Silencing Pakistan’s Minorities
By HUMA YUSUF
(ஷபாஸ் பட்டி : இஸ்லாமிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைச்சர். கிருஸ்துவர்)
கராச்சியில், சென்ற வாரம் செவ்வாய்க்கிழமையில் நகரத்தின் முக்கிய தெருக்கள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் எரிந்துகொண்டிருந்தன. கண்ணீர்ப்புகை குண்டுகள் வெடித்தன. நான்கு பேர்கள் காயமடைந்தார்கள். காரணம் ஷியா ஆக்ஷன் கமிட்டி Shia Action Committee (S.A.C.) அமைப்புக்கும் போலீஸுக்கும் நடந்த சண்டை.
பாகிஸ்தான் டெலிகம்யூனிகேஷன்ஸ் அத்தாரிட்டி என்ற அரசாங்க அமைப்பு, பாகிஸ்தான் ஷியா பிரிவினருக்கு எதிராக நடந்து வரும் வன்முறை நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு ஆவணப்படுத்தியிருந்த இணையப்பக்கத்தை தடை செய்ததற்காக ஷியா ஆக்ஷன் கமிட்டி தெருவில் இறங்கி தடையுத்தரவுக்கு எதிராக போராடியது. இதனை கட்டுப்படுத்த போலீஸ் தெருவில் இறங்கியது. ஷியாக்களின் இணையதளத்தை தடுக்கும் இந்த அரசாங்க தடையுத்தரவு பாகிஸ்தானில் அதிகரித்துவரும் ஷியா பிரிவினர், மற்றும் இதர சிறுபான்மையினர் மீதான வன்முறையின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். 226 முஸ்லீம்கள் 63 நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய மதப்பிரிவுகளுக்குள் நடக்கும் சண்டையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலுச்சிஸ்தான் மாநிலத்தில் மட்டுமே 100க்கும் மேற்பட்ட ஹஜாரா இனத்தவர்(இவர்களில் பெரும்பான்மையினர் ஷியாக்கள்) 2012 ஆண்டில் மட்டுமே கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2008இலிருந்து 2011 வரைக்கும் சுமார் 400 பேர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த பயங்கரமான சூழ்நிலையில், பாகிஸ்தானின் மத சிறுபான்மையினர் இணையவெளியில் தங்களது துயரங்களை கொட்ட பின்வாங்கியிருக்கிறார்கள். இங்கே தங்களது உரிமைகளுக்கும், தங்கள் மீது நடக்கும் அட்டூழியங்களையும் ஆவணப்படுத்தவும் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் இந்த வெளியும் அவர்களுக்கு மூடப்படுகிறது.
பாகிஸ்தானின் அரசாங்க அதிகாரிகள் எதற்கெடுத்தாலும் இணையதளங்களை மூடுவதை சகட்டுமேனிக்கு செய்து வருகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று கூட சொல்வதில்லை. இதுவரை கணக்கிட்டதில் சுமார் 15000க்கும் மேற்பட்ட இணைய தளங்கள் “ஆபாசம், மதநிந்தனை” காரணங்களுக்காக தடை செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது இந்த டெலிகம்யூனிகேஷன்ஸ் அத்தாரிட்டி, மத சிறுபான்மை பிரிவுகளின் இணையதளங்களையும் தடை செய்வதை அதிகரித்திருக்கிறது. சென்ற மாதம், அஹ்மதி முஸ்லீம் சமூகத்தை சார்ந்தவர்களின் தளங்களை தடை செய்தது. இந்த பிரிவினர் பாகிஸ்தானின் சட்டத்தின் படி முஸ்லீமல்லாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மனித உரிமை குழுக்களும், இணையவெளியில் உழைப்பவர்களும், பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு அத்தாரிட்டியின் இப்படிப்பட்ட தான் தோன்றித்தனமான கொள்கைகளை எதிர்த்து பேசி வருகிறார்கள். அரசாங்கத்தில் மேல் மட்டத்தில் இருப்பவர்களின் சிபாரிசு மூலமாகத்தான் இந்த தடையுத்தரவை நீக்க முடியும் என்று ஆகிவிட்டிருக்கிறது. சென்ற புதன்கிழமை பிரதம மந்திரியின் உள்துறை ஆலோசகர் ரஹ்மான் மாலிக், இந்த தொலைத்தொடர்பு அத்தாரிட்டியுடன் தொடர்பு கொண்டு ஷியா ஆக்ஷன் கமிட்டியின் இணையதளத்தின் மீது இருக்கும் தடையுத்தரவை நீக்க சொன்னார். ஆனால், அதே நேரத்தில் பாகிஸ்தான் மத்திய புலனாய்வு துறையை அழைத்து, அந்த இணையதளத்தில் உள்ள ”ஆட்சேபத்துக்குரிய செய்திகளை” நீக்கும்படியும், அந்த செய்திகளை போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கட்டளையிட்டார்.
பயங்கரவாத குழுக்கள் எந்த வித தடையுமின்றி கட்டுப்பாடுமின்றி இணையதளத்தில் ஆட்டம் போட அனுமதிக்கப்பட்டிருப்பதை ஒப்பிடும்போது, சிறுபான்மையினர் நடத்தும் இணையதளங்கள் மீது நடக்கும் இப்படிப்பட்ட அடக்குமுறை இன்னும் மோசமாக பாகிஸ்தானை காட்டுகிறது. 2008இல் மும்பை மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய லஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் உறுப்பினரான அபு ஜிண்டால் பல இணைய தளங்களை நடத்தவும் ஒருங்கிணைக்கவும், செய்திகளை பரப்பவும் பயிற்றுவிக்கப்பட்ட பெரிய இணைய குழுவை இந்த பயங்கரவாத குழு வைத்திருப்பதாக இந்திய புலனாய்வாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். மற்ற வன்முறை பயங்கரவாத குழுக்களும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் மிகவும் செயலூக்கத்துடன் இருக்கிறார்கள்.
பலுச்சிஸ்தானில் ஷியா பிரிவு ஹஜாரா இனமக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு நாங்களே என்று லஷ்கர் ஈ ஜங்வி என்ற ஷியா எதிர்ப்பு பயங்கரவாத குழு ட்விட்டரில் அறிவித்தது சில வாரங்களுக்கு முன்னால் எனக்கு வந்தபோது நான் திகிலடைந்தேன். ஷியா பிரிவினரின் இணையதளம் முடக்கப்பட்டபோதும், லஷ்கர் ஈ ஜங்வியின் இணையதள செயல்பாடு தங்கு தடையின்றி நடந்து வந்தது. இவர்கள் ஷியா பிரிவினர் மீது எச்சரிக்கை விடுத்ததும், விடுத்துகொண்டிருப்பதும் அச்சுருத்தலும் தங்கு தடையின்றி இன்னமும் நடக்கிறது. இந்த வருட ஆரம்பத்தில், லஷ்கர் ஈ ஜங்வி அமைப்பை சேர்ந்தவர் ஒருவர் இம்ரான் கான்(கிரிக்கட் வீரராக இருந்து அரசியல்வாதி ஆகி, இன்று பாகிஸ்தான் டெஹ்ரீக் ஈ இன்ஸாப் என்ற அரசியல் கட்சியை நடத்திவருபவர்) இந்த குழுவுக்கு எதிராக பேசியதால், அவரது உயிரை எடுப்போம் என்று பகிரங்கமாக ட்விட்டரில் எச்சரித்தார்.
ஆனால், டெலிகம்யூனிகேஷன்ஸ் அத்தாரிட்டி, இந்த விஷயங்களை “ஆட்சேபத்துக்குரியதாக” கருதுவதில்லை. இதே போல, பாகிஸ்தானில், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய பேச்சாளர்கள் மற்றவர்கள் மீது வெறுப்பை கக்கும் பேச்சுக்களும், பயங்கரவாதிகள் கைதிகளது தலைகளை அறுத்து எடுக்கும் வீடியோக்களும் தாராளமாக கிடைக்கின்றன. ஆனால், மத சிறுபான்மையினர் முக்கியமாக அஹ்மதியாக்கள் பற்றிய செய்திகளை கண்டறிவது கூட கடினமாக இருக்கிறது.
சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்களது இணையதளங்களை முடக்குவது, அடிப்படை கருத்துரிமையின் எதிர்காலத்தை பற்றி அச்சப்பட வைக்கிறது. இது பாகிஸ்தானின் மத சிறுபான்மையினர் மட்டுமே கவலைப்பட கூடிய விஷயமில்லை. யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லாத இந்த அதிகாரிகளின் கருத்துக்கு மாற்றுக்கருத்து கொண்ட அனைவரது கருத்துரிமைக்கு அச்சுருத்தலே. எதற்காக சென்சார் நடக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது என்று சொல்லும் இந்த அமைப்பு, இணையதளத்தை தடை செய்யும் தனது அதிகாரத்தை இன்னும் வலுப்படுத்திக்கொள்ளவே முயல்கிறது.
பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அத்தாரிட்டி தனது முயற்சியில் வெற்றியடையுமானால், பாகிஸ்தானின் குடிமக்களில் நலிந்த நிலையிலுள்ளவர்கள் தங்களது குரலை வெளிப்படுத்த நிதர்சன உலகிலோ, அல்லது இணைய வெளியிலோ ஒரு வாய்ப்பும் இல்லாமல் போவார்கள். அதே நேரத்தில் இந்த சிறுபான்மையினரை அச்சுருத்தும், கொல்லும் பயங்கரவாத குழுக்கள் தங்களது வெறுப்பு பேச்சுக்களை எந்த தடையுமின்றி பரப்பிக்கொண்டிருப்பார்கள்.
——————————
Huma Yusuf is a columnist for the Pakistani newspaper Dawn and was the 2010-11 Pakistan Scholar at the Woodrow Wilson International Center for Scholars in Washington.
- அதிகார நந்தீசர் – புத்தக வெளியீட்டு விழா
- தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது 2012 ஆம் ஆண்டு பெறுபவர் அம்ஷன் குமார்
- ஆகமங்கள், அர்ச்சகர்கள், இரண்டுங் கெட்டானில் அவசரச் சட்டம்
- வேதனை – கலீல் கிப்ரான்
- வாழ்வியல் வரலாற்றின் சிலபக்கங்கள் –24
- நினைவுகளின் சுவட்டில் (96)
- கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்
- முள்வெளி அத்தியாயம் -20
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 37
- எஸ்ராவின் உறுபசி – தீராத மோகம்
- இறப்பின் விளிம்பில். .
- ஒரு தாயின் கலக்கம்
- ஆனந்த் ராகவ் வின் இரண்டு நாடகங்கள்
- அமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்
- குந்துமணியும் கறுப்புப் புள்ளியும்
- தார் சாலை மனசு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -6
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 31) காதலின் மனக்காட்சி
- சாகித்திய அகாடமி நடத்திய க.நா.சு. நூற்றாண்டு விழா.
- ம.தவசியின் ‘சேவல் கட்டும்’ வெற்றிமாறனின் ‘ஆடுகளமும் ‘
- உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு
- “ இவர்கள் சாகக்கூடாதவர்கள் ”
- அவளின் கண்கள்……
- ’ செம்போத்து’
- மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை
- சுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்
- வானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!
- மாத்தி யோசி…!
- ரமளானில் ஸகாத் சுட்டெரித்தலும் – வளர்ச்சியும்
- தொலைந்த காலணி..
- மஹாளயத்தில் பொன்னம்மா யார்?
- பா. சத்தியமோகன் கவிதைகள்
- 2013 ஆண்டில் செந்நிறக்கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவி
- பாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்
- தாகூரின் கீதப் பாமாலை – 25 ஆத்ம நாடகம்.
- பஞ்சதந்திரம் தொடர் 55
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்று ஒன்று