(1819-1892)
ஆதாமின் பிள்ளைகள் – 3
(Song of the Open Road)
(திறந்தவெளிப் பாட்டு -3)
ஆத்மாவின் வெளிப்பயணம்.
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஆத்மாவின் வெளிப் பயணம்
இங்கு தான் துவங்குது
வெளிப் பயணத்தைத் தூண்டுவது
உள்ளெழுச்சி தான்.
சக்தி மிக்க
வாசற் கதவுகள் வழியாக,
வெளிவரும் பயணம், தூண்டும்
வினாக்கள்
மூலமா கத்தான் !
ஏனிந்த வேட்கை எழுந்திடும் ?
இருளடைந்த
இந்தச் சிந்தனைகள்
ஏன் தோன்றும் ?
என்னைச் சுற்றி அருகில்
ஏன் ஆடவர் மாதர்
இருக்கிறார் ?
பரிதி ஒளிக் கதிர்களால்
விரிந்திடும் என் குருதிப் பரிமாணம்.
என்னை விட்டு அவர்கள்
நீங்கும் போது ஏன்
பாய்மரக் கயிறு போன்ற
என் உவப்பு நாண்கள்
தரை மட்டத் துக்கு மூழ்கிடும்
தொய்ந்து போய் !
இன்னிசைச் சிந்தனைகள்
என்மீது படிய
எனக்கு நிழல் தரா மரங்கள்
எதற்குள்ளன ?
[குளிர், வேனிற் காலங்களில்
அந்த சிந்தனை
தொங்கிடும் அம்மரங்களில்.
கனிகள் சிந்தும்
கடந்து செல்கையில்]
உடனே நான் பகிர்ந்து
கொள்வ தென்ன
முன்பின் தெரியாதவ ரோடு !
என்னருகில் அமர்ந்திடும்
காரோட்டி யோடு
பகிர்ந்து கொள்வ தென்ன ?
கடற்கரையில்
நடந்து நான் நிற்கையில்
வலை வீசி
மீன் பிடிப்போனிடம்
பகிர்ந்து கொள்வ தென்ன ?
ஓர் மாதுடனும், மனிதனுடனும்
நல்லுற வோடு
சுதந்திரமாய்ப் பழகிவர எனக்கு
உதவி செய்வது எது ?
என்னுடன்
சுதந்திரமாய்ப் பழகி வர
அவருக்கு
உதவி செய்வது எது ?
+++++++++++++++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
- Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
- Britannica Concise Encyclopedia [2003]
- Encyclopedia Britannica [1978]
- http://en.wikipedia.org/wiki/Walt_Whitman
- Jayabarathan [jayabarathans@gmail.com] October 2, 2014
- சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்
- முரண்களால் நிறைந்த வாழ்க்கை
- இந்தியாவின் முதல் பௌதிக விஞ்ஞான மேதை ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்
- திறவுகோல்
- கோணங்கிக்கு வாழ்த்துகள்
- கனவுகள் அடர்ந்த காடு – விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்
- தொடுவானம் 36. எங்கள் வீட்டு நல்ல பாம்பு
- தந்தையானவள் அத்தியாயம்-3
- தினம் என் பயணங்கள் -36 இதயத் துடிப்பு அறக்கட்டளை நிறுவகம்
- பேசாமொழி 23வது இதழ் வெளியாகிவிட்டது…
- தேவதாசியும் மகானும் (2)
- அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு. ஒரு வாசிப்பு அனுபவம்
- குளத்தங்கரை வாகைமரம்
- முத்தொள்ளாயிரத்தில் மறம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 95
- பாவண்ணன் கவிதைகள்
- சுத்த ஜாதகங்கள்
- அழியாச் சித்திரங்கள்
- வள்ளுவரின் வளர்ப்புகள்
- வெண்சங்கு ..!
- பாரதியின் காதலி ?
- காந்தியடிகள் – ஓர் ஓவிய அஞ்சலி
- வாழ்க்கை ஒரு வானவில் – 23
- பொன்வண்டுகள்
- ஆங்கில மகாபாரதம்