ. மன்றவாணன் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்குச் சுற்றியுள்ள ஊர்களை எல்லாம் கையகப்படுத்தும்போது…. வள்ளலார் வாழ்ந்த கருங்குழி, மேட்டுக்குப்பம், வடலூர் ஆகிய ஊர்கள் எப்படி தப்பித்தன என்று யாரேனும் நினைத்துப் பார்த்தது உண்டா? ஓமந்தூர் பெரிய வளைவு இராமசாமி ரெட்டியாரின் கடும் முயற்சிதான் அதற்குக் காரணம். அப்படியா… யார் அவர்? என்றுதான் இன்றைய தலைமுறையினர் கேட்பார்கள். விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாநிலத்தின் முதல் முதல் அமைச்சராக இருந்த பெருமைக்கு உரியவர் அவர். […]


 • சிறுகதை வாசிப்பு லா.ச.ரா. – ஒரு நாயும் ஒரு மனிதனும்.

  ஜெ.பாஸ்கரன்.   முதுமை எல்லோருக்கும் மகிழ்வாய் அமைந்துவிடுவதில்லை. உடல் ஆரோக்கியம், உற்றார் உறவினரின் அன்பு, அமைதியான வாழ்க்கை என எல்லாமும் நிறைவாய் அமைவது அரிது.  ‘ஒரு நாயும் ஒரு மனிதனும்’ கதையில் ஒரு முதியவரின் ஆற்றாமையை – உணவு, ஆரோக்கியம், உறவுகள் மூலம் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சி இல்லாத நிலை – அவர் மன ஓட்டங்களிலேயே சொல்கிறார் லா.ச.ரா. வாசற்பக்கம் தனியறையில், கட்டுப்பாடுகளுடன் வாழ்க்கை. “சிறைக் கைதி போல், அறையில் தனிச் சாப்பாடு. ஐந்து வருடங்களாக இப்படித்தான் நடக்கிறது”. […]


 • சொல்வனம் 245 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

  சொல்வனம் 245 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 245 ஆம் இதழ் இன்று (ஏப்ரல் 25, 2021) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலை முகவரியில் பெற்றுப் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: சிறுகதைகள்: தாய்மொழிகள் – எஸ். சியூயீ லு (மொழியாக்கம்: மைத்ரேயன்) ஐந்து பெண்கள் – மஹாஸ்வேதா தேவி (மொழியாக்கம் – எம்.ஏ. சுசீலா) இரு புறமும் சுழலும் கடிகாரங்கள்– மாலதி சிவா அவன் இனி காப்பி குடிக்க மாட்டான் – லாவண்யா சுந்தரராஜன் பேச்சரவம் – கமலதேவி சால கல்லலாடு – லலிதா ராம் தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம் – கென் லூ பட்டர்பி – வைரவன் லெ. ரா.   நாவல்: மின்னல் சங்கேதம் – பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய் (மொழியாக்கம்: சேதுபதி அருணாசலம்)   கட்டுரைகள்: விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்  […]


 • ‘உயிரே” ………………

  ஜெனித்தா மோகன் (இலங்கை)     உயிரே உயிரே ஒருமுறை உறவென்று அழைப்பாயா? உயிர் பிரியும் வரை அது போதும் தருவாயா?   இரவுகள் நீள்கின்றது உன்னாலே இலக்கியம் படைக்கின்றேன் தன்னாலே கவிதைகள் வருகிறது உன்னாலே கவிஞனும் ஆகிறேன் தன்னாலே   சொந்தமும் வருகிறது உன்னாலே சொர்க்கமாய் மாறுகிறது தன்னாலே இன்பங்கள் கோடி வருகிறது இயற்கையும் அழகாகிறது தன்னாலே   உன்னோடு பேசிட ஒரு நிமிடம் தருவாயா உறங்காமல் இருந்திட பல பல கதைகள் சொல்வாயா?   […]


 • படித்தோம் சொல்கின்றோம்:

  நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி மாயாவாதமும்  அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் ! முருகபூபதி   மனித வாழ்வில் அந்தரங்கங்களுக்கு குறைவிருக்காது.  அந்தரங்கம் அவரவர்க்கு புனிதமானது. ஜெயகாந்தனும் அந்தரங்கம் புனிதமானது என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியவர். அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும்  நடேசன்,  இங்கு வந்தபின்னரே இலக்கியப்பிரதிகளும் அரசியல் பத்தி எழுத்துக்களும் எழுதத் தொடங்கியவர். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், அரசியல் பத்தி எழுத்து மற்றும் தான் சார்ந்த விலங்கு மருத்துவத்துறை […]


 • வெறுக்காத நெஞ்சம் – ஜனநேசன் கதைகள்

  இந்தியர் பலரின் வாழக்கையை உலுக்கிப் போட்ட, போட்டுக் கொண்டிருக்கும் பண மதிப்பிழப்பு, காதலர் தினக் கொண்டாட்ட எதிர்ப்பு, மாட்டிறைச்சிக்குத் தடை … எனப் பிரச்னைகள் சிலவற்றைக் கதைகளாக்கிப்பார்த்திருக்கிறார் ஜனநேசன். சித்தாள் வேலைக்குப் போய் கீழே விழுந்து, அதனால் இடுப்பொடிந்து வயிற்றுப் பிழைப்புக்காக அதிகாலை இருட்டில் குப்பை திரட்டிப் போடும் வேலை பார்க்கிறவனுக்கு ஒருநாள் ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து கிடைத்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மகிழ்ச்சிக்குப் பதில் கவலையையும் கலவரத்தையும் அளித்ததைக் ‘காரணம் அறிகிலார்’ என்ற தலைப்பில் […]


 • உடுமலை நாராயண கவி இலக்கிய விருது

  உடுமலை நாராயண கவி இலக்கிய விருது

    இவ்வாண்டுக்கான உடுமலை நாராயண கவி இலக்கிய விருது எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு உடுமலையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருது பத்தாயிரம் ரொக்கப்பரிசும் , கேடயமும் கொண்டது   உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் )வழங்கினார். இதுவரை உடுமலை நாராயண கவி இலக்கிய விருது பெற்றோர் சுளுந்தி […]