நாடறிந்த தமிழ் எழுத்தாளரும் புத்திலக்கிய விமர்சகருமான முனைவர் ரெ.கார்த்திகேசுவின் இரு புதிய நூல்கள் தலைநகரிலும் கெடா மாநிலத்தில் லுனாசிலும் வெளியீடு காணுகின்றன.
தமிழ்ப் புத்திலக்கியத்தை உலக அளவில் கவனித்து விமர்சித்து வரும் அவருடைய சமுதாய, இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூல் “விமர்சன முகம் 2”. அவருடைய அண்மைய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் “நீர் மேல் எழுத்து”. இதில் அவர் மலேசிய இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிய புதிய கதைகளும் ஒரு குறுநாவலும் உள்ளன.
தலை நகர் வெளியீட்டு விழா:
குவால லும்பூரில் நூல்கள் வெளியீடு ஆகஸ்ட் 27ஆம் நாள் (திங்கள் கிழமை) மாலை 5.30க்கு கிராண்ட் பசிஃபிக் தங்கும் விடுதியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவோடு நடைபெறும். நிகழ்வுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். சங்கத்தின் செயலாளர் ஆ.குணநாதன் வரவேற்புரை நல்குவார். தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலமை நிர்வாகி டத்தோ பி.சகாதேவன் முன்னிலை வகிப்பார். மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறைத் தலைவர், இணைப் பேராசிரியர் கிருஷ்ணன் மணியம் நூல்களை அறிமுகம் செய்வார். முதல் நூல்களை டத்தோ பி.சகாதேவன் அவர்களும், “சோழன் வென்ற கடாரம்” நூலாசிரியர் டத்தோ வீ.நடராசன் அவர்களும் பெற்றுக்கொள்வார்கள்.
வெளியீட்டு விழாவுக்குச் சிறப்புச் சேர்ப்பிக்க வந்திருக்கும் மதுரைக் காமராஜ் பல்கலைக் கழகப் பேராசிரியரும் புத்திலக்கியத் திறனாய்வாளருமான இரா.மோகன் நூல்கள் குறித்துத் திறனாய்வுப் பேருரை நிகழ்த்துகிறார்.
கெடா, லூனாசில் வெளியீட்டு விழா.
இந்த இரு நூல்கள் வெளியீட்டு விழா கெடாவில் லூனாசிலும் தியான ஆஸ்ரமத்தின் தலைவர் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியின் அரவணைப்பில் நடைபெறுகிறது. ஆசிரமத்தில் செப்டம்பர் 7ஆம் நாள் (வெள்ளிக் கிழமை) மாலை 5.30 மணிக்கு வெளியீட்டு விழா நிகழும். நாவல் ஆய்வாளர் த.குமாரசாமி வரவேற்புரை நிகழ்த்துகிறார். “நீர் மேல் எழுத்து” நூலினை எழுத்தாளர், கவிஞர் கோ.புண்ணியவானும், “விமர்சன முகம் 2” நூலினை சுங்கைப் பட்டாணி துங்கு அப்துல் ஹாலிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் ப.தமிழ்மாறனும் அறிமுகப் படுத்துவார்கள். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தலைமை உரையாற்றி நூல்களை வெளியிடுவார். முதல் நூல்களை கெடா சட்டமன்ற முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சுப்பிரமணியம் அவர்களும் டத்தின் தாமரைச்செல்வியும் பெற்றுக் கொள்வார்கள்.
நூல் ஒவ்வொன்றுக்கும் ரிம.25.00 என விலையிடப்பட்டிருந்தாலும் வெளியீட்டு விழாவில் மட்டும் இரண்டு நூல்களையும் சேர்த்து ஒரே நூலின் விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கின்றனர்.
இந்தநூல் வெளியீட்டினை ஆதரிக்குமாறு இலக்கிய ஆர்வலர்களும் தமிழ்ப் பற்றாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(Professor Ira. Mohan)
(Datuk B. Sahadevan)
(Smami Brammanandha Saraswathy)
- மரியாதைக்குரிய களவாணிகள்!
- முன் வினையின் பின் வினை
- அன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 26
- வீணையடி நான் எனக்கு…!
- வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் …
- பிராணன்
- சுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்
- கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா
- கதையே கவிதையாய்! (1) இரு வேடர்கள்! – கலீல் ஜிப்ரான்
- இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை
- முனைவர் ரெ.கார்த்திகேசுவின் “விமர்சன முகம் 2”, “நீர்மேல் எழுத்து” இரு நூல்கள் வெளியீட்டு விழா
- (98) – நினைவுகளின் சுவட்டில்
- என் இரு ஆரம்ப ஆசான்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியனுக்கு அருகில் பேரளவு கரும் பிண்டம்
- வா…எடு…எழுது..படி…பேசும்..கவிதை.!
- நூறு கோடி மக்கள்
- பிணம்
- இருள் மனங்கள்.
- இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சி- ஒரு கண்ணோட்டம்
- நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு
- கங்கை சொம்பு
- ஆத்துல இன்னும் தண்ணி வரல….
- தாகூரின் கீதப் பாமாலை – 27 புயல் அடிப்பு
- NCBHவெளியீடு மனக்குகை ஓவியங்கள் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்
- தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ அம்சன் குமார்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 33) சூரிய வெளிச்சமும் முகிலும்
- முள்வெளி அத்தியாயம் -22
- மானுடர்க்கென்று……..
- அசோகன் செருவில்லின் “ டிஜிட்டல் ஸ்டூடியோ “
- பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை
- மலட்டுக் கவி
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 39
- கருணைத் தெய்வம் குவான் யின்
- பழமொழிகளில் ‘வெட்கம்’
- படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)
- பெரியம்மா
- இடைவெளிகள் (8) – கருத்துப் பறிமாறலும் கவனமான பரிசீலிப்பும்