சுனாமி யில் – கடைசி காட்சி.

This entry is part 4 of 44 in the series 15 ஏப்ரல் 2012

இந்த நிமிடம் நிஜம். அடுத்த நொடியைப் பற்றி எனக்கு தெரியாது.
நான், சென்னையில் , ம்யிலையில் 2.30 மதியம்( 11.04.2012) சுனாமியின்
அலைகளால், பீதி உணர்வு ஏற்பட்டு, ஆபிஸ் விட்டு, வெளியே ஓடிவர,
எனக்கு முன், பலர், அதே பீதியில் படியிறங்கி, ஓடிக்கொண்டிருந்தனர்.

மதியம் , டீக்காரனையும் காணவில்லை. ஏதோ கடைசியாக, பால்
குடித்துவிட்டு, ஒரே கும்பலாக சாகலாம் என்ற எண்ணம் வேறு
ஓடிக்கொண்டிருந்தது. மேனஜருக்கு, முடிக்க வேண்டிய பைலைப்பற்றி
கேட்டார்.ஒரே எரிச்சலாக வந்தது. சுனாமில் செத்தால், தினசரிகளில்,
கையில் பையிலோடு செத்தது போல், போட்டோ வேறு, போடுவானே,
என்ற கவலையோடு, கடைசி பாலையும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.
டீக்காரன் ராமச்ச்ந்திரனையும் காணவில்லை.

அயானவரம், காசிமேடு, மந்தைவெளி, வளசரப்பாக்கம் நண்பர்களெல்லாம்
போன் செய்து, இன்னுமா ஆபிஸில இருக்கே….! என்று ஆச்சரியமாக கேட்டார்கள்.
ம்யிலாப்பூர் கோபாலன், உனக்கு, ஆபிசிலேயே பாலான்னு..
கேட்க, எனக்கு, இன்னும் பயம் அதிகமானது.
அய்யோ, என் வீடு, வாசல், பெண்டாட்டி, பிள்ளைகள், சொத்து, சுகம் எல்லாம்
கோவிந்தாவா …..! அடே எலு கொண்டல வாடா, கோவிந்தா என்று கத்த
வேண்டும் போல் தோன்றியது. இது, ஆபிஸ், அடக்கிதான் வாசிக்க வேண்டும்.

டிவியில் வேறு, நிமிடத்திற்கு நிமிடம், நில நடுக்க காட்சிகளை காட்டிக்கொண்டே
இருக்கின்றார்கள். இண்டோனிசியா மக்கள் நாலாப்பக்கமும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

பேங்கில் கடன் வாங்கியதை கட்ட வேண்டாம் என்ற மகிழ்ச்சி ஒரு புறம்,
இன்னொரு புறம், குட்டி-குட்டியாய் ஆங்காங்கு வாங்கிய இடமெல்லாம்
கோவிந்தா தானா” என்று நினைக்கும் போது, கொஞ்சம் கஷ்டமாகதாn இருந்தது.

அண்ணாசாலையில், அம்பேத்கார் பேட்டை சிறுவர்கள், செட்டு மிட்டாய் ,
உடைத்து, துவம்சம் செய்து, அங்குள்ள சரக்கை அள்ளி கொண்டு ஓடுவதை,
நண்பன் போன் செய்து சொன்னான், கூடவே, செட்டு, தவிக்கையில்.” சேட்டு…..
எல்லாம்தான் சாவப் போறோம்.. ஒடு…ஒடு…”என்று கூறிக்கொண்டே , பசங்க
ஓடியதையும் சொல்லி சிரிக்கின்றான். அவனுக்கு சாவைப் பற்றி கவலையில்லைதான்.

அய்யோ, என்னுடைய இலக்கிய கனவு அவ்வளவுதான …?
வாங்க வேண்டிய மாநில- மத்திய சாகித்திய அகாடமி ஆவார்டு எல்லாம்
கோவிந்தாவா ….?

அய்யகோ, கன்னிமாரா வில் , ரிடையர் ஆனவுடன் படிக்க வேண்டிய
ஆசையெல்லாம் இந்த ஜன்மத்தில் கிடையாதா ?

அடுத்த, வானம் இருட்டிக்கொண்டே வந்தது. மேகக்கூட்டத்தில், டைரக்டர்
எமன் அவருடைய ஆயிர-மாயிரம் குட்டி எமப்பட்டாளத்தோடு, கையில்
பாசக்க்யிற்றுடன் வருவது போல், தோன்றியது.
எல்லார் கழுத்திலும், அந்த பாசக்கயிர் விழுந்தது. என் கழுத்திலும், போட
எமன் வீசினான்… ஆ……,ஆஅ என்று கத்தினேன்….

யாரோ, ரூம் கதவை பலமாக தட்டியது போல் காதில் விழுந்தது…
அலறி அடித்துக் கொண்டு. எழுந்து கதவைத் திறந்தேன்.

எதிரே, விசுவநாதன் நின்றுக் கொண்டு, என்னை முறைத்தான்.
என்னடா …? என்றேன்.

அடப்பாவி, டிரிப்ளிக்கேனே, அல்கோல்லப் பட்டு, அவனவன், உயிரைக்
கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கின்றார்கள்..
நீ, என்னாடான்னு.. சவுண்டா..தூங்கிண்டு இருக்கே….

அடப்பாவி,, நான் பார்த்ததுதான், சுனாமிக்கனவுத்தானா..?

அவனா , நான் !!!!!
====================================

Series Navigationஅது, இது, உது –எது? – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடுஇதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *