மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++
உன் கண்ணுக்குள் நோக்கும்
ஒவ்வொரு தருணமும் காண்கிறேன்,
அங்கோர் சொர்க்க புரி
உள்ளதை !
அங்கு நான் பார்த்தால்
காதலனின் காதல் தென்படும் !
அவரும் காண்பர் ஒருநாள் காதல்
துவக்க காலத்தை !
உன்னித யத்தில்
ஆழமாய்ப் பதிந்து உள்ளது
என் இருப்பு !
காண்பேன் உன் இதயத்தில்
காதலனின் காதலை !
முன்பதை நான் ஒருமுறைக் கூறினும்,
பன்முறைக் கூறுவேன்,
மென்மேலும் நான் கூறுவேன் !
நீ என்னை நேசிப்பதை
நிச்சயமாய் நான் நம்புவதால்,
இன்று முதல் அறிந்து கொண்டேன்,
வழிப் பாதையில்
நீ என்னை நோக்கும் போது
காதலிப்பதாய் நீ சொல்லும் போது
காண்கிறேன்.
மழை பெய்தால் என்ன ?
கவலைப் படேன் !
உன்னிதய ஆழத்திலே நான்
என்றும்
நிலைத்தி ருப்பேன் !
++++++++++++++++++++++++++++
- சூரியன் புறக்கோளான வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூனில் வைரக் கல் மழை பெய்து கொண்டிருக்கிறது.
- தொடுவானம் 184. உரிமைக் குரல்
- கம்பனின்[ல்] மயில்கள் -3
- ” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது
- கவிதை
- இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!
- சுகிர்தராணி கவிதைகளில் இயற்கை கூறுகள்
- காதலனின் காதல் வரிகள்
- சுதந்திரம்