அருந்தமிழச் செல்வ!
அறிவியல் தமிழின்
“கணினியன் பூங்குன்றன்” நீ
எளிதாய் இனிதாய்
நுட்பங்கள் ஆயிரம்
விளக்கிய அற்புதம்
மறக்க இயலுமோ?
அகத்தியன் தமிழோ
புராணமாய் போனது.
அகப்பட்ட தமிழோ
தடம் மறைந்து போனது
அறு வகை மதமும்
நால் வகைக் கூச்சலும்
ஆழப் புதைத்தபின்
தமிழ் என்ன மிச்சம்?
கணினித் தமிழ் இங்கு
கண் திறந்த பின்னே
எட்டாத அறிவும் இங்கு
எட்டுத்தொகை ஆனது.
எத்தனை எத்தனை நூல்கள்
எழுதி எழுதி குவித்தாய்!
இணையத்தமிழ் நுட்பத்தை
விண்டு விளக்கினாய்.
அதனால்
விண்ணே விழி முட்டி
வீதிக்கு வந்தது.
தமிழனின்
விழித்திரை யெல்லாம்
விண்திரை ஆனது.
குறுந்தகடுகள் கூட
குறுந்தொகை சொன்னது.
குவாண்டம் கம்பியூடிங்க் எனும்
“நுண் மாத்திரை” கொண்டு
நுவன்றிடும் கணினிக்காப்பியம்
புதிய நானோ தொல் காப்பியம்!
தமிழில் புதிதாய் விண்தமிழ் தந்தவன் நீ.
வித்துவான்களின் விசுப்பலகைகள்
மலையேறிப்போயின.
விரல் சொடுக்கும்
விசைப்பலகையில் தமிழுக்கு
விசைகள் ஊட்டியவன் நீ.
புரிபடா கணிதம் கணினிக்கணிதம்.
புலியா?கரடியா?கவலை வேண்டாம்.
பூலியன் கணிதமும் உன் மடியின்
பூனைக்குட்டி ஆனது.
புரியும் தமிழில் சொல்லின் ஓவியம்
எத்தனை எத்தனை நீ செதுக்கித்தந்தாய்!
மேஜைப்பொறியோ மடிப்பொறி ஆனது.
மடிப்பொறியும் கைப்பிடிக்குள் வந்தது.
வருங்காலத்தில் மனப்பொறியாகும்.
குவாண்டம் டெலிபோர்டேஷன் எனும்
“கூடு விட்டு கூடு”பாயும் கனவும்
கை கூடும் காலம் கண்ணின் முன்னே
திரை காட்டும் நேரம் உனக்கு
திரை போட்டது யார்?
கோளில் பொறியில் ……
அந்த எண்குணத்தானுக்கும்
அவசரம் அவசரம் மிகவும் அவசரம்
கணிப்பொறி ஒன்றின் நுட்பம் தெரிய
கணமும் யோசிக்காமல் உன்னை
அழைத்துக்கொண்டானே!
அந்தோ கொடுமை! அந்தோ கொடுமை!
விண் தமிழ் நுண் தமிழ்
விரி தமிழ் ஆகிட
பல நூற்றாண்டுகள்
முன் கொண்டு நிறுத்திட
பதை பதைப்பாய் ஓடியவனே!
உனக்கு
ஒரு அரைநூற்றாண்டு
மைல் கல் கூட
நடவில்லையே இந்த
அரக்கனான இறைவன்!
இந்த மின்னணுத்துடிப்புகளின்
மின்னல் பூக்களில் தான்
நாங்கள் உனக்கு வைக்கும்
மலர் வளையம்!
==============================
- நினைவுகளின் சுவட்டில் – 94
- சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35
- மாமியார் வீடு
- கல்வியில் அரசியல் பகுதி – 2
- BAT MAN & BAD MAN பேட் மேனும், பேட்ட் மேனும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81)
- பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.
- ‘பினிஸ் பண்ணனும்’
- பூமிதி…..
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -4
- குடத்துக்குள் புயல்..!
- தஞ்சை பட்டறை செய்தி
- முள்வெளி அத்தியாயம் -18
- குற்றம்
- தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை
- சிற்றிதழ் வானில் புதுப்புனல்
- உய்குர் இனக்கதைகள் (3)
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- ஓரு கடிதத்தின் விலை!
- பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம்
- தில்லிகை
- கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி
- தாவரம் என் தாகம்
- நகர்வு
- பிறை நிலா
- உலராத மலம்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29)
- கற்பித்தல் – கலீல் கிப்ரான்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11)
- திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்
- பஞ்சதந்திரம் தொடர் 53
- அப்படியோர் ஆசை!
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது