இயற்கை வாதிக்கிறது இப்படி……

This entry is part 43 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

அந்தி வெளிச்சம் வருகிறது..!
காற்றே வழிவிடு
ஆயிரங்கொண்டலோடி
வருகிறது…

மின்மினிப் ப+தமாய்
சூரியன் மறைகிறான்
சிவந்த கனல்களால் விண்ணிலே உரசுகிறான்…
மேற்கிலே
உலை மூட்டுகிறான்
மேக கணங்களும்
தீப்பிடிக்கின்றன…

அந்தி வெளிச்சம் வருகிறது
காற்றே வழிவிடு!

அவசரமாய்
மறைந்து விடப்போகிறது…
கதிரவனின் தோல்
உரிந்து விட்டதோ?
கடலும் படம் எடுக்கிறது
ஓசை படாமல்
ஒப்பாரி வைக்கிறது…
அந்தி வெளிச்சம் வருகிறது…
ஆனால்
சூரியன் மறைகிறது…
சூரியன்
மறையும் போதும
சுகமான வெளிச்சங்கள்…

ஜுமானா ஜுனைட், இலங்கை.

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)முனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930
author

ஜே.ஜுனைட்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *