இடம் : சிட்னி – ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக்கல்லூரி (Homebush Boys’ High School)
காலம் : (20.04.2013) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை
பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா
கே.எஸ்.சுதாகர்
தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் சந்த்தித்துக் கலந்துரையாடும் – எழுத்தாளர்விழா 2001 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகின்றது. 2005 வரையும் இதன் பிரதம அமைப்பாளராக திரு லெ.முருகபூபதி செயல்பட்டார். 2006 இலிருந்து ‘அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்’ என்ற அமைப்பு இவ்விழாவை ஒழுங்கு செய்து வருகின்றது.
இதுவரை காலமும் நடந்த விழாக்களில் இலங்கையிலிருந்து தி.ஞானசேகரன், கோகிலா மகேந்திரன், தேவகெளரி, உடுவை.எஸ்.தில்லை நடராஜா, தெளிவத்தை ஜோசப், லலிதா.நடராஜா ஆகியோரும் டென்மார்க்கிலிருந்து வி. ஜீவகுமாரன், அமெரிக்காவிலிருந்து வேலுப்பிள்ளை.பேரம்பலம், இங்கிலாந்திலிருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தமிழகத்தின் மூத்த தலைமுறைப் படைப்பாளி எஸ்.வைதீஸ்வரன், ஜேர்மனியிலிருந்து எழுத்தாளரும் ஓவியரும் ‘வெற்றிமணி’, ‘சிவத்தமிழ்’ இதழ்களின் ஆசிரியருமான மு.க.சு.சிவகுமாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இதுவரை நடந்த எழுத்தாளர் விழாக்களின்போது ஐந்து புத்தகங்களை வெளியிட்டிருந்தன. 20 எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி ‘உயிர்ப்பு’ என்ற சிறுகதைத்தொகுதியும், 42 கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கி ‘வானவில்’ என்ற கவிதைத் தொகுதியும், சிசு.நாகேந்திரனின் ‘பிறந்த மண்ணும் புகலிடமும்’ கட்டுரைத் தொகுதி, கே.எஸ்.சுதாகரின் ‘எங்கே போகிறோம்’ சிறுகதைத்தொகுதி, ஆவூரான் சந்திரனின் ‘ஆத்மாவைத் தொலைத்தவர்கள்’ சிறுகதைத்தொகுதி ஆகியவை சங்க வெளியீடாக வந்துள்ளன. தவிர ‘பூமராங்’ என்றொரு மலரையும் வெளியிட்டிருந்தார்கள். அத்துடன் 2001 இல் நடந்த முதலாவது எழுத்தாளர்விழாவின் போது ‘மல்லிகை அவுஸ்திரேலிய சிறப்புமலரும்’, 2004 ஆம் ஆண்டு ‘ஞானம் அவுஸ்திரேலியா எழுத்தாளர்விழா சிறப்பிதழும்’, 2012 இல் ‘ஜீவநதி அவுஸ்திரேலியா சிறப்புமலர்‘வெளியிடப்பட்டன.
இவை தவிர ஓவியக்கண்காட்சி, ஓவியப்போட்டி, புத்தகக்கண்காட்சி, மறைந்த எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சி, குறும்படங்கள், நாட்டுக்கூத்து, நடனம், நாடகம், வில்லிசை, சிறுவர் நாடகம் என்பனவும் நடத்தப்ப்ட்டுள்ளன.
இம்முறை சிட்னியில் இந்த விழா 20.04.2013 அன்று, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவர் சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் தலைமையில் முழுநாள் நிகழ்வாக நடைபெற இருக்கின்றது. ‘தமிழ் இனி’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வில் – ‘தமிழ் வளர்ச்சியில் இசையும் கலையும்’, ‘இணையமும் தமிழ் இசைவும்’, ‘தமிழ்க் கல்வியில் அடுத்த கட்டம்’ என்ற தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற இருக்கின்றது.
மற்றும் அறிமுகத்துடன் ‘தமிழ் இனி’ என்ற குறும் திரைப்படம், சங்க உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரைத்தொகுதி ‘மறுவளம்’ நூல் வெளியீடு, சஞ்சிகை – நூல் அறிமுகங்கள், ‘சொல்ல நினைக்கிறேன்’ என்ற தலைப்பில் கவியரங்கம், கோகிலா மகேந்திரன் எழுதி தயாரிக்கும் நாடகம் என்பன இடம்பெறும்.
இடம் : சிட்னி – ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக்கல்லூரி (Homebush Boys’ High School)
காலம் : (20.04.2013) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -5 மூன்று அங்க நாடகம்
- ஆன்மிகமோ, அன்னைத் தமிழோ- அன்பேயாகுமாம் எல்லாம்!! -தமிழறிஞர் திரு.கதிரேசனைத் தெரிந்துகொள்வோம்!
- வெளியிடமுடியாத ரகசியம்!
- மீள்பதிவு
- நாளைக்கு இருப்பாயோ நல்லுலகே…?
- பிறவிக் கடல்.
- ’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை
- மலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து…
- சற்று நின்று சுழலும் பூமி
- புலி வருது புலி வருது
- அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை லிஸ் மெயிட்னர்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 16
- மந்திரமும் தந்திரமும் – ஜப்பானிய நாடோடிக்கதை
- தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !
- குருஷேத்திர குடும்பங்கள் 6
- நீர்நிலையை யொத்த…
- கவிதை
- உன்னைப்போல் ஒருவன்
- கடல் நீர் எழுதிய கவிதை
- புகழ் பெற்ற ஏழைகள் 3. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏழை – கலைவாணர்
- நீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்
- குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?
- குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா? – 1
- ஆதாமும்- ஏவாளும்.
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 2
- அக்னிப்பிரவேசம்-30 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா
- ஒரு காதல் குறிப்பு
- இந்தியாவில் பிரேயிலின் எதிர்காலம் – வாய்ப்புகள்+சவால்கள்.
- தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் – ஆவணப்படம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களில் அரசியல் தொடர்ச்சி
- நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 4 – 5