எஸ். ராஜகுமாரன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 3 of 15 in the series 5 ஜூன் 2016

 

எஸ். ராஜகுமாரன் தமிழ்த் திரைப்பட இயக்குனர் . கிராமம் , பெண் , இயற்கை சார்ந்த பாடுபொருட்களைக் கொண்ட இவரது கவிதைகள் எளியவை. ‘ வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ‘ என்ற கவிதையே புத்தகத் தலைப்பாகியுள்ளது. உற்று நோக்குதல் , காட்சிப்படுத்துதல்

மற்றும் ஆய்வுத் தகவல்கள் கொண்டது.

குழந்தையின் விருப்பத்துக்காய்

செடியின் கீழமர்ந்து

இரு விரலால்

பிடிக்க எத்தனிக்கையில்

வண்ணங்கள் மட்டும் ஒட்டியிருக்கும்

இறக்கை நழுவிய

விரல் நுனியில்

—- என்கிறார். பன்னிரெண்டு நாட்கள் முட்டை வாசமிருந்து ஒரு வாரம் மட்டுமே வாழும் இயல்பு

கொண்டது வண்ணத்துப் பூச்சி . எதிரிகளிடமிருந்து தப்பித்தலும் , விழிப்போடிருப்பதுமே வாழ்நாள்

பணிகள். பகைவரிடம் தப்பிக்க நிறங்களை அடர்த்தியாய் ஆக்கிக் கொள்ளும் வசதி உண்டு. கவிதையின்

தலைப்பிற்கு விளக்கம் தருவது போல் அமைந்துள்ளது முத்தாய்ப்பு.

வண்ணத்துப் பூச்சிக்கு

எந்த நிறம் பிடிக்குமென்று

கேட்கும் குழந்தையிடம்

எல்லா நிறமும் பிடிக்குமென்று

சொல்லிய பிறகு

எனக்குள்ளும் எழுகிறது

அதே கேள்வி

தளர்வான சொற்களால் கட்டமைக்கப்பட்ட கவிதை உரை நடைத் தாக்கத்துடன் அமைந்துள்ளது.

‘ கொலுசு யுத்தம் ‘ என்ற கவிதை தாய் வீட்டிற்குப் பிரசவத்திற்குச் சென்றுள்ள மனைவியின் பிரிவு

பற்றிப் பேசுகிறது. கவிதையின் தலைப்பே கவிதையின் கருப்பொருளை விளக்கிவிட்டது.

மடித்து வைக்கப்பட்டிருக்கும்

சேலைகளெங்கும்

கலைந்து கிடக்கின்றது

உன் நினைவுகள்

—- என்ற வரிகளில் அழகான கவித்துவம் காணப்படுகிறது. புதிய மடிமம் நன்றாக அமைந்துள்ளது.

‘ கிடக்கிறது ‘ என்பதற்குப் பதிலாக ‘ கிடக்கின்றன ‘ என்பதே சரி .

நீ ஊர் போன பின்

நம்மைப் போலவே

பிரிந்து கிடக்கின்றன

தூக்கமிழந்த இமைகள்

—- என்ற வரிகள் பிரிவை நயமாகச் சொல்கின்றன.

புல்லாங்குழல் மீதமர்ந்து

சட்டெனப் பறந்ததொரு

வண்ணத்துப் பூச்சி

—- என்ற வரிகளத் தொடர்ந்து முத்தாய்ப்பு அமைந்துள்ளது.

அந்தச் சிறு கணத்தில்

வண்ணத்துப் பூச்சியிடம்

புதிய ராகங்கள் ஏதேனும்

கற்றுக் கொண்டிருக்குமோ

புல்லாங்குழல்

— புல்லாங்குழல் தொடர்பான காட்சி நயமானதென்றாலும் , கவிதையோடு ஒட்டாமல் தனித்து

நிற்கிறது.

வீடுபேறு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ‘ கூடு பேறு ‘ என்ற தலைப்பில் ராஜகுமாரன் ஒரு

கவிதை எழுதியுள்ளார்.

வீடு

விற்கப்பட்டதையும்

வாங்கியோர்

இடிக்கப் போவதையும்

எப்படிச் சொல்வது

கூடத்துத் தூணுக்கு மேல்

கூடு கட்டிக் கொண்டிருக்கும்

குருவிகளிடம் ?

—- கவிஞருக்கே உரிய மென்மையான மனம் … இதற்கு விளக்கம் தேவையில்லை !

‘ திண்ணை நாடகங்கள் ‘ என்ற கவிதையில் ஒரு சிறுவனின் குறும்பு பதிவாகியுள்ளது காய்கறி விற்கும்

Series Navigationகாப்பியக் காட்சிகள் 7.துறவு வாழ்க்​கைதொடுவானம் 122. சிங்கப்பூர் முதல் சிதம்பரம் வரை……..
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *