நேர்மையின்குரல்

This entry is part 7 of 37 in the series 2 செப்டம்பர் 2012

 

வளவ. துரையன்

சிறந்த வாசகராக, நேர்மையானவிமர்சகராக, இன்னும் கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக என்று பல்வேறு தளங்களிலும் சுமார்அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத்தன் முத்திரையைப் பதித்து வரும் மூத்த எழுத்தாளர்தி.க.சி தனது கருத்துகளை எண்ணித் துணிந்து எழுதிய காரணத்தாலேயே அவர் பலவித எதிர்வினைகளையும்சந்திக்க நேர்ந்தது. “ தனி நபர்களின் திறமைகளை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில்அவரின் குறைகளையும் மூடி மறைக்காமல் சுட்டிக் காட்டியதாலேயே தி.க.சியின் எழுத்துகள்புத்தகங்களாக வெளிவராமல் போய்விட்டன “ என்னும்       வல்லிக்கண்ணனின் கூற்று சாலப்பொருத்தமானஒன்றாகும்.

 

இந்தஆண்டின் தொடக்கத்தில் { மார்ச் 2012 } தி.க.சி அவர்கள் “ கணையாழி “ இதழில் 1999 –இல்எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக 64 பக்கங்களே கொண்ட சிறுநூல் { காலத்தின் குரல்} எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.

 

இதில்உள்ள கட்டுரைகளில் அவர் அவர் காலத்தில் பழகிய பல எழுத்தாளர்களைப் பற்றியும்அவர்தம் எழுத்துகள் பற்றியும் கூறுகிறார். இக் கட்டுரைகள் மிகவும் ஆழமானவை இல்லைஎன்றாலும் இவற்றின் நேர்மையை சந்தேகிக்க முடியாது.

 

சிலபுதிய செய்திகளையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். பெரும்பாலும்நவீனஎழுத்தாளர்கள் தம் வாழ்நாளில் விதந்தோதப்படாமல் பொருளியல் நிலையில் துன்புற்றுநிறைவேறாத கனவுகளுடனும் அந்திமக் கால ஆசைகளுடனும்தான் போய்ச் சேர்ந்துள்ளார்கள்.புதுமைப்பித்தனும், சி.சு.செல்லப்பாவும் அதற்கு விதிவிலக்கல்லர் என்று தி.க.சிகாட்டுகிறார்.

 

.      “மணிக்கொடி “யை விஞ்சும் விதத்தில் ‘ சோதனை ; என்னும் இலக்கிய இதழை நடத்தவும்,அதில் பல்வேறு இலக்கியச் சோதனைகளைச் செய்து பார்க்கவும், புதுமைப்பித்தன்திட்டமிட்டார். ”அது நிறைவேறாதலட்சியக்கனவாகவே முடிந்தது “  என்று கூறும்தி.க.சி அது கைகூட முடியாமைக்குத் தேவையான உடல் நலமும் பணபலமும் இல்லாமல் போனதேகாரணங்கள் என்று முடிக்கிறார்.

 

சி.சு. செல்லப்பாவுக்கும் அந்திமக்கால ஆசைகளாக மூன்று இருந்தன என்பதாகத் தி.க.சிகூறுகிறார்.

 

அவற்றில் ஒன்று “ வ.ரா “ வின்வாழ்க்கையைச் சிட்டியுடன்      தானும் சேர்ந்து எழுத முடியாதது. இரண்டாவதுராமையாவின் சிறுகதைப் பாணியை விரைவில் கொண்டுவரவேண்டும். மற்றொன்று நூலக ஆணைக்குழுவினர் வாங்க  மறுத்த ‘ சுதந்திர தாகம்‘ நாவல் விற்றுத் தீர வேண்டும்.

 

இவற்றில் இரண்டாவது ஆசை மட்டுமே நிறைவேறியது. அதிலும் செல்லப்பாவுக்குப்பொருள் இழப்பே ஏற்பட்டது. இத் தொகுப்பின் 12 கட்டுரைகளில்  சி.சு.செ பற்றியே மூன்று கட்டுரைகள் உள்ளன. இதிலிருந்து செல்லப்பாதி.க.சிக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதை உணரலாம்.

 

“வாடி வாசல் “ என்னும் ஒரு கதைக்காகவே, தமிழ்ச்சிறுகதை இலக்கிய உலகில் அவருக்குநிரந்தர இடம் உண்டு என்று பாராட்டும் அதே நேரத்தில் செல்லப்பாவின் சில இலக்கியக்கோட்பாடுகளுக்கும், எனது மார்க்சிய அழகியல் கோட்பாடுகளுக்கும் இடையே வேற்றுமைஉண்டு என்பதையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். { பக்-19 }

 

“மணிக்கொடிச் சிறுகதை எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள், தனித்தனிஆற்றல் வாய்ந்தவர்கள்,தரமான சிறுகதைகளை வழங்கியவர்கள், மறுமலர்ச்சிஇலக்கியத்திற்குத் தொண்டாற்றியவர்கள் “ என்று தி.க.சி அவர்களைப் போற்றுகிறார்.அந்தஎழுத்தாளர்களை நாம் நமதுசொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் மதிப்பிடாமல்நடுநிலையில் நின்று அவர்களுக்கு உரிய மதிப்பை அளிக்க வேண்டும் “ என்று தி.க.சிவலியுறுத்துகிறார்.{ பக்-15 }

 

வெ.சாமிநாதசர்மாவின் நூல்கள் 3-5-1999_இல் நாட்டுடைமை. ஆக்கப்பட்ட பொழுது அவரைப்பற்றிஎழுதிய கட்டுரையில் “ வ.ரா வைப் போலவே, தமிழ் உரைநடையைஆற்றலுடன் வளப்படுத்திய பேராசான்,தமிழ் அன்னையின் அருந்தவப் புதல்வன், சாமிநாத சர்மா “ என்று பாராட்டுகிறார்தி.க.சி. உலக அரசியல் பற்றியும், பொருளாதாரம் பற்றியும் சமுதாய விடுதலை பற்றியும்எழுதிய சாமிநாத சர்மாவின் எழுத்துகள் தமிழ் வாசகர்கள் நெஞ்சில் ஆழமாகஇல்லாவிடினும் அகலமாகக் கூடப் பதியவில்லை என்பது வருந்தவேண்டிய ஒன்றாகும்.

 

சிறந்த கவிஞராக விளங்கிக் கவிதையைத் தமது ‘கைவாள்’ என்று பிரகடனம் செய்தவர்கே.சி.எஸ் அருணாசலம். அவர் சிறுகதைகள் எழுதியதோடு திரைப் படங்களுக்கும் பாடல்கள்எழுதி உள்ளார். மேலும் தாமரை இதழின் பொறுப்பாசியராகவும் தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

 

அத்தகைய பெருமை கொண்ட கே.சி.எஸ் அருனாசலம் மறைந்த செய்  தியை ‘ தீக்கதிர் ‘ தவிர எந்தத் தமிழ் ஏடுகளும்வெளியிட்டு மதிப்பளிக்கவில்லை. மாறாக திரைப்பட இயக்குநர் விட்டலாச்சார்யா 80 ஆம் வயதில்காலமானார் என்ற செய்தியை அன்று வெளியிட்டன. இதைக் கண்டு வருந்திய தி.க.சி 4-6-99-இல்தினமணிக்குக் கடிதம் எழுதி அது சிறப்புக் கடிதமாக வெளிவந்த்து. அதன் பிறகே சிலவிளைவுகள் ஏற்பட்டன என்றும் அவர் எழுதியுள்ளார்

 

வணிகமயமாயுள்ள தமிழ் இதழ்ச்சூழலில் இது ஒரு முக்கியமான செய்தியாகும்.சுமார் 50 ஆண்டுக்காலம் தமிழ்க்கலை இலக்கியத் தொண்டாற்றிய ஒரு படைப்பாளிக்குத்தமிழ் கூறும் நல்லுலகம் செய்த புறக்கணிப்பை தி.க.சி. நன்கு எடுத்துக்காட்டிஎச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

ஒருபடைப்பின் மீது எழும் இருவிதமான எதிர்வினைகளைத் தி.க.சி.

 

எடுக்காட்டியிருப்பது முக்கியமான ஒன்று. கணையாழியில்சிவத்தம்பி ஒரு கட்டுரை எழுதியபொழுது “அக்கட்டுரை பல விஷயங்களைச் சிந்திக்கஉதவுகிறது” என்று கூறும் தமிழவனின்எதிர்வினையை மென்மையான கருத்து மாறுபாடு என்று தி.க.சி மதிப்பிடுகிறார்.

 

அதே கட்டுரை குறித்துநிறப்பிரிகை ஆசிரியர் பொ. வேல்ச்சாமி கூறும் போது ‘ மிகவும் ஏமாற்றம் ஏற்பட்ட்து ‘என்கிறார். இது ஓர் வன்மையான எதிர்ப்பு…………வழமையான எதிர்வினை என்கிறார்தி.க.சி.

 

இரண்டையும் காட்டி இவை பற்றித்தம் கருத்தையும் பதிவு செய்து வாசகர் எதிர்வினையாற்ற வேண்டுமெனில்மேற்கோள்ளவேண்டிய வழியை அவரின் முடிவுக்கே விட்டு விடுகிறார்.

 

பக்கம் 50-இல் “ பின் நவீனத்துவச்சிந்தனை என்பது சாராம்சத்தில், நவீன முத்லாளித்துவத்தை ஆதரிக்கிறது என்பது தெளிவு“ என்று

 

 

 

எழுதும் தி.க.சி அதற்கான காரணங்களையும்பதிவு செய்கிறார்.

 

 

.நவீன இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள முயலும்வாசகருக்கு இந்நூல் ஒரு திறவுகோல் என்பதில் ஐயமில்லை.

 

{ காலத்தின் குரல் என்னும் தி.க.சி யின் நூலை முன் வைத்து }

Series Navigationஇடைவெளிகள் (10) – மிகைப்படுத்தலும் மனத்துள்ளலும்குரானுக்கான தப்சீர் எழுத்தியல் வரலாறு
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *