அதுவே… போதிமரம்….!

This entry is part 32 of 41 in the series 8 ஏப்ரல் 2012

பகவானே….என்ன சோதனை…. இது? ….என் தலையெழுத்தே… இவ்வளவு தானா? அவருக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாதே……அவரைக் காப்பாத்தும்மா… தாயே… உன் கோயில் வாசல்ல…..வந்து மண்சோறு சாப்பிடறேன்…அவர் என்ன செய்திருந்தாலும் அவரை மன்னித்துவிடு… தாயே…லோகமாதா…அவரை எனக்கு திருப்பித் தா…இது நாள் வரைக்கும் உன்னையன்றி எனக்கு வேற எந்த கதியும் இல்லையே..என் குடும்பத்தைக் காப்பாத்திக் கொடும்மா…அகிலாண்டேஸ்வரி…
இதயத்தைப் பிழிந்து வேண்டிக் கொண்டதால் வேதனையில்… கண்களில் இருந்து போல பொலவென்று கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

இந்தக் கலங்கிய கண்களுக்கு காரணமான மீனாட்சியின் கணவர் சுரேஷ் இப்போது விபத்தில் படுகாயமடைந்து பஞ்சகுட்டாவில் இருக்கும் நிம்ஸ் ஹாஸ்பிடலில் அவசர சிகிச்சைப் பிரிவில் நினைவுகள் தப்பிய நிலையில் ஈ.சி.ஜி., சி.டி.ஸ்கேன் எல்லாம் எடுத்து பிளாஸ்டிக் குழாய் மூலமாக சிரமத்தோடு மூச்சு இழுத்து விட்டுக் கொண்டிருந்தார். அவரை….அந்த நிலையில் பார்த்துவிட்டு வந்ததில் இருந்தே.. மீனாட்சிக்குத் தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பது போல் உடல் நடுங்க ஆரம்பித்தது.

அனிச்சையாக தொழுத கரங்கள் கழுத்திலிருந்து மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு விம்மிய படியே பூஜை அறையை விட்டு வெளியே வந்தாள் மீனாட்சி.கைகளும் கால்களும்….வெட..வெட வென….நடுங்க…வயிறுக்குள் மாவரைப்பது போல வினோத உணர்வு.

மருத்துவர் கொடுத்த கெடுவுக்கு இன்னும் முழுதாக ஒரு நாள் இருக்கிறது. இதயம் சதா சர்வ காலமும் அம்பாளையே…. எண்ணி பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. மருத்துவ மனைக்கும் வீட்டுக்கும் ஆட்டோவில் வந்து போய்க் கொண்டிருந்தாள் மீனாட்சி. வேறு என்ன செய்வது..? உறவே இல்லாத சொந்தத்தில் மணம் முடித்த பாவம் இது….தனியாய் அனுபவிக்க வேண்டியிருக்கு.

வீடு முழுதும் சூனியமாக…..அவர் குரல் கேட்காமல் மனம் வெறித்துப் போயிருந்தது.இப்படியாகும்னு யார் கண்டா…நேத்து ராத்திரி பூரா வேண்டாத பிரச்சனை…அதே கோபம் தொடர்ந்ததால்….காலையில் முகம் கொடுத்துக் கூட பேசப் பிடிக்காமல் சுவற்றிற்கும்….மோட்டுவளைக்கும்…பதில் சொல்லி….கார் கிளம்பி கேட்டைத் தாண்டியதும்…..நிம்மதியாய் மூச்சு விட்டு….அடிக்கடி நடக்கும் நாடகம் தான் இது…இன்று மட்டும் ஏனோ மாறிப் போனது…அவர் ஆபீஸ் போயிருக்க வேண்டிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப் பட்டிருக்கிறார்.. இரண்டு போலீஸ் காரர்கள் வீட்டைத் தேடி கண்டுபிடித்து வந்து…விஷயம் சொன்னதும்….நிஜத்தின் பயங்கரம் விஸ்வரூபமெடுத்துப் பூதாகாரமாக நெஞ்சில் ஆடிக் கொண்டிருந்தது.

மீனா…ஏய்….செவிட்டுப் பொணமே….எத்தனை தரம் சொல்றது உனக்கு..? ஒரு தடவை சொன்னால் உன் மர மண்டையில் ஏறாதா? உனக்குப் பார்க்கணும்னா…. வேற எங்கேயாவது மாட்டித் தொலைச்சுக்கோ…என் கண்ணில் படாம வைன்னு ஒரு வாட்டி சொன்னாத் தெரிய வேண்டாம்……கத்திய படியே…சுவரில் தொங்கிய ..பிள்ளையார் படக் காலண்டரை அப்படியே உருவி நான்காகக் கிழித்து அப்படியே மூலையில் இருந்த குப்பைக் கூடையில் எறிந்தார். காலங் கார்த்தால எழுந்ததும் என் மூடைக் கலைகலைன்னா… . உனக்குப் பொழுதே விடியாதே…நல்ல மாட்டுக்கு ஒரு சூடு….எத்தனை வாட்டி சொன்னாலும் கேட்காத இந்த ஜென்மத்தை எதுல சேர்ப்பது..எல்லாம் என் தலையெழுத்து…இப்படி ஒரு செவிட்டுப் பொணத்தக் என் தலைல கட்டிட்டு
போய்ட்டா அந்த அத்தைக்காரி…என்னமோ உலகத்தில் இவளை விட்டால் எனக்கு வேற ஒருத்தி கிடைக்கவே மாட்டான்னு…இந்த அழகு ரம்பையை எனனோட கோர்த்து விட்டுட்டு….

அச்சச்சோ….என்ன இது…சுவாமி படத்தை இப்படி கிழிச்சுப் போடறேள்…?.உங்களுக்கென்ன பைத்தியமா..? பகவான் சும்மா இருக்க மாட்டார்…நன்னாக் கேட்பார். ஆமா… சொல்லிட்டேன்..நீங்கள் என்னை என்ன வேணா சொல்லிக்கோங்கோ..உங்களைப் பொறுத்தவரை…ஏன்…என்னைப் பொறுத்தவரை…நான் ..செவுட்டுப் பொணமாவே இருந்துட்டுப் போய்கிறேன். எங்கம்மாவப் பத்தி ஏதானும் சொன்னேளோ….நான் சும்மா இருக்க மாட்டேன்…

என்னடி பண்ணுவே…..? எகிறிக் கொண்டு வந்து அப்படியே கழுத்தை ஒரு பிடி….இருக்க…மீனாட்சிக்கு அடக்கமுடியாமல் இருமல் வந்ததும்….தான் கையெடுத்தான்….சுரேஷ்.

இருமலின் திணறலோடு….கொன்னு போடுங்கோ…..அப்படியே கொன்னு போடுங்கோ……நானும் போய் சேர்றேன்…உங்களுக்கு வாக்கப்பட்டு நான் மட்டும் என்னத்தக் கண்டேன். உலகமே நேக்கு இந்த நாலு சுவர் சிறை தானே..!

எதித்துப் பேசாதே…அடங்கு….சொல்லிட்டேன்…உறுமலோடு திரும்ப..கணவரின் கண்களைப் பார்க்க பயந்தவளாக….அடங்குவது போல் தலை தாழ்த்த…மீனாட்சிக்கு கண்ணில் இருந்த குழாய் தானே திறந்து கொண்டது. அம்..மா…..என்ன இப்படி இவன் கிட்ட பிடிச்சுத் தள்ளிட்டு போயிட்டியே…..தலை மேல இரண்டு கைய வைத்து அழுத படியே சுவரில் சாய்ந்து உட்கார..துணைக்கு இருமல் வந்து ஒட்டிக் கொண்டது.

எழுந்திருடி…என்ன ஒப்பாரி…யார் உன்னை இப்போ அடிச்சுக் கொல்றா…? போ…போயி சமையல் வேலையைப் பாரு….சத்தம் வந்தது….கொன்னுப்புடுவேன்…கொன்னு..! எப்பப் பாரு ஒப்பாரி….எப்பப்பாரு இருமல்..! எரிச்சலானார் சுரேஷ்.

ஆ…ஓ..ன்னா….ஒப்பாரி வைப்பியோ…நான் ஆபீஸ் போகணும்….உன் ஒப்பாரிய தினம் கேட்க…உனக்கு நான் தாலியக் கட்டலை…..அங்கேர்ந்து எழுந்திரு…இப்போ…. பறந்து வந்து தாக்கியது ஒரு பிளாஸ்டிக் டம்பளர்..குறி…..தவறிப் போய் அவளை உரசி விட்டு உருண்டது.

என்னப்…பிடிக்கலைன்னா…என் அம்மாட்ட அனுப்பிடுங்கோ…..என்னை ரொம்ப நீங்க சித்ரவதை பண்றேள்..தாங்கலை…..நான் தான் தினமும் செத்துப் போயிண்டிருக்கேன். நீங்கள் மட்டும் இப்படின்னு தெரிந்திருந்தால்…நானும் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன் விக்கி விக்கி அழுது கொண்டே இரும ஆரம்பித்தாள். சமயத்தில் அவளது வாய் தான் அவளுக்கு தோழிபோல் கை கொடுக்கும்.

ஏய்…மீனா…இன்னொரு தரம் வம்புக்கு வந்தியானா….நடக்கிறதே வேறடி…நான் குளிச்சுட்டு வரதுக்குள்ளே…டிபன் ரெடி பண்ணி வை…போ..! எப்பப்பாரு கைகேயி வேஷம்…! எப்பப்பாரு இருமல்..!

கொஞ்சம் கூடக் காதலோ..புரிதலோ இல்லாத கல்யாணம்….அவர்களுடையது. உறவு விட்டுப் போய்விடக் கூடாது என்னும் ஒரே எண்ணத்தில் நடந்த பொம்மைக் கல்யாணம். சில நாட்களிலையே…வேஷம் கலைந்து வெளுத்துப் போச்சு மனசு.
தன் அண்ணாவின் மேல இருக்கும் ஒரே பாசத்தில் இந்த பிரம்ம ராக்ஷசனிடம் தன் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுத்த தன் அம்மாவை மனதாரத் திட்டித் தீர்த்தாள்.. மீனாட்சி. வெறுப்பில், வேதனையில், ஆற்றாமையில், அடிமைத் தனத்தின் ஆவேசத்தில் தினம் சமைத்து சமைத்து சமையல் கூட மிகவும் காரமாகவும்…ருசி இல்லாமலும்…சமயத்தில் சப்பென்றும் இருந்து…மேலும் மேலும் சுரேஷின் அடிமன ஆக்ரோஷத்தை கிளப்பி விடும். அதன் தொடராக மீண்டும் மீண்டும் வாய்ப்போர்….மீளும் கோரமாய்த் தொடரும். பாத்திரங்கள் மோதும் தலையில், இரத்தம் சிந்தும் ! அவள் கதை ஒரு சிறு கதையல்ல அது ஒரு தொடர் கதை ! முடிவில்லை அதற்கு ! ஒவ்வொரு நாளும் இருவர் வாய்க்கும் ஏதோ ஒரு ஆயுதம் கிடைத்து விடும். ….ஒருத்தருக்கொருத்தர் ரணம் செய்து கொள்ள. அவள் வாழ்வே ஒரு குடத்துள் நிகழும் குருச்சேத்திரம் !

மாஜி….ஹாஸ்பிடல் ஆகயா….உத்தாரோ….! ஆட்டோக்காரரின் குரல் கேட்டு சிலிர்த்தவளாக…..பணத்தைக் கொடுத்துவிட்டு….கையில் கூடையை எடுத்துக் கொண்டு ஐ.சி.யு.பிரிவை நோக்கி விறு விறுவென நடந்தாள்…பகவானே..இப்போ அவருக்கு நினைவு திரும்பியிருக்க வேண்டும்….நான் இனிமேல் அவரண்ட சண்டையே போட மாட்டேன்..அவர் என்ன சொன்னாலும் வாயே…திறக்க மாட்டேன்….என் ஆத்துக்காரர் பிழைச்சுக்கணும்….அவர் பாவம்..ரொம்ப நல்லவர்…அவரை மன்னிச்சுடு….பிள்ளையாரப்பா….!

உனக்கு நூத்தியெட்டு கொழக்கட்டை செய்து தரேன்….நூத்தியெட்டுத் சிதறுகாய் உடைக்கறேன்…..அவரை தண்டிக்கறேன்னு நினைத்து என்னை தண்டித்து விடாதேப்பா…..மனசுக்குள் பிள்ளையார் வந்து போனார்….” இரு…இரு…என் காலண்டரைக் கிழித்தான் இல்லையா…..அவனுக்குப் புத்தி புகட்டணும்…” என்று சொல்வது போல் இருந்தது…மீனாட்சிக்கு. அரண்டவள் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்….அதுபோல்….மீனாட்சி கலங்கித் தான் போயிருந்தாள்.

நீண்ட வராண்டாவைக் கடந்து அங்கிருந்து லிப்ட் ஏறி முதல் மாடிக்குப் போய் அவசரப் சிகிச்சைப் பிரிவுக்கு முன்னால் சென்று நின்றதும் தான் கொஞ்சம் நிம்மதியாயிற்று.

பார்வையாளர்கள் நேரம் தான் என்பதால் உள்ளே சிரமமில்லாமல் நுழைந்தாள்.. குளிரூட்டப் பட்ட அறையில் மெல்லிய டெட்டால் கலந்த மருந்து வாசனை மீனாட்சியின் காலி வயிற்றை ஒரு புரட்டு புரட்டியது. கூடவே ஏதோ பயஉணர்வு. தயக்கத்தோடு கணவரின் படுக்கை அருகே செல்கிறாள்….பிரஜ்ஜையே இல்லாமல் அவர் கண்களை மூடிக் கொண்டு இந்த உலகத்திற்கும் தனக்கும் உறவே இல்லை என்று உறங்கிக் கொண்டிருக்கிறார்…கூடையை பக்கத்தில் வைத்து விட்டு…அங்கிருக்கும் டியூட்டி நர்ஸிடம்… சிஸ்டர்…அவர் கண் விழித்துப் பார்த்தாரா? இப்போ எப்படி இருக்கிறார்? என்று கேட்க….

கவலைப் படாதீங்க…அப்சர்வேஷன் இல் தான் இருக்கார்….சரியாகிவிடுவார்…என்று நம்பிக்கை சொன்னாள்.

சரியாகுமா…சிஸ்டர்…டாக்டர் வந்து பார்த்தாரா? என்ன சொன்னார்…? கவலை தோய்ந்த குரலில் மெல்ல கேட்க..

சரியாகும்…இதைவிட பயங்கரக் கேஸ் எல்லாம் சரியாயிருக்கு….இவருக்கு அதிர்ச்சி அவ்ளோதான்…என்று சொல்லிவிட்டு சிஸ்டர் ஏதோ…எழுதிக் கொண்டிருந்தாள்.

சுரேஷின் முகத்தைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அந்த அறையில் அவரையும் சேர்த்து ஆறு படுக்கைகள்…மெல்லக் கண்களை அந்த அறையை சுற்றி ஓட விட்டாள்…மீனாட்சி…ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான நோயாளிகள்…சிஸ்டர் அமர்ந்த இடத்துக்கு மேலே..பார்த்தால் ஓர் அதிர்ச்சி. சுவரில் கண்ணாடிச் சட்டத்தில் பிள்ளையார் படம் என் கணவரைப் பார்த்து சிரித்தபடியே……. மீனாட்சிக்கு ஒரு நிமிடம் திக் என்றது..முதல் நாள் காலை நடந்தது மீண்டும் நினைவுக் கதவைத் திறந்து வைத்தது. இவர் கண்களில் இந்தப் பிள்ளையார் பட்டுவிட்டால் கண்ணாடிப் படத்தின் கதி என்னவாகும் ???

எப்படி இருந்தவர்..சுரேஷுக்குக் கணீர் என்ற குரல்….அந்தக் குரலில் எப்பவும் என்னைத் திட்டித்தீர்ப்பதே அவரது ஒரே பொழுது போக்கு…இன்னும் அவருக்கு நான் அவருக்குப் பிடிக்காத அத்தை மகள் சொத்தை தான்.

குழந்தை பெற்றதும் அந்தப் பிரசவத்தில் இறந்து போனாள் சுரேஷின் தாய். தாயில்லாத குழந்தையை சுரேஷின் அப்பா சுப்ரமணியன் தன் தங்கை…அலமேலுவின் உதவியோடு வளர்த்தார். அலமேலு தன் கணவர் விசுவுடன் தங்களது ஒரே மகள் மீனாட்சியுடன்.. மாயவரத்தில் சமையல் வேலைகள் செய்து வாழ்ந்தனர்.

தாயின் முகத்தைக் கூட காணாத சிறுவன் சுரேஷுக்கு இறைவன் மீது சொல்ல முடியாத அளவுக்கு வெறுப்பு.இறைவனே இல்லை என்று எகத்தாளமாகப் பேசிக் கொண்டிருப்பான். அவனது அப்பாவும் விரக்தியின் மேலீட்டால் இதைப் பெரிது படுத்தாமல் விட்டு விட்டார்.

சுரேஷும் இன்ஜினியரிங் படித்து முடித்து ஹைதராபாதில் வேலையும் கிடைத்து கை நிறைய சம்பாதிக்கும்போது..தான் சொந்தம் விட்டுப் போகக் கூடாது…என் தங்கைக்கு என்னை விட்டால் யாருமில்லை…அவளது பெண்ணுக்கு உன்னால் தான் வாழ்க்கை தர முடியும்..அவாளுக்கு நம்மை விட்டால் யாரு இருக்கா? என்று சொல்லி மீனாட்சியை சுரேஷுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.

ஆசை அறுபது நாள் கூட நிற்கவில்லை திருமணம்…மீனாட்சியின் தெய்வ பக்தி, விரதம், ஆச்சாரம் எதுவும் சுரேஷுக்குப் பிடிக்க வில்லை…இது போதுமே…பொழுது விடியும் போதே…..பிரச்சனையும் புதிதாக வெடிக்கும்…இவர்களுக்கு.
அன்றும் அப்படித்தான் ஆபீஸ் போகும் முன்பு…எதற்கோ கோபித்துக் கொண்டு போனவர்…நேரா….இங்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேருவார் என்று யார் நினைத்தார்..? விஷயம் தெரிந்ததும் நான் பக்கத்தாத்துக்கு அழுதுண்டே ஓடிச் சென்று
சொன்னதும் அந்த மாமியும் மாமாவும் தான் எனக்கு தைரியம் சொல்லி என்னோடு ஆஸ்பத்திரிக்கும் கூட வந்தார்கள்.

பக்கத்தாத்து மாமாவும் மாமியும்….வயதில் எழுபதைத் தாண்டியவர்கள் தான். மாமிக்கு சுத்தமா ரெண்டு காதும் கேட்காதாம்…ஹியரிங் எய்டு சாதனம் வெச்சுண்டு தான் சமாளிப்பாளாம்.. இருந்தாலும் அவா ரெண்டு பேருக்கும் இருக்கும் அன்பும், புரிதலும்,..அதிசயிக்க வைக்கும். ஐம்பதாம் ஆண்டு திருமண நினைவைக் கொண்டாடப் போறாராம். அந்த அளவுக்கு ஒற்றுமையான தம்பதிகள். ஒருத்தருக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போய்டுவா…குடும்பம்னா இப்படி இருக்கணும்.இதுக்கெல்லாம் வரம் வாங்கீண்டு வந்து பிறக்கணும்….நானும் இருக்கேனே…அதிர்ஷடகட்டை….!

குளுகோஸ் முழுதும் இறங்கிவிட்ட நிலையில் பாட்டில் காலியானதை உணர்ந்து…”சிஸ்டர்….இங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்க…பாட்டில் மாத்திட்டுப் போங்களேன்…மீனாட்சியின் .குரலில் அவசரம் இருந்தது.

“இதோ வரேன்மா” கையில் பாட்டிலோடு வந்த சிஸ்டர்…சுரேஷுக்கு இன்னொரு பாட்டில் மாட்டி விட்டுட்டு…நாடியைப் பிடித்து பல்ஸ் பார்த்தபடியே…”இப்போ இன்னொரு ஆக்சிடென்ட் கேசு…தலைக்காயம்…..நேரா…அறுவை சிகிச்சைன்னு தியேட்டர் போயாச்சு….ரொம்ப சீரியஸ் கண்டிஷன்”..உங்கள் அதிர்ஷ்டம்…..இவர் பிழைத்தார்” என்று வாக்கு சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

“மீனா…மீனா…..என்ற மெல்லிய குரல்…என்னாச்சு…எனக்கு மீனாக்ஷி…? சுரேஷிடம் இருந்து வர….
ஆச்சரியத்தில் “நினைவு வந்துடுத்து” பரவசம் மனமெங்கும் பரவ…இதொன்னா…இங்க தான் இருக்கேன்..உங்க பக்கத்தில்….இதோ…உங்களுக்கு ஒண்ணும் இல்லை..ஒண்ணும் ஆகாது….வெறும் அடிதான் பட்டிருக்கு….சீக்கிரம் சரியாயிடும்…..தாயே…அகிலாண்டேஸ்வரி…..நெஞ்சில் பாலை வார்த்தாயம்மா…ஆனந்தக் கண்ணீர் ஆறாய் பெருக…சிஸ்டர் இங்கே வாங்க சீக்கிரம்….இவருக்கு நினைவு திரும்பிவிட்டது….என சொல்லும்போதே..அக்கம்பக்கத்து படுக்கைக் காரர்கள் அனைவருமே..தங்களது துன்பங்களையும் மறந்து மகிழ்ந்தார்கள்.இதற்காகவே காத்திருந்தது போல போலீஸ் காரர்கள் ஏதேதோ பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் சொன்ன கெடுவுக்கு முன்னதாகவே நினைவு திரும்பி…மெல்ல மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் சுரேஷ். காயங்கள் ஆறியதும்…இன்னும் இரண்டு நாட்கள் இருந்துட்டு நீங்கள் கிளம்பலாம்….வீட்டில் சென்று ஒரு வாரம் ஓய்வு எடுத்துக் கொண்டால் போதும்…பிறகு பழையபடி….ஓடுங்கள் வேலைக்கு…. என்று உற்சாகமாக சொல்லிவிட்டு அடுத்த நோயாளியைக் காணச் சென்றார் டாக்டர். மீனாட்சியின் நிறைந்த மனசு அவளது முகத்தில் பிரதிபலித்தது.

சுரேஷ் படுத்தபடியே அங்கிருக்கும் மற்றைய நோயாளிகளை கவனித்து வந்தார்.உடல் முழுதும் தீக்காயங்களோடு…..ஒரு பெண் வேதனையில் முனகிக் கொண்டிருக்க அருகில் அவளது தாய் கதறியபடி “இப்படி பண்ணிட்டாளே……இவள் கணவன் குடித்து விட்டு வந்து தெனம் தெனம் அடிக்கிறார் னு வந்து புலம்பும்…அந்தக் கொடுமையை தாங்காமல் இப்படி செய்யும்னு நினைக்கலியே…..நான் என்ன செய்வேன்…” புலம்பினாள்.

ஆஸ்துமாவால் மூச்சு விட முடியாமல் ஒரு முதியவர் செயற்கைக் குழல் மூலமாக சிரமப்பட்டு இழுத்து சுவாசித்துக் கொண்டு வேதனையோடு கிடந்தார். அவரருகில் அவரது மகன் கவலையோடு அமர்ந்து கொண்டு அவரது கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டு ஏதோ மென்மையாக பேசிக் கொண்டிருந்தார்.

இதுபோல் எந்தப் பக்கம் திரும்பினாலும் உயிருக்குப் போராடும் ஒருவரைச் சுற்றி நம்பிக்கையோடும், கருணையோடும் உறவுகள்..மனிதாபிமானத்துடன் தனக்குப் பாடம் சொல்வது போலவே உணர்ந்தான் சுரேஷ். உலக இன்பத்தின் மறுபக்கம்….இங்கு வாழ்ந்து கொண்டிருப்பது புரிய ஆரம்பித்தது அவனுக்கு.உயிரின் மதிப்பும், மனித நேயமும் நெஞ்சில் மின்னலாய்ப் பாய்ந்தது.

மேலும்…..காலை எழுந்ததும்…அனைவரின் பார்வையும்…வேண்டுதலும் அங்குள்ள பிள்ளையார் படத்தை நோக்கி சென்று தொழுது….நிம்மதியடையும் அவர்களின் மனநிலையும் புரிந்தது. இத்தனை நாட்கள் தான் கேலி செய்து அன்று கிழித்த பிள்ளையார் படம் இப்போது அவனைப் பார்த்துச் சிரித்தது. நல்ல வேளை, விபத்தில் பிள்ளையார் அவன் வயிற்றைக் கிழித்துப் பழிவாங்க வில்லை ! சிந்திக்கலானான்.

பிள்ளையார் தன்னையே உற்றுப் பார்த்து….உன்னை என்னால் ஒன்றும் செய்ய முடியாது…ஆனால் என்னால் உன்னை….!!! என்று பயமுறுத்துவது போலிருந்தது.

அவனது உள்ளத்தில் அஞ்ஞானம் வெடித்துச் சிதறுவது போலிருந்தது…ஆழ்மனத்தில் புதைந்திருந்த மனிதன் தட தட வென்று மேலேறி வந்து கொண்டிருந்தான். கண்மூடிக் கிடந்தார் சுரேஷ்..மனதின் மனிதாபிமான அறைகள் ஒவ்வொன்றாகத் திறக்க ஆரம்பித்ததை ….உணர முடிந்தது.

“ஐய்யயோ என்னை விட்டுட்டுப் போய்டீங்களே…..நான் என்ன செய்வேன் ” என்ற அலறல் அந்த வார்டையே உலுக்கி எழுப்பியது. அன்று விபத்தில் தலைக்காயத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது….தெரியவந்தது. அனைவரின் நெஞ்சும் திக் திக் கென வேகமாக அடித்துக் கொண்டது. ஒரே ஒருமுறை மரணத்தின் பிடியில் அகப்பட்டு தப்பி விட்டால் போதும்……மரண பயம் ஒவ்வொருவரையும் நல்லவராக்கும். நாத்திகனும் இறைவன் முன் தலை குனிவான். மனிதனுக்கு மரண பயம் ஒரு நல்ல ஆசான் !

அந்த சிஸ்டர் கூட சொன்னாள்….கடவுள் புண்ணியத்தில் உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை…..இல்லாவிட்டால்…நான் என்ன செய்திருப்பேன்….என்று மீனாட்சி சிலிர்த்துக் கொண்டு சொல்ல..

விரக்தியோடு சிரிக்க முயன்றான் சுரேஷ்…அவரது கண்களிலிருந்து முதல் முறையாக கண்ணீர்…அவரது மன அழுக்கை கழுவிக் கொட்டியது. பாசம் மனமெங்கும் வாசமாய் வீசியது. “என்னை மன்னிச்சுடு மீனாட்சி….” அவளது கையைப் பற்றினான்.

என்னன்னா…. இது சின்னக் குழந்தையாட்டமா அழுதுண்டு…விடுங்கோ….அழாதேங்கோ…பகவான் ஒன்றை உரித்து இன்னொன்றைப் புரிய வைப்பார்…அவரோட ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். இப்போ தான் அது எனக்கும் புரிந்தது….சொல்லியபடியே சுரேஷின் கரங்களை ஆதரவாகப் பற்றி ஈரக் கண்களில் ஒற்றிக் கொள்ள அதில் ஒரு அன்பின் உறுதியும் சேர்ந்து அழுந்தியதை உணர்ந்து…அவளது மனபாரம் முழுதும் அவளைவிட்டு சட்டென இறங்கியது போலிருந்தது.

டிஸ்சார்ஜ் செய்து அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பும்போது ஒரு குரல்…நல்லா… இருங்க….முடியும்போது வந்து பார்த்துவிட்டுப் போங்க நான் இன்னும் பத்து நாட்கள் இங்கே தான் இருப்பேன்..என்றதும்…..

“கண்டிப்பா வரோம்.” விடைபெற்றுக் கிளம்பியதும் …மெல்ல மெல்ல டெட்டால் வாசனையைத் தாண்டி உலக வாசனையோடு
வெளிக் காற்று வீசத் துவங்கியது.

பத்து நாட்களாக வெளியுலகத்திலிருந்து தொடர்பறுந்த நிலையில் சுரேஷ்…வானத்தைப் பார்த்ததும்….பூமியின் நிர்மலமான மனது வானம் தான் என்று உணர்ந்தான்.

சுரேஷுக்கு தனது வீடே…புதிதாகத் தெரிந்தது.. வீட்டுக்குள் நுழையும் போது தானும் புதியவனாக நுழைந்தார். .அவரது பொருட்கள் அனைத்தும் அவரது வருகைக்காகக் காத்திருந்தது போலிருந்தது.விபத்துக்கான தனது புதிய கார் உருக்குலைந்து கிடந்து எதுவும் நிரந்தரம் இல்லை என்று சொல்லியது. அதனருகில் சென்று தொட்டுப் பார்த்ததும்…. தான் அதிசயமாக உயிர் பிழைத்தது புரிந்து மனசுக்குள் இறைவனுக்கு நன்றி சொன்னார்.

மெல்ல மெல்ல வீட்டின் சகஜ நிலைக்கு வந்து இரண்டு நாட்களாயிற்று.

மீனாக்ஷி அவசர அவசரமாக பரபரத்துக் கொண்டிருந்தாள்…..சமயலறையில்….என்ன மீனா…என்ன செய்கிறாய்?

கொழக்கட்டை…..உங்களுக்கு நலமானதும் பிள்ளாயாருக்கு படையலுக்கு வேண்டிண்டேன்…தேங்காய் உடைகிறேன்னும் வேண்டீண்டுருக்கேன்.அப்புறம் அம்மன் கோயில் வாசல்ல மண் சோறு சாப்பிடரதாகவும் …வேண்டின்றுக்கேன் ..நீங்க தான் எனக்கு துணை நிற்கணும்.அவளது ஆச்சரியத்தை அதிகம் பண்ணும் வண்ணம்…சரிம்மா..இன்னைக்கே முடிச்சுடு..அப்பறம் அப்படியே ஹாஸ்பிடல் போய் நான் இருந்த அந்த வார்டையும் ஒரு பார்வை…ஏதாவது வாங்கிண்டு போய் கொடுத்து பார்த்துட்டு வந்துடலாம் சரியா…..என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

வேண்டுதல்கள் யாவும் ஒரே நாளில் அதுவும் அவர் அருகில் இருக்க நிறைவேற்றிய நிம்மதியில் இருந்தாள் மீனாக்ஷி. மருத்துவமனையில் சுரேஷ் இருந்த படுக்கையில் வேறொருவர் கட்டுக்களோடு படுத்திருந்தார். எல்லோருக்கும் பழங்களும் கோயில் பிரசாதமும் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர். மீனாட்சிக்கு மட்டும் ஏனோ இருமல் இருந்து கொண்டே இருந்தது.

இரவில் ஒரே இருமல் தாங்காமல் எழுந்து உட்கார்ந்தாள்…தொண்டையை எதுவோ அழுத்துவது போல் உணர…இருமல் அதிகமாக…அதிகமாக..பயந்து போனாள்.

அருகில் இருந்த சுரேஷ் எழுந்து…என்னாச்சும்மா..மீனா? ஏன்…இவ்வளவு இருமல் உனக்கு…பிள்ளையாரப்பா..இவள் இருமலை சரி செய்யேன்… அவனை அறியாமல் வேண்டிக்கொண்டான்.

ஒண்ணும் இல்லை…அலைச்சல்…அசதி….கண்ட தண்ணி குடிச்சதால இப்படியிருக்கும்…சரியாகும்…சொல்லிவிட்டுப் படுத்தாள்.. கணவனின் செயல்கள் அனைத்தும் அவளுக்கு மிகவும் நிம்மதியாக நிறைவாக இருந்தது…..மருத்துவமனையை நன்றியோடு நினைத்துக் கொண்டாள்….ஆமாம்..அவருக்கு அதுவே…போதிமரம்….என்று எண்ணிக்கொண்டாள்.

ஆனாலும் இருமல் விடாமல் துரத்தியது மீனாட்சியை.மாலையில் மருத்துவமனையில் பிடித்த இருமல் இன்னும் விட்ட பாடில்லை. சுரேஷ் டாக்டர்ட்ட போகலாம் வா மீனு என்று அழைக்க வேண்டாம்..வேண்டாம்…ஒரு மிளகு கஷாயம் வெச்சு சாப்டா சரியாயிடும் என்று தட்டிக் கழித்தாள். அடுத்த சிலநாளில் உடல் நிலை மிகவும் மோசமாகி….எதையும் தாங்கும் திராணியற்று இரவில் படுத்தவள் காலையில் எழுந்திருக்கவே இல்லை….அவளது மரண செய்தியை அவள் விரைத்த உடல் சொல்லியது.

அச்சசோ…என்னாச்சு…மீனு…மீனு…மீனும்மா…என்னை விட்டுட்டு போயிட்டியா..? எனக்கு உலகத்தைக் காட்டிவிட்டு நீ பறந்துட்டியே…உண்மை சுட்டுப் பொசுக்க….அவளைத் தூக்கி மார்போடு சேர்த்துக் கொண்டு கதறிக்கொண்டிருந்தார் சுரேஷ்.
“நான் ..செவுட்டுப் பொணமாவே இருந்துட்டுப் போய்கிறேன்..” அவளது வார்த்தைகள் செவிப்பறையைத் தாக்கியது கண்முன்னே சுவரில் அன்று அவன் துண்டாகக் கிழித்து வீசிய பிள்ளையார் படம் ஒட்டிச்சேர்த்து…மாட்டியிருந்தாள் மீனாட்சி..

கிழிந்த படத்தை ஒட்டி விடலாம். ஆனால் உயிர் கிழிந்த உடல் ? சில தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது….என்று சொல்வது போலிருந்தது…..அந்தப் படம்.

Series Navigationஉங்களில் யார் அடுத்த பிரபுதேவாசவக்குழி
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

20 Comments

  1. Avatar
    தி.தா.நாராயணன் says:

    சகோதரி,
    இரண்டாவது பத்தியிலேயே கதையினுள்ளே ஈர்த்துக் கொள்ளுகிறீர்கள்.தெளீவான நடை,விவரிப்பு.கதையை படித்து முடிக்கும் போது தோன்றிய கருத்து.–கதையின் உச்சத்தை தொட்டுவிட்ட பின்பும் எதற்காக மீனாட்சியை சாகடித்தீர்கள்? என்று கேட்க விழைகிறது மனசு.

  2. Avatar
    punai peyaril says:

    விறுவிறுப்பான கிரிப்பான நடை… ஒரு வகையில் இந்த மாதிரி கதைகள் நல் விளைவையே ஏற்படுத்தும். இருப்பதை இழுந்த பின் புலம்பக் கூடாது என்று…. நிச்சியம் நமது நாட்டில் அதிகமாக அலசப்பட வேண்டியது, பொருளாதார ரீதியான தனித்துவம் பெறாத பெண்கள் பற்றிய அலசல்கள்… நீங்கள் எழுதலாமே…. உங்களிடம் கதை சொல்லுதல் இலகுவாக காட்சியமைப்பை மனதில் விரிப்பதாக இருக்கிறது… இது சாதாரணமாக கைகூடாத ஒன்று.. உங்களுக்கு அமைந்திருக்கிறது….

  3. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் ஜெயஸ்ரீ,

    மனதைப்பிழிந்த கதை…. எத்தனை எத்தனை மீனாட்சிகள் இப்படி நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மீனாட்சியின் இழப்பு புகட்டிய பாடம்தான் வீணாகிவிட்டது….

  4. Avatar
    Dr.G.Johnson says:

    ATHUVE… BOTHIMARAM by JAYASRI SHANKAR, is a short story with many hidden messages. She has symbolised the hospital as the Bothi tree where Suresh receives his enlightenment on God.Before that fatal accident he was aversed to the believes, rituals and fasts by his wife MEENATCHI ever since their marriage. It was because he had never seen his mother. She died during his birth . He was looked after by ALAMELU his aunty who was also MEENATCHI’s mother. After his graduation as an Engineer SURESH and MEENATCHI were married to foster the close family relationship. Their married life was not rosy, but marred with frequent quarrels and misunderstandings. On the day of the accident Suresh left the house in anger. He was so disgusted with the PILLAIYAR picture calendar that he tore it to pieces. At that instant MEENATCHI actually warned him of GOD’S wrath and punishment for his unholy act. When she heard of the accident, she was reminded of it and begs PILLAIYAR to forgive him and save his life. She promises to eat mud rice, offer 108 ‘ kozhukattais ‘ and break 108 coconuts for PILLAIYAR. During his recovery period, when he regained his consciousness, he sees the scene around him in the ward. He is moved to see how relatives are anxious and eager for the life of their sick ones. He realises the worth of life and the essence of humanity. For every man the fear of death is a good teacher and guide. The fear of death makes an atheist bow his head before GOD! He repents for ill treating MEENATCHI and the tears from his eyes wash away the dirt in his soul. He looks at the PILLAIYAR picture on the wall and repents. He feels HE is laughing at his ignorance. The story is fine up to his discharge from the hospital and their offering to PILLAIYAR as promised. Why this nagging cough of MEENATCHI and how the sudden death because of the cough? She had no ASTHMA, TB or HEART FAILURE. It seems to be a chronic cough. Hence her death in this manner is totally unwarranted and unacceptable. JAYASRI SHANKAR should be careful in the future as to how she kills her characters. Anyway a very well written short story full of emotion and purpose. BEST WISHES from Dr.G.Johnson.

  5. Avatar
    ஜெயபாரதன் says:

    டாக்டர் ஜான்சன் மீனாட்சி இறந்ததின் காரணம் சரியில்லை என்கிறார். அவளுக்கு ஆரம்பம் முதல் தொடர் இருமல் இருப்பது சொல்லப் பட்டுள்ளது, அவள் தன் நலத்தை பேணவில்லை என்பது கதையில் நன்றாகத் தெரியுது. . பிள்ளையார் படத்தைக் கிழித்தால் அவர் தண்டிப்பார் என்று கதையில் கூறப்பட்டுள்ளது.. மீனாட்சி மரணமே சுரேஷுக்குத் தண்டிப்பு. சில தவறுகள் இறைவனால் மன்னிக்கப் படுவதில்லை என்னும் நியதி கதை முடிவில் காணப் படுகிறது.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      jayashree shankar says:

      மிக்க நன்றி திரு.ஜெயபாரதன் அவர்களே…தங்களின் புரிதலுக்கு நன்றி.

      வணக்கத்துடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

  6. Avatar
    jayashree shankar says:

    இந்தக் கதையை வாசித்த அன்பர்களுக்கு,

    வணக்கம்.பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.

    “மருத்துவமனையை நன்றியோடு நினைத்துக் கொண்டாள்….ஆமாம்..அவருக்கு அதுவே…போதிமரம்….என்று எண்ணிக்கொண்டாள்.”
    இத்தோடு கதை அதன் உச்சத்தைத் தொடவில்லை…இது மீனாட்சி மட்டும் உணர்ந்த உணர்வு. அதையும் மீறி கதைக்குள் சென்று
    சுரேஷ் போன்றவர்களுக்கு….ஒரு பாடம்:

    .தனது மனைவியின் உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டால் தான் தானும் நிம்மதியாக வாழ இயலும்.
    …மனைவிக்கு உடல் நிலையில் தெரியும்படியான மாற்றங்கள் இருப்பின் உடனே சிகிச்சை மேற்கொள்ளுதல் அவசியம்.
    …தெய்வ நம்பிக்கை இருக்க வேண்டியது தான்..அதற்காக சிலர்…பூக்குழி இறங்குகிறேன் என்று அது முடிவுற்றதும் உடலெங்கும்
    தீக்காயங்களோடு போராடிக் கொண்டிருப்பார்கள்….. அதுவோ..அல்லது இது போல் கோயில் வாசலில் வேண்டுதலுக்காக …
    மண்சோறு சாப்பிடுகிறேன் என்றும் வேண்டுதல் நிறைவேற்றி…பலவித தொற்றுகளில் அவதிக் குள்ளாகி அல்லல் படுவார்கள்.
    இது சிலநேரங்களில் உயிருக்கு உலை வைக்கும்…

    மீனாட்சிக்கு மட்டும் சுரேஷின் மருத்துவமனை விஜயத்தின் அனுபவ உணர்வுகள் …போதிமரமாக…ஞானம் தந்ததாக உணர்ந்தாள்.
    நிஜத்தில்…மீனாட்சியின் மரணம் தான் சுரேஷுக்கு ஒரு பூரண ஞானத்தைத் தந்தது. அந்த மரணஅடிக்குப் பின்னால் தான் சுரேஷ்
    வாழ்வின் உன்னதத்தைப் புரிந்து கொண்டிருப்பார்.எப்பவுமே பட்டபின் தெளியும் புத்தி.மேலும் சில தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது.
    தெய்வம் நின்று கொல்லும். சுரேஷைப் பழிவாங்க…மீனாட்சியை கொன்ற பாவம் எனக்குத் தான்.இருப்பினும்…

    இந்தக் கதைக்குக் கருத்துகள் சொல்லி வாழ்த்திய தி.தா.நாராயணன் அவர்களுக்கும், புனை பெயரில் அவர்களுக்கும், மேடம் பவளசங்கரி
    அவர்களுக்கும், டாக்டர். ஜான்சன் அவர்களுக்கும் , எனது மனமார்ந்த நன்றிகள்…
    வணக்கத்துடன்.
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  7. Avatar
    ganesan says:

    I wish that the author should allow Meenakshi to live and correct Suresh and make him to feel how important her presence is instead of killing Meena character….Anyhow it is wellnarracted emotion packed story….keep it up…

  8. Avatar
    Dr.G.Johnson says:

    I read with interest the comments by Mr.Jayabharathi and Ms,Jayashree Shankar. I am still not convinced about the death of Meenatchi. Of course she had cough for a long time. Though the couple quarrel often there is no reason why they should not go to a doctor for treatment. After all Suresh is an engineer. He should have known chronic cough could be a sign of Tuberculosis. If Meenatchi is suffering from TB, it could very easily spread to Suresh through close contact. It could not have been Asthma as she had no wheezing. Anyone dying of severe cough as stated is incredible. Mr.Jayabharathan has said that Meenatchi’s death is the punishment for Suresh’s wrongdoing and that God will not pardon certain wrongdoings. I beg to differ. GOD is the embodiment of LOVE and COMPASSION. This is taught by all religions. Meenatch has pleaded with PILLAIYAR to forgive Suresh and she has also fulfilled all the three vows immediately. Suresh too has repented in the hospital ward. In such a situation why should Meenatchi die to make life miserable for Suresh? Ms.Jayashree Shankar has stated that through Meenatch’s death Suresh is made to realise the sanctity of life and he has become whole in knowledge. But whatever may be the knowledge gained in this manner, he is not going to be happy anymore without Meenatch. He would instead be more depressed and revert back to his old nature of not believing in GOD. Earlier he did not care to worship GOD as he lost his mother during his birth. Now he is made to lose his wife . Is this fair? Can we expect him to be thankgful to GOD for his present lonely life? Furthermore the writer has said that for certain wrongdoings there is no pardon. I am of the opinion that if a person regrets for his or her wrongdoing, repents and ask GOD for forgiveness, GOD who loves all mankind will forgive him or her.In this story the wrongdoing of Suresh is the tearing of the picture of PILLAIYAR. Both Suresh and Meenatchi regretted and asked for forgiveness. It is not a crime befitting the death of Meenatchi. Anyway this thought-provoking short story has hidden meanings and the credit goes to the writer JAYASHREE SHANKAR. ..Dr.G.Johnson.

  9. Avatar
    ஜெயபாரதன் says:

    டாக்டர் ஜான்ஸன்,

    மகாத்மா காந்தியைக் நேர் முன்னின்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கோட்ஸேயின் இமாலயத் தவறைக் கடவுள் மன்னிப்பாரா ? நல்ல கடவுள், தீய கடவுள் என்று இரு கடவுள்கள் இல்லை. நல்லவன் தீயவன் இருவரையும் ஒருங்கே படைத்தவர் அந்த ஒரே கடவுள்தான். நல்லது, தீயது, நடுமை என்று மனிதத் தேர்வுக்கு மூன்று இயல்பாடுகள் உள்ளன. மனிதன் தனது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுகிறான். சுரேஷுக்குப் போதிமரப் புத்தி வந்தாலும், அவன் மனைவியை அதற்கு முன் ஒரு கண்ணியப் பெண்ணாக நடத்த வில்லை. நடத்துவான் என்று நான் நம்புதற்கில்லை.

    சி. ஜெயபாரதன்.

  10. Avatar
    jayashree shankar says:

    மிக்க நன்றி டாக்டர் .G. ஜான்சன் அவர்களுக்கு….
    உங்கள் கருத்துக்களை வெறும் பின்னூட்டமாக ஏற்காமல்…..கதையின் தொய்வாக…ஏற்கிறேன்.
    மேலும் இதே கதையை மீனாட்சியை வாழ வைத்துப் சுரேஷும் மீனாட்சியும் கோவிலுக்கு செல்வது
    போல இனிமையாக முடித்து எனது வலைப் பூவில் பதிந்து விடுகிறேன்.
    ஓர் கதைக்கு இரு முடிவுகள் இருக்கலாம்..தவறில்லை.
    மேலும்..மீனாட்சி திடீர் என்று இறந்து விடுவதன் காரணமாக அவள் மண் சோறு சாப்பிட்டு
    தொற்று நோய்க்கு ஆளாகி மேலும் இருமுகிறாள்..என்று அர்த்தம் வரும் என நினைத்தேன்…
    எழுதிய நடையில் இன்னும் இதை அழுத்தமாக சொல்லியிருக்கலாம். எடுத்து சொன்னதற்கு
    மிக்க நன்றி.
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  11. Avatar
    Dr.G.Johnson says:

    Thank you Mr.JAYABHARATHAN. If we are to believe that birth and death are the will of GOD, how do we explain the different modes of death. People die of old age, diseases, accidents, famine, floods. eathquakes, tsunami, war,suicides and murder. Is it GOD’S plan that these people should die in this manner? Does GOD wants the children in Uganda and Somalia to die of hunger and sorrow? Did GOD gave them life to die in this manner? If this is true can we infer that GANDHI was to die in that manner to the bullets of Godse. Can we say Godse was used as a tool by GOD to end the life of the MAHATMA. Similarly Judas was used in a similar manner to betray JESUS leading to his death on the cross. Likewise an ordinary hunter was used by GOD th end the life of KRISHNA. Hence we can agree that GOD took away the life of Meenatchi for a purpose. Sometimes GOD’S ways are strange and mysterious and we can never interpret them correctly. Anyway we can now be happy that MS.JAYASRI SHANKAR is going to resurrect MEENATCHI and let her live with SURESH. Thank you both of you…Dr.G.Johnson.

  12. Avatar
    ஜெயபாரதன் says:

    http://jayabarathan.wordpress.com/is-there-a-fate/

    டாக்டர் ஜான்ஸன்,

    கடவுள் உலகைப் படைத்த போதே அதைப் பூரண அமைப்பில் உருவாக்கவில்லை, குறையுள்ள மனிதரை ஆக்கியிருப்பது போல். அதனால் எரிமலை, பூகம்பம், சுனாமி, இடி, மழை மின்னல், புயல், சூறாவளி பெரு வெள்ளம் போன்றவை அடிக்கடி உலகில் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் இறைவன் புரியும் கோர இயற்கை நிகழ்ச்சிகளே.

    கடவுளே நமக்கு உயிர் தருகிறது. நமது உயிரைப் பறிப்பதும் கடவுளே, சாத்தான் அல்லன்.

    மனிதனுக்கு மட்டும் கடவுள் உன்னத மூளையையும் ஓரளவு படைப்பு / இயக்கச் சுதந்திரமும் கொடுத்துள்ளது. சமீபத்தில் நேர்ந்த ஈராக் போரும்,ஈழப் போரும்,ஆப்பிரிக்கப் பஞ்சமும் மனிதரால் உண்டானவை. மனிதர்தான் அவற்றைத் தடுக்க வேண்டும். அல்லது முறையாகக் கையாள வேண்டும். இறை அவற்றில் குறுக்கிடாது.

    மனிதர் செய்யக் கூடியவற்றை, செய்வதை இறையானது தடுக்காது.நிறுத்தாது, மாற்றாது. அதுபோல் கடவுள புரியும் இயற்கைப் பேரழிவுகளை மனிதர் நிறுத்தவோ, மாற்றவோ இயலாது. ஆனால் அவற்றிலிருந்து ஓரளவு தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    மகாத்மா காந்தியும், ஏசுநாதரும், ஆப்ரஹாம் லிங்கனும், மார்டின் லூதர் கிங்கும் மனிதரால் கொல்லப்பட வேண்டும் என்பது இறைவன் வகுத்த ஊழ்விதியே.

    ஊழிற் பெருவலி யாதுள ?

    வகுத்தான் வகுத்த வழிகளை மனிதன் மாற்ற முடியாது.

    சி. ஜெயபாரதன்.

  13. Avatar
    ஜெயபாரதன் says:

    ஊழிற் பெருவலி யாதுள ?

    சி. ஜெயபாரதன், கனடா

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

    ஊழிற் பெருவலி யாதுள ? மற்றொன்று
    சூழினும் தான்முந் துறும்.

    இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
    தெள்ளியர் ஆதலும் வேறு.

    திருவள்ளுவர்

    “ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட வேண்டும்.”

    கார்ல் சேகன் (விண்வெளி உயிரியல் விஞ்ஞானி)

    இக்கட்டுரை மதிப்புக்குரிய நண்பர் மலர்மன்னன் சென்ற வாரம் (மார்ச் 6, 2011) திண்ணையில் எழுதிய “விதியை அறிதல்” என்னும் கட்டுரைக்கு மறுப்புரை இல்லை. ஊழ் விதியைப் பற்றி நான் விஞ்ஞான ரீதியாக அறிந்துள்ள சிந்தனையின் பிரதிபலிப்பே இக்கட்டுரையின் சாரம் ! இங்கு நான் ஊழ் என்று குறிப்பிடுவது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஓர் இயற்கைச் சக்தியைக் குறிப்பிடுகிறேன். நமது பிரபஞ்சத்தைப் படைத்துக் கட்டுப்படுத்தும் படைப்பாளியே மனித இயக்கத்தையும், போக்கையும் வழி நடத்தி வருகிறது என்பதுதான் என் கோட்பாடு. அதைக் கடவுள் என்றாலும் ஒன்றுதான். இயற்கை என்றாலும் ஒன்றுதான். பிரபஞ்சப் படைப்பாளி என்றாலும் ஒன்றுதான். ஊழ் விதி என்பது விளைவை மட்டும் காட்டி மனிதர் காணாமல் மறைந்திருக்கும் ஓர் இயற்கை நியதி.

    ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் பட வேண்டும் என்று விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சேகன் கூறுகிறார். இந்தப் பிரபஞ்சமும், பேரண்டங்களும், அவற்றில் உதித்த பயிரினமும், உயிரினமும் மந்திர சக்தியால் ஒரு சில நாட்களில் தோன்றியவை அல்ல. பிரபஞ்சப் படைப்பாளி பல யுகங்களாய்த் திட்டமிட்டுச் செய்து தோற்றங்களை மாற்றி மாற்றிச் செம்மைப் படுத்தி உருவாக்கியதுதான் நாம் வாழும் உலகம். பிரபஞ்சம் தோன்றி சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன வென்று கணிக்கப் பட்டுள்ளது. பூர்வீகத் தாதுக்களின் கதிரியக்க தேய்வின் அரை ஆயுளை வைத்துத்தான் அந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டி ருக்கிறார். மெய்யாக அது துல்லிய காலக் கணிப்பாகப் பலர் ஏற்றுக் கொண்டாலும், அந்தக் கணக்குக்கு மூல காரணமான தாது உண்டானது எப்போது ? எவற்றிலிருந்து எப்படிச் சேர்ந்து அந்தத் தாது விளைந்தது ? அதன் மூலப் பொருட்கள் தோன்ற எத்தனை யுகங்கள் ஆயின போன்ற கேள்விகள் மேலும் எழுகின்றன. நமது கருத்தாடலுக்குப் பிரபஞ்சத்தின் வயது 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது படிப்படியாக, ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து, சிறிது சிறிதாய்ச் செம்மையாக்கிக் கடவுளே நமது காலவெளிப் பிரபஞ்சத்தைப் படைக்க 13.7 பில்லிய ஆண்டுகள் எடுத்திருக்கிறது. ஆயினும் பூரணம் அடையாத பூமியும் அதில் பூரணம் அடையாத மனிதப் பிறவிகள்தான் இதுவரைத் தோன்றியுள்ளன.

    பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞான முடிவில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது.

    பிரபஞ்சப் படைப்பாளி ஒரு மந்திரவாதியோ, மாஜிஸியனோ இல்லை. இரசாயனக் கதிர் ஏகமூலங்களின் (Radio Isotopes) அரை ஆயுள் தேய்வு நியதிப்படிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும் என்று பல்வேறு விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார். அதாவது படைப்பாளியே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை உண்டாக்க 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கிறது. இதுவரை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ள பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் அனுமான ஊகிப்புதான். மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் தர்க்கரீதியாக விளக்க முடியவில்லை. எல்லாம் மாறி, மாறிப்போகும் விஞ்ஞானத்தின் வெறும் அனுமான ஊகிப்புகள்தான். விஞ்ஞானம் பிரபஞ்ச ஆதி அந்தங்களை ஆராய முடியாது இடைப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் விளக்கம் அளிக்கிறது.

    காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

    விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.

    இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கிவரும் காலக்ஸி ஒளிமந்தைகள், அவற்றில் உள்ள விண்மீண்கள், அண்டக் கோள்கள், கருந்துளைகள், கருஞ்சக்தி, கரும் பிண்டம், பூமியில் உள்ள பயிரினங்கள், உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாய், அடுத்தடுத்துச் சங்கிலித் தொடர்பில் பிறந்தவை. அதாவது அவை யாவும் இயற்கை விதியான “காரண-விளைவு நியதியைப்” (Cause & Effect Theory) பின்பற்றித் தோன்றியவை. தற்போதைய நவீனக் கணினி மேற் பார்க்கும் மோட்டார் வாகனம் விருத்தியாகச் சுமார் 100 ஆண்டுகள் எடுத்துள்ளன. எலும்புக் கூடு போன்று ஹென்றி ஃபோர்டு செய்த முதல் கார் எத்தனை முறை மாற்றம் அடைந்து செம்மையாகி மாறி யுள்ளது ? ரைட் சகோதரர் முதன்முதல் செய்த சைக்கிள் உறுப்புகளில் உருவான வான ஊர்தி 100 ஆண்டுகளில் சந்திரனுக்குச் செல்லும் ராக்கெட்டாய், சூரிய மண்டலத்தைத் தாண்டிய முதல் வாயேஜர் விண்கப்பலாய் முன்னேறியுள்ளது. கணினி மின்கருவி எத்தனை ஆண்டுகள், எத்தனை முறைகள் சீராகி நவீன வல்லமை மிக்க கணினியாக உருவாகி உள்ளது ? சார்லஸ் டார்வின் அறிவித்த மனித உயிரின விருத்திக் கோட்பாடு இயற்கை முறையில் எத்தனை தரம் உருமாறிச் செயல் மாறிச் சீராகித் தற்போதைய ஆறறிவு படைத்த மனிதனாய் உலவி வருகிறது ?

    உலகில் நிகழும் வினைகள் அனைத்தும் இரண்டு முறைப்பாட்டில் நேர்கின்றன. ஒன்று இயற்கை நிகழ்ச்சி : இரவு பகல் சுழற்சி. பருவக் காலச் சுழற்சி, இடி மழை வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம், எரிமலை போன்றவை யுகயுகமாய் நேரும் இயற்கையின் திருவிளை யாடல்கள் ! அதே சமயம் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஜப்பான் அணுகுண்டு வீச்சுகள், ஆறு மில்லியன் யூதரைக் கொன்ற கோலோஹாஸ்ட் கொடூரம், ஈராக் படை யெடுப்பு, சமீபத்தில் நிகழ்ந்த ஈழப் போர் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்பு மனிதரால் உண்டாக்கப் பட்டவை. அதாவது இயற்கை செய்வதை மனிதர் செய்ய முடியாது. மனிதர் செய்வதில் இயற்கை ஈடுபடாது, தலையிடாது, தடுக்கவும் செய்யாது ! ஒரு சிலர் ஹிட்லராய் உருவா கிறார். ஒரு சிலர் அன்னை தெரேஸாவாகவும், ஆல்பர்ட் சுவைட்ஸராகவும் உருவாகிறார். அவற்றுக்குக் காரணம் என்ன ? சில மோட்டர் வாகனங்கள் மெதுவாகத்தான் ஓடுகின்றன ! சில வாகனஙள் வேகமாகச் செல்கின்றன. சில வாகனங்கள் அதி வேகத்தில் பந்தயக் கார்களாய்ப் போட்டி இடுகின்றன ! காரணம் அந்த மாதிரி வாகனங்கள் அத்தகைய பணிக்காகத் தயாரிக்கப் படுகின்றன. அதே காரணம் தான் பல்வேறு மனிதப் படைப்புக்கும் ஒத்து வருகிறது.

    படைப்புக்கு ஓர் உதாரண மாடல் : கருப்பையில் உருவாகும் சிசுவுக்குத் தாய் காரணமாகிறாள். பிறந்த பிறகே சிசு தானாக விருத்தி அடைகிறது. அதுபோல் தானாக உருவாகும் பிரபஞ்சம் முதலில் ஒரு படைப்பாளியின் கைத்திறனால் தோன்றி உதயமானது.

    மனித இயக்கத்தை ஓரளவு Y = MX + C (M என்பது மனிதனின் தனித்துவம்) (C என்பது மனிதனின் நிலைத்துவம்) (Y & X கால/வயது மாறுபாடுகள்) என்னும் ஓர் எளியச் சமன்பாட்டில் காட்டலாம். ஒரு சந்தர்ப்பத்தில் மனிதனின் இயக்கம் அவனது அப்போதுள்ள தனித்துவ & மனித நிலைப் பாடுகளால் நிர்ணயம் ஆகிறது. ஒரு மனிதன் 707 ஜெட் விமானத்தில் பயணம் செய்யும் போது அவன் விதி விமானியின் கையிலும், விமானத்தின் இயக்கத்திலும் சார்ந்துள்ளது. விமானத்தில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விமானி தவறு செய்தாலோ விமானப் போக்கு மாறிப் பயணிகள் பூமியின் ஈர்ப்பாற்றலுக்குப் பலியாவார். கடலருகில் மனிதன் உலாவச் செல்லும் போது அவன் விதி சுனாமி போன்ற எதிர்பாராத இயற்கைத் தாக்குதலில் சிக்கிக் கொள்ள ஏதுவாகிறது, இடி மின்னலில் நடக்கும் போது மின்னலின் தாக்குதலில் மனிதன் அடிபட்டு விதி மாறி உடனே உயிர் போகலாம். அதாவது பூமியில் வாழும் மனிதன் சதா காலமும் பூகோள விதியின் கைப் பொம்மையே தவிர பூரண விடுதலைப் பிறவி இல்லை.

    மனிதன் குறிப்பிட்ட ஊழ்விதி வேலிக்குள் தனித்தியங்கும் ஓர் உயிரியல் சுய யந்திரம் ! ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டுள்ள தனித்துவத்துக்கு அவனது ஊழ்விதியே காரணம் ! தாய் தந்தையரின் வெறும் டியென்ஏ (DNA) மட்டும் சேயின் தனித்துவத்துக்குக் காரணம் கூற இயலாது. ஒரு தாயிக்குப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் டியென்ஏ 100% ஒருமையில் இருப்பதில்லை. அவையும் ஓரளவு வெவ்வேறாகத் தனித்துவம் கொண்டுள்ளன. ஒரு சில கணினிகளை இன்னும் இயக்கி வருவது விண்டோஸ் 98 இயக்க ஏற்பாடு (Operating System), அல்லது விண்டோஸ் 2000, அல்லது விண்டோஸ் NT, தற்போது விண்டோஸ் XP, விண்டோஸ் Vista, விண்டோஸ் 7 இயக்கு ஏற்பாடுகளாகக் கணினியில் இடப்பட்டுள்ளன. மனிதனின் அனுதினப் பழக்கமும், தனித்துவ இயக்கமும் அவனது மூளை நினைவுக் களஞ்சியத்தில் (Brain Memory Units) ஆரம்பத்திலோ அல்லது அதற்குப் பிறகோ நிரப்பப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைப் பொருத்தவை. கணினி தினம் எழுப்பப் படுவது போல் காலையில் மனிதன் விழிக்கும் போது அவனை மீண்டும் சுய இயக்க மனிதனாய் ஆக்குவது அவனது நினைவுக் களஞ்சிய நிரப்புகளே ! நினைவுக் களஞ்சியத்தில் நினைவுகள் அழிந்து போனால் மனிதன் தான் யார் என்பதே மறந்து போய் மயக்க நிலைக்கு (Coma) வந்து விடுகிறது.

    மனிதன் பிறக்கும் போதே அவனது தலையில் “கணினித் தாய்மைப் பீடம் (Computer Mother Board), மூளை இயக்கி (CPU -Central Processing Unit) நினைவுத் தகுதி (Memory Capacity), இயக்க ஏற்பாடு (Operating System Like Windows XP or Vista) என்ன வென்று இயற்கை அல்லது ஊழ் விதி தேர்ந்தெடுத்துப் பதிவாக்கி விடுகிறது என்பது என் கருத்து. பிறந்த பிறகு மனிதன் அவற்றை ஓரளவு மேம்பாடு (Upgrade) செய்து கொள்ள அவனுக்குத் திறமை அளிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் மனிதனால் தனக்குப் பிறவியிலேயே இடப்பட்டுள்ள தாய்மைப் பீடம், மூளை இயக்கி, நினைவுக் களஞ்சியத்தைப் (Mother Board, CPU, Memory Units) பின்னால் அவனாலோ அல்லது எவனாலோ மாற்ற இயலாது ! இயக்க ஏற்பாடு (Operating System) மாறலாம் ! ஆதலால் மனிதன் ஊழ் விதியின் கைப்பிள்ளைதான் ! ஊழ்விதியின் தீராத ஒரு விளையாட்டுப் பிள்ளைதான்.

    இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
    தெள்ளியர் ஆதலும் வேறு.

    இருவேறு உலகம் என்பவை ஆன்மீக உலகம், உலோகாயுத உலகம். சித்தாந்த ஞான உலகத்தின் இயற்கை விதிகள் வேறு. பௌதீக-ரசாயன உலகத்தின் இயற்கை நியதிகள் வேறு. திரு என்பது உலோகாயுதச் சொத்துக்கள். தெள்ளியர் என்பது ஆன்மீக ஞானிகள்.

    உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன வென்று விஞ்ஞானம் இதுவரை விளக்க முடிய வில்லை. உயிர் என்பது எவ்வித இரசாயன மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட தில்லை என்பது என் கருத்து. ஆத்மா ஓர் இயக்க சக்தி. ஆத்மா எந்த வாகனத்தில் (Car, Rail, Ship, Plane, Rocket or Man, Woman or Animals) நுழைகிறதோ அந்த வாகனத்தின் சாதனங்கள் ஆத்மாவின் இயக்க முறைக்கு வரையறையும், எல்லையும் வகுக்கிறது. ஊர்ந்து செல்லும் இலைப்புழு ஏன், எப்படிப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியாய் மாறிச் செல்கிறது ? வகுத்தான் வகுத்த விதி முறைப்படி நிகழும் ஒரு காட்சி இது. இப்படி செய்வது எது ? இது ஏன் நேர்கிறது ? இதுபோல் முட்டைக்குள் உருவாகும் குஞ்சுக்கு உயிர் எப்படி நுழைகிறது ? சிசு பிறக்கும் போது தாய்க் கருவில் உயிர் அதற்கு எப்படி நுழைகிறது ? மனிதன் இறந்த பிறகு போது உயிர் எங்கே போகிறது ?

    300 பேர் அமர்ந்து பறக்கும் ஆயிரக் கணக்கான ஜெட் விமானங்களைப் படைத்த மனிதனால் ஒரு பட்டுப் பூச்சியை, மினிமினியை உண்டாக்க முடியுமா ?

    மனிதனால் பூமியின் ஈர்ப்புச் சக்தியைக் காணமுடியுமா ?

    குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது மெய்யானால், ஏனிப்போது அப்படிப் பிறப்ப தில்லை ? நிகழ்வதில்லை ? மனிதக் குரங்கு எப்படி ஆறறிவு படைத்த மனிதப் பிறவியாய் மாறியது ?

    நம் கண்முன் ஊர்ந்திடும் இலைப்புழு பறந்திடும் பட்டாம் பூச்சியாய் ஏன், எப்படி மாறுகிறது ?

    இந்த வினாக்களுக்கு விடை எவருக்கும் தெரியாமல் இவை இன்னும் மர்மமாகவும் புதிராகவும் இருந்து வருகின்றன.

    +++++++++++++

    நன்றி, திண்ணை

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 4, 2012 [R-2]

    1. Avatar
      தி.தா.நாராயணன் says:

      கருத்துக் களத்தில்’அதுவே போதிமரம்’ காணாமல் போய்விட்டது.சுவாரஸ்யமான மோதல், காலங்காலமாய் நடக்கும் மோதல்,இரண்டுமே அனுமாணங்களின் மேல் நடக்கும் மோதல், எதற்கும் ஆதாரமில்லாத,சாலிட்டாய் நிரூபிக்க இயலாத மோதல். ஆயினும் சுவாரஸ்யம் தருகிறது.

    2. Avatar
      பவள சங்கரி. says:

      //குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது மெய்யானால், ஏனிப்போது அப்படிப் பிறப்ப தில்லை ? நிகழ்வதில்லை ? மனிதக் குரங்கு எப்படி ஆறறிவு படைத்த மனிதப் பிறவியாய் மாறியது ?
      நம் கண்முன் ஊர்ந்திடும் இலைப்புழு பறந்திடும் பட்டாம் பூச்சியாய் ஏன், எப்படி மாறுகிறது ?
      இந்த வினாக்களுக்கு விடை எவருக்கும் தெரியாமல் இவை இன்னும் மர்மமாகவும் புதிராகவும் இருந்து வருகின்றன.//
      ஆகா… விஞ்ஞானம் மூலமாக மெயஞானத்தின் தேட்டம் அருமை ஐயா… இது போன்ற வினாக்கள் உண்மையிலேயே நம் மனிதப் பிறவிக்கு ஏற்பட்ட சவால்….

      அன்புடன்

      பவள சங்கரி.

  14. Avatar
    punai peyaril says:

    கடவுள் என்றொருவர் அமர்ந்து உலகைப் படைத்தார் என்றால், ஒன்று அவர் புரோகிராமில் ஏகப்பட்ட பக் இருக்க வேண்டும் இல்லை… இல்லை அவர் அடிதடி வீடியோ கேமில் அதீத இண்ட்ரஸ்ட் இருக்க வேண்டும். நல்லவர்கள் கஷ்டபடுவதுமாய், நாசக்காரர்கள் சுகத்தில் திளைப்பதுமாய் வைத்து, அதற்கு சப்பைக்கட்டாய் அடுத்த பிறவி, சொர்க்கம், நரகம் என்ற எண்ணங்கள் மனதில் தோன்றிடவும் வைக்கும் அவர் ஒரு சாடிஸ்டாகத் தான் இருக்க வேண்டும்….

  15. Avatar
    Dr.G.Johnson says:

    Dear Mr.Jayabharathan,Thank you very much for your concern to answer my doubts in this forum. As a scientist and writer you have given scientific equations and evidences that there is a CREATOR ( PADAIPAALI ) who is responsible for the universe and the Earth,sun, moon, stars, planets and space. HE is the giver of life on earth. He is the one behind man’s actions and functions. We call this creative and sustaining and also destructive power as GOD or NATURE. If it is GOD then HE is the giver of life as well as the destroyer of life. You have also stated that it took 13.7 million years for the universe to exist in what it is today. Even after such a long period the Earth is not perfect. Likewise man too is not perfect. We are still in the process of metamorphosis as you have illustrated well with the caterpillar transforming into the colourful butterfly. You have explained about the relationship between life/soul and the creator.The relationship between the embryo and the mother has been equated with the relationship between earth and the creator. How the soul entered the embryo is a mystery. Likewise our life and soul, birth and death and what happens after that is all unsolved mysteries. From the origin of man he was unable to know who he was or where he came from and where he would go after death. We are today no better than the original man in this regard of interpretation of life and soul. Hence we find easy solace in identifying a GOD of our own liking and accept whatever happens as GOD’s will. Each of us has today accepted the GOD of our forefathers. But what troubles me is that even in this scienc and space age we cannot come to a common consensus on ONE CREATOR and ONE GOD! Something must be wrong somewhere!…Dr.G.Johnson.

  16. Avatar
    punai peyaril says:

    As a scientist and writer you have given scientific equations and evidences –>> very funny… if there are such things then he deserves NOBEL.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *