மரண தண்டனை எனும் நரபலி

This entry is part 2 of 34 in the series 10 நவம்பர் 2013

தூக்கு தண்டனை ஆதரவு எனபது நரபலி ஆதரவு போல

நரபலி கொடுத்தால் பல நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்ததற்கும் இப்போது மரண தண்டனை தந்தால் குற்றங்கள் அழிந்து விடும்,குறைந்து விடும் என்ற நம்பிக்கைக்கும் துளி கூட வித்தியாசம் கிடையாது

நரபலி தருவதை பார்ப்பவர்கள்,கேட்டவர்கள் சாமி வந்து ஆடுவது போல நம் நாட்டில் சிலர் மரண தண்டனைக்கு ஆதரவாக குதிப்பது வேதனையான ஒன்று.

தன் உறவினரை கடித்து உயிரிழக்க  வைத்த பாம்பை,சிறுத்தையை பிடித்த பிறகு அதை வெட்டி கொன்றால் தான் மனம் ஆறும் என்று சொல்வதற்கும் ,பிடிபட்ட குற்றவாளியை கொல்வதற்கும் வித்தியாசம் எதுவும் கிடையாது

வருடத்திற்கு பல ஆயிரம் பேர் நம் நாட்டில் வெறி நாய் கடியால் ஏற்படும் நோய்க்கு பலி ஆகிறார்கள்.அதை தடுக்க தெரு நாய்களை ஒழிப்பதை ,அப்படி செய்வது பாவம் என்று எதிர்க்கிறவர்களை கூட இப்படி யாரும் திட்டுவது கிடையாது,நக்கல் செய்வது கிடையாது.மாறாக மேனகா காந்திகளின் தாளங்களுக்கு தான் பெரும்பான்மை அரசுகள் ஆட்டம் போடுகின்றன.

ஆனால் பிடிபட்ட குற்றவாளியை கொல்லாதே என்று கூறினால் கூறுபவனை வெட்ட வேண்டும்,தேச துரோகி  என்று கூறுபவர்களுக்கு இங்கு குறைவு கிடையாது.அப்படி சொல்பவர்களுக்கும்  சாடிச மன நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா

நான் மார்க்கெட்டிற்கு ,ரயில் நிலையத்திற்கு செல்லும் போது வழியில் குடித்து விட்டு வண்டி ஒட்டி ஒருவன் ஏற்றி இறந்து விட்டால்,அல்லது மெட்ரோ பாலத்தை கட்டும் பணியில் தவறான பொருட்களின்/தவறான அணுகுமுறையின் காரணமாக பாலம் சரிந்து அதனடியில் மாட்டி கொண்டால்,சிக்னலை மதிக்காமல் ஒரு வாகனம் ஏற்றி கொன்று விட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கோவம் வராதா,கொலைக்கு காரணமானவனை தூக்கில் போட வேண்டும் என்று சொல்ல உரிமை கிடையாதா

அந்த உரிமை யாராவது அதே மார்கெட்டில் குண்டு வைத்தாலோ,இல்லை துப்பாகியால் சுட்டு கொல்லப்பட்டால் மட்டும் தான் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வருமா

குறிப்பிட்ட வகையில் இறந்தால் மட்டும் தான் பாதிக்கப்பட்ட குடும்பம் நம் கண் முன் வருமா,உன் குடும்பம் பாதிக்கபட்டால் இப்படி பேச மாட்டாய் என்ற நக்கல் வருமா

விபத்துகளில் நெருங்கிய உறவினர்களை இழக்காதவர்கள் இல்லாத குடும்பங்களே இருக்காது. அதனால் அதனை குறைக்க சாலை விபத்துக்கு காரணமாக இருப்பவர்களை தூக்கில் போட வேண்டும் என்று யாரும் குதிக்கவில்லையே .தீவிரவாதம் காரணமாக இறப்பவர்களை விட விபத்துக்கள் காரணமாக இறப்பவர்கள் ஆயிரம் மடங்கு .ஆனால் யாரும் குற்றங்கள் குறைய தூக்கில் போடுங்கள் என்று பொங்குவது இல்லையே .பாதிக்கப்பட்ட பல லட்சம் குடும்பங்கள் கண்ணுக்கு முன் வருவதில்லையே

உலகின் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.அந்த நாடுகளில் குற்றங்கள் அதிகமாக உள்ளதா அல்லது மரண தண்டனை அதிகம் வழங்கப்படும் நாடுகளில் குற்றங்கள் அதிகமாக உள்ளதா.இதுவரை நிரபராதிகள் யாரும் தவறாக தண்டிக்கப்பட்டது கிடையாது என்று யாராவது உறுதி கூற முடியுமா.அப்படி சொல்ல முடியாத நிலையில் மாற்ற முடியாத தண்டனையான மரண தண்டனைக்கு ஆதரவாக இருக்கும் நிலை மனிதத்தன்மை தானா என்பதை மரணதண்டனை ஆதரவாளர்கள் சிந்திக்க வேண்டும்

Series Navigationசுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013BISHAN-TOA PAYOH DEEPAVALI FIESTA 2013 Date: 24 November 2013, Sunday – Singapore
author

பூவண்ணன்

Similar Posts

8 Comments

  1. Avatar
    paandiyan says:

    காட்டுமிராண்டிதனமான தண்டனை இஸ்லாமிய நாடுகளில் தான் உள்ளது. நீங்கள் ஒரு மத சார்பர்ற கட்டுரையாளர் !! என்பதால் உங்கலால் கூட மறந்து போயி கூட அதை விமர்சனம் பண்ண முடியாது

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் பூவண்ணன்,

    ஓரடி தூரத்தில் நின்று நேரடியாக மகாத்மா காந்தியைச் சுட்ட குற்றவாளி கோட்ஸேயிக்குத் தூக்குத் தண்டணை கொடுத்தது சட்டப்படி சரியா ? தப்பா ?

    வீதியில் தெரியாமல் நேரும் விபத்து மரணங்களை நேரடிக் கொலை மரணங்களோடு ஒப்பிடாதீர்கள்.

    ஆப்பிள் பழமும், ஆரஞ்சுப் பழமும் ஒன்றுதான் என்று இணைத்துப் பேசாதீர்கள்.

    சட்டம் அறிந்த சமூக நீதிபதியாகிய நீங்கள் வெறி பிடித்த ஆணாதிக்கக் கொடுமையான “பலவந்தப் புணர்ச்சியைக்” கூட விபத்து என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்று குதர்க்க வாதம் செய்தவராயிற்றே.

    சி. ஜெயபாரதன்.

  3. Avatar
    புனைப்பெயரில் says:

    மரண தண்டனை வேண்டாம் என்னும் இவர் சிறு பிஞ்சுகளை காமுற்று கொலை செய்பவர்கள், தன் வீட்டுக்கு அருகே குடியமர்த்தி அவர்கள் மனம் மாற அவர்களை தன் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து பரிமாறச் சொல்லலாம், தன் வீட்டு பெண்கள் கரங்களால்… அவர்கள், “இன்னா செய்தாரே… “ எனும் குறள் நிலை உணர்ந்து நல்லவர்களாய் மாறி “..பூவண்ணம்….” என்று பாடுவார்கள்.

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் பூவண்ணன்,

    நீங்கள் ஓர் இராணுவ அதிகாரி. உயிருள்ளவரைச் சுட்டுக் கொல்லும் போர்க்கலையை நன்கு பயின்றவர். போர்களத்தில் சண்டையிட மறுக்கும் அப்பாவிப் படையாளிகள் இராணுவ அதிகாரிகளால் நேராகச் சுட்டுக் கொள்ளப் படுகிறார். மேலும் ஐந்தாம்படை வாதிகள், போர் விதிகளை எதிர்ப்போர், சூழ்ச்சி செய்வார் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப் படுகிறார்.
    இவருக்கு உங்கள் நீதிநெறி சொல்வதென்ன ?

    தூக்குத் தண்டனை குற்றங்களைக் குறைத்தாலும், குறைக்கா விட்டாலும் குற்றவாளிக்கு ஓர் பயத்தை நிச்சயம் ஊட்டும். கொலைத் தண்டனை நீக்கப் பட்டால் நிச்சயம் நாட்டில் நேரடிக் கொலைகள் எண்ணிக்கை அதிகமாகும்.

    அதுபோல் “பலவந்தப் புணர்ச்சி” விபத்து என்று ஏற்றுக் கொள்ளப் பாட்டால், நாட்டில் அதன் எண்ணிக்கை நிச்சயம் பேரளவு அதிகமாகும்.

    சி. ஜெயபாரதன்.

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ///குறிப்பிட்ட வகையில் இறந்தால் மட்டும் தான் பாதிக்கப் பட்ட குடும்பம் நம் கண் முன் வருமா,உன் குடும்பம் பாதிக்க பட்டால் இப்படி பேச மாட்டாய் என்ற நக்கல் வருமா ///

    நிச்சயம் வரும் பூவண்ணன், ஏனெனில் உங்கள் விந்தை உபதேசம் ஊராருக்குத்தான். உங்களுக்கு இல்லை. ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம் :

    உங்கள் நெருங்கிய 16 வயது சகோதரி இளவயது மங்கை பலவந்தப்பட்டு, கொலை செய்யப் பட்டால் குற்றவாளிக்கு என்ன தண்டனை சமூகம் கொடுத்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர் என்று நழுவி ஓடாமல் நின்று பதில் சொல்லுங்கள்.

    1. பலவந்தக் கொடுமை ஒரு “விபத்து” என்று ஒதுக்கி முதலில் முழுமனதாய் ஏற்றுக் கொள்வீரா ?

    2. பிடிபட்ட குற்றவாளிக்கு வெறும் ஆயுள் தண்டனை மட்டும் கொடுத்துச் சிறையில் சுதந்திர தினத்தன்று கோழிப் பிரியாணி கொடுத்து கலர் டி.வி. காட்டுவீரா ?

    சி. ஜெயபாரதன்

  6. Avatar
    பூவண்ணன் says:

    ஜெயபாரதன் ஐயா

    பல நூறு பேரை கொன்ற எதிரி நாட்டு படை வீரர்கள்,மூர்க்கமாக அடித்து கொலை செய்தவர்களை கூட உயிரோடு பிடித்தால் மரியாதையாக போர்க்கைதிகளாக ஜெனீவா விதிமுறைகளின்படி தான் நடத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டால் எவ்வளவு பேரை கொன்றவனாக இருந்தாலும் அவர்களை அவர்கள் நாட்டிடம் ஒப்படைக்க தான் வேண்டும்.

    பணி புரிய மறுப்பவர்களை கொல்லும் வழக்கங்கள் ஒழிந்து விட்டன. இப்போது அதிகபட்சம் சிறைத்தண்டனை தான்.கொடிய குற்றங்களுக்கு மரணதண்டனை ராணுவ நீதிமன்றங்களால் விதிக்கபட்டாலும் அதையும் உச்சநீதி மன்றம் மாற்ற முடியும்

    நான் சொல்லாத ஒன்றை என்மேல் மறுபடியும் மறுபடியும் திணிப்பது ஏன்.உடலின் மீது நடத்தப்படும் வன்முறைகளை ஆண்கள் தங்களின் உடலின் மீது நடத்தப்பட்ட வன்முறைகளை எப்படி எடுத்து கொள்கிறார்களோ அதே போல பெண்களும் எடுத்து கொண்டு எதிர்நீச்சல் போட்டு வாழ வேண்டும் என்று தானே எழுதினேன்.

    ஆணோ பெண்ணோ இருவரின் உடல் மீதும் நடத்தபடும் வன்முறை பெரிய குற்றம் தான்.அதற்கு தண்டனை வேண்டாம் என்று நான் எங்கே கூறினேன்.அந்த குற்றத்தை தடுக்க உயிரையும் இழக்கலாம் என்ற எண்ணம் ஆணுக்கு வருவது கிடையாதே.அதே போல பெண்களும் மாறவேண்டும் என்று தான் எழுதினேன்

  7. Avatar
    பூவண்ணன் says:

    ஜெயபாரதன் ஐயா

    உன் வீட்டில் நடந்தால் என்ன செய்து இருப்பாய் என்ற கேள்வி இப்போது எந்த விஷயத்தை பற்றி பேசினாலும் முகத்தில் வீசப்படுகிறது. இந்த கேள்வியில் எந்த ஞாயம் இருப்பதாகவும் எனக்கு படவில்லை.நம் உறவுகள் ஆராய்ந்துபார்க்கும் தன்மையை கடந்தவை.
    பிழைக்கும் வாய்ப்பே இல்லை,வேறு பிழைக்க கூடிய வாய்ப்புள்ள நோயாளிக்கு தான் ஹெலிகாப்ட்டர் evacuation/அறுவை சிகிச்சை /ventilator முதலில் என்று கூறும் உரிமை எனக்கு எப்போதும் உண்டு. உன் தாயாக/குழந்தையாக இருந்தால் இப்படி சொல்வாயா என்ற கேள்விக்கு கண்டிப்பாக சொல்ல மாட்டேன் என்று தான் கூறுவேன்.அதனால் தான் மருத்துவர்கள் தங்கள் உறவுகளுக்கு தாங்களே வைத்தியம் பார்க்க கூடாது,நீதிபதிகள் தங்கள் உறவுகளின் வழக்குக்கு தாங்களே தீர்ப்பு கூற கூடாது என்ற நடைமுறைகளும்
    பிழைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் திருமணமாகாத உயர் பதவியில் இருந்த பெண் மருத்துவர் தன ஒரே துணையாக இருந்த பாட்டிக்கு பல லட்சம் செலவு செய்து சில வாரங்கள் ஆயுளை நீட்டித்து கொண்டிருந்தார். பல நோயாளிகளுக்கு /அவர்களின் உறவினர்களுக்கு தெளிவான அறிவுரை வழங்கிய அவர் தன ஒரே உறவு என்று வரும் போது அதற்க்கு நேர்மாறாக நடந்து கொண்டார். இதில் தவறு இருப்பதாக எனக்கு படவில்லை .

  8. Avatar
    kargil jai says:

    இது மாதிரி மரண தண்டனையை எதிர்க்கும் பல எழுத்தாளர்களை, முன்னாள் ராணுவத்தினரை பார்த்திருக்கிறேன். ராணுவத்தில் சேர அடிப்படைத் தகுதியாக, நேர்மை இல்லாதவராக, ஸ்மரணை இல்லாதவராக, உணர்ச்சி வசப்படாதவராக, நல்லெண்ணம் இல்லாதவராக இருத்தல் அவசியம். அது பற்றி மேலும் விவாதிக்க விருப்பம் இல்லை.

    இம்மாதிரி மரண தண்டனை எதிர்ப்பாளர்களிடம் நான், இலங்கையை சேர்ந்த ரிசானா நஃபீக் என்னும் பெண், கொலை செய்ததாக கையெழுத்துப் போட மிரட்டப்பட்டு, பிறகு கை எழுத்தையே ஆதாரமாக வைத்து தலை வெட்டப்பட்டதை குறித்துக் கேள்விகேட்டுள்ளேன். அதற்கு மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் “அந்த பெண் அநியாயமாக சிறு குழந்தைய கொன்றுவிட்டாள்.. அதனால் தண்டனை சரியே” என்று சொல்லி இருக்கிறார்கள்.

    அதாவது முஸ்லீம் வேறொருவரை கொலை செய்தால் அச்செயல் செய்த தவறுக்கான எதிர்விளைவே. முஸ்லீம் அல்லாதவர் கொலை செய்தாலே அது மனிதத் தன்மையற்ற செயல் என்று இந்த மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் கூறுவார்கள.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *