ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம்

This entry is part 39 of 40 in the series 1 ஏப்ரல் 2012

 

மகமூது தர்வீஷ்

 

இஸ்லாமிய தொன்மங்களின் உலகை மிகச் சிறப்பாக பயன்படுத்திய அல்லாமா இக்பால், நஸ்ருல் இஸ்லாம்,நஸீம் இக்மத் அண்மையில் மறைந்துபோன மகமூது தர்வீஷ்மற்றும் பலஸ்தீன கவிகள் போராளிப் பெண்கவிகள், குர்திஷ் இனமக்களின் வாழ்வியலைப் பேசும் கவிதைகள் என முஸ்லிம்களின் படைப்புலகம் விரிந்து கிடக்கிறது.

அண்மையில் நான் வாசித்த பாலஸ்தீனத்தின் செகுவரா என அழைக்கப்படும் மஹ்மூத் தர்வேஷின் ஒரு கவிதை இது.

திருக்குரானில் இடம்பெறும் யூசுப் நபியின் வரலாற்றை ஒரு தொன்மமாக மாற்றி தனது கவிதையை மறுபடைப்பாக்கம் செய்திருக்கிறார்.

பலஸ்தீன முஸ்லிம்களுக்கும் யூத ஜியோனிச அதிகாரத்திற்கும் இடையிலான முரணை இக்கவிதை பேசுகிறது. இலங்கைக் கவிஞர் எம்.ஏ.நுஹ்மான் இதனை தமிழ்படுத்தியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் இக்கவிதையின் தலைப்பு பாதர் ஐ ஆம் யூசுப்

தந்தையே நான் யூசுப்

என்னை என் சகோதரர்கள் நேசிக்கவில்லை

என்னை துன்புறுத்துகின்றனர்

என்மீது கல் எறிகின்றனர்

என்னை சாவின் விளிம்பில் தள்ளுகின்றனர்.

என் திராட்சை ரசத்தில் நஞ்சினை கலக்கின்றனர்.

தந்தையே நான் என்ன தவறு செய்தேன்

என்னை அவர்கள் கிணற்றில் தள்ளினர்

பின்னர் ஓநாயின் மீது பழியைப் போட்டனர்.

தந்தையே – ஓநாய்

என் சகோதரர்களை விடக் கருணை உள்ளது.

2) சகோ. முகமது ராபி பதிவிட்ட சூபி வகாபி ஆங்கில கவிதை உரையாடல் மிக முக்கியமானதொரு கவிதையாகும்.

சூபி – வகாபி பின்னணியையும், கருத்தியலையும் இருமை எதிர்வுகளாக்கி அக்க்கவிதை உண்ர்வெழுச்சியுடன் துல்லியமாகப் பேசியது.

சூபிவகாபி சாராம்சத்தை ஒரே கவிதை மிக அழகாக விளக்கிவிட்டது.அக்கவிதை எழுதிய கவிஞர் பற்றிய குறிப்புகளையோ அல்லது சமகாலத்தில் பிறமொழிகளில் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்களின் படைப்புகளையோ சகோ. முகமது ராபி தொடர்ந்து அறிமுகம் செய்யலாம்.

மஹ்மூத் ஜமாலின் கவிதையை தற்போது மொழி பெயர்த்துள்ளார் .

கவிதை தேர்வு: முகமது ராபி

மூலமொழிக் கவிதை : மஹ்மூது ஜமால்

தமிழில் : முஜிபுர் ரஹ்மான்

நீங்களும் நாங்களும்

நீங்கள் போரை பேசச் சொல்கிறீர்கள்

நாங்கள் அமைதியை பேச விரும்புகிறோம்

நீங்கள் தண்டனையை பேசுகிறீர்கள்

நாங்கள் அமைதியை பேசுகிறோம்

நீங்கள் இறைவனின் கோபத்தை பேசுகிறீர்கள்

நாங்கள் அவனின் கருணையை பேசுகிறோம்

உங்களது குரான் ஒரு ஆய்தம்

எங்கள் குரான் ஒரு கொடை

நீங்கள் முஸ்லிம் சகோதரத்துவத்தை பேசுகிறீர்கள்

நாங்கள் மனித சகோதரத்துவத்தை பேசுகிறோம்

நீங்கள் மற்றவர்களை எச்சரிக்கை செய்ய விரும்புகிறீர்கள்

நாங்கள் அவர்களை வரவேற்கிறோம்

நீங்கள் நரகத்தைப்பற்றி பேச விரும்புகிறீர்கள்

நாங்கள் சொர்க்கத்தைப் பற்றி பேச விரும்புகிறோம்

நீங்கள் அமைதியின்மையை பேசுகிறீர்கள்

நாங்கள் உற்சாகத்தை பேசுகிறோம்

நீங்கள் சட்டத்தைன் ஆராதனை செய்கிறீர்கள்

நாங்கள் தெய்வீகத்தை ஆராதிக்கிறோம்

உங்களுக்கு மௌனம் தேவை

எங்களுக்கு இசை தேவை

உங்களுக்கு மரணம் தேவை

எங்களுக்கு வாழ்க்கை தேவை

நீங்கள் அதிகாரத்தை பேசுகிறீர்கள்

நாங்கள் அன்பினை பேசுகிறோம்

நீங்கள் தீமையை தேடுகிறீர்

நாங்கள் நல்லத்தை ஆதரிக்கிறோம்

நீங்கள் வாளை குறித்து கனவு காண்கிறீர்

நாங்கள் ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம்

நீங்கள் இந்த உலகம் பாலைவனம் என்கிறீர்

நாங்கள் இந்த உலகம் பூந்தோட்டம் என்கிறோம்

நீங்கள் எளிமைக்கு முன்னுரிமை தருகிறீர்

நாங்கள் அலங்காரத்துக்கு முன்னுரிமை தருகிறோம்

நீங்கள் அழிக்க விரும்புகிறீர்கள்

நாங்கள் உருவாக்க விரும்புகிறோம்

நீங்கள் திருப்பி அழைக்கிறீர்கள்

நாங்கள் முன்னேறி செல்ல விரும்புகிறோம்

நீங்கள் மறுதலிக்கிறீர்கள்

நாங்கள் நிறுவுகிறோம்

ஆயினும் ஒன்று உள்ளது

நாம் கண்ணோடு கண் எப்போது சந்திப்போம்

நீங்கள் நீதியை விரும்புகிறீர்கள்

நாங்களும் தான்

மஹ்மூத் ஜமால்

Series Navigation”பின் புத்தி”பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *