கவிதைத்திரட்டுகளும் கவிஞர்களும்

This entry is part 16 of 20 in the series 11 பெப்ருவரி 2018

லதாராமகிருஷ்ணன்.

 

கொங்குதேர் வாழ்க்கை என்ற தமிழ்க் கவிதைத் திரட்டின் முதல் பிரசுரத்தில் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் சிலர் விடுபட்டிருந்தது குறித்து அந்த சமயத்தில் சர்ச்சை எழுந்தது நினைவிருக்கிறது.

 

ஒரு கவிதைத்திரட்டில் சில கவிஞர்கள் விடுபடுவது வழக்கமாக நடப்பது. எந்தக் கவிஞரும் கவிதைத்திரட்டில் இடம்பெறவேண்டும் என்பதற்காக கவிதை எழுத ஆரம்பிப்பதில்லை; எழுதுவதில்லை. ஆனால், அப்படி விடுபட்டதற்கான காரணமாய் ஒரு கவிஞர் எழுதுவது கவிதையே யில்லை என்பதாய் தொகுப்பாசிரியர் சில கருத்துகளைப் பொதுவில் வைக்கும்போது அந்தக் கருத்திற்கான எதிர்வினை எழுவது இயல்பு. அப்படித்தான் அன்று எழுத்தாளர் (அமரர்) ராஜமார்த்தாண்டனுக்கும் எதிர்வினை எழுந்தது.

 

முதல் ‘கொங்குதேர் வாழ்க்கை’ கவிதைத்திரட்டில் என் கவிதையும் கிடையாது. இம்முறை திரு.வசந்தகுமார் என் கவிதையைக் கேட்டபோது நான் மேற்படி தகவலைச் சுட்டிக்காட்டியதும் இம்முறை தொகுப்பாசிரியராக தான் இருப்பதாகவும் சக கவிஞர் யூமா வாசுகி என் பெயரைப் பரிந்துரை செய்ததாகவும் கூறினார்.

 

எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் படைப்புகளை அவர் வாழ்ந்த காலத்தில் தொடர்ந்து வெளியிட்டவர், இலக்கியம் அறிந்தவர் என்ற மரியாதை எனக்கு தமிழினி வசந்தகுமாரிடம் எப்போதும் உண்டு. யூமா வாசுகியின் கவிதைகள் மேல் எனக்கு மிகுந்த அபிமானம் உண்டு.

 

(சமீபத்தில் யூமா வாசுகிக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தாபோது அவருடைய கவிதைகளுக்குக் கிடைத்திருந்தால் இன்னும் பொருத்தமாயிருந் திருக்குமே என்று எண்ணிக்கொண்டேன். அவருடைய மொழிபெயர்ப்புகள் மீதான விமர்சனமல்ல இது. யூமா பிரதானமாகக் கவிஞர். அதனால்தான் அப்படி எண்ணத் தோன்றியது. தவிர, மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களின் குடும்பம் அவருக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதை ஏற்க மறுத்ததை அத்தனை பாராட்டியவர்கள் (இவர்களில் பலர் கவிஞர் இன்குலாப் வாழ்ந்த காலத்தில் அவருடைய கவிதைகள் குறித்து எதுவுமே எழுதியதில்லை) பரிசை ஏற்க மறுத்தது தொடர்பான தங்கள் பாராட்டு பரிசை ஏற்கும் ஒரு உண்மைப் படைப்பாளியை ஏதோ ஒரு விதத்தில் மதிப்பழிப்பதாக அமையக்கூடும் என்று சிந்தித்துப் பார்க்கலாகாதா என்று வருத்தமாயிருந்தது. )

 

அவர்கள் இருவர் மேல் கொண்ட அபிமானத்தில் இந்தக் கவிதைத் திரட்டில் என் கவிதை இடம்பெற ஒப்புதல் அளித்தேன். இந்தக் கவிதைத்திரட்டை இன்னும் பார்க்கவில்லை.

 

ஒரு கவிதைத்திரட்டு என்பது பெரும்பாலும் தொகுப்பாசிரியரின் ரசனை, விருப்பம், மனச்சாய்வு ஆகியவற்றின் அடிப்படையிலே தான் உருவாகிறது. என்றாலும், அது வரலாற்றாவணமாகப் பிற்காலத்தில் பார்க்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் தொகுப்பாசிரியர் தன் தேர்வுக்கான காரணங்களைத் திரட்டில் முன்னுரையாக தெளிவுபடுத்தவேண்டிய தேவை இருக்கிறது.

 

நானும் கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தியும் தொகுத்த சிற்றகல் என்ற சமகாலக் கவிதைத்திரட்டுநூலில் முக்கியக் கவிஞர்களான ஞானக்கூத்தன், பிரம்மராஜன் இருவருமே பதிப்பகம் தொடர்பான காரணங்களுக்காக தங்கள் கவிதைகளைத் தர மறுத்துவிட்டனர். அவர்கள் இடம்பெறாதது எங்களுக்கு வருத்தமாக இருந்தது. வேறு சில விடுபடல்களும் உண்டு. பல்வேறு காரணங்களால். அந்தக் காரணங்களை  நாங்கள் எங்களுடைய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

 

சிற்றகல் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளை கவிஞர்களின் தேர்வாகக் கேட்டுவாங்கியது (தங்களுடைய கவிதைகளில் தங்களுக்குப் பிடித்த இரண்டு கவிதைகளை அனுப்பித்தரும்படி கவிஞர்களிடம் கேட்டுக்கொண்டோம். கவிஞர்கள் அடிப்படையில் தேர்ந்த வாசகர்கள் என்பதால் தங்களுடைய கவிதைகளில் ஆகச்சிறந்த கவிதைகளை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியும் என்பது எங்கள் நம்பிக்கை. நிறைய கவிஞர்கள் எங்களையே தேர்ந்தெடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். அப்படியே செய்தோம்.) குறித்து அப்போதிருந்த இலக்கிய விமர்சகர் ஒருவர் பழித்து எழுதியிருந்தார்.

 

ஆனால், சமகாலக் கவிதைவெளியில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர்களை தன் ரசனை சார்ந்து மட்டுமே ஒரு கவிதைத்திரட்டிலிருந்து ஒதுக்கிவிடுவது சம்பந்தப்பட்ட கவிஞர்களை விட தொகுப்பாசிரியருக்கே அதிக மதிப்பழிப்பு என்பது என் கணிப்பு.

 

நான் ஒரு கவிதைத்திரட்டைத் தொகுப்பேனெனில் சமகாலத் தமிழ்க்கவிஞராக மிக மிகப் பரவலான கவனம் பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து மற்ற தரமான கவிஞர்களை உள்ளடக்கிய திரட்டைத் தொகுக்க விரும்புவேன். இந்த என் அணுகுமுறையை நான் என் முன்னுரையில் தெளிவுபடுத்தி விடுவேன். மாறாக, அவர்கள் கவிஞர்களேயில்லை, அதனால் நான் அவர்களை இடம்பெறச் செய்யவில்லை என்று எழுதினால் அது எத்தனை அபத்தம்!

 

இப்போது நான் ஃபேஸ்புக் இல் என் நட்புவட்டத்தில் உள்ள கவிஞர்கள் அவர்களுடைய ‘டைம்-லைனில்’ பதிவேற்றியிருந்த கவிதைகளில் ஒரு வாசகராக நான் அனுபவித்துப் படித்த கவிதைகள் சிலவற்றை அவர்கள் அனுமதியோடு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து என் டைம்லைனில் பதிவேற்றியிருந்ததை ஒரு திரட்டாகத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இதில் கவிஞர் பிரம்மராஜன் உட்பட, பல முதன்மைக் கவிஞர்கள் இடம்பெறமாட்டார்கள். அவர்கள் தங்கள் கவிதைகளை முகநூலில் பதிவேற்றாத காரணத்தால், அப்படிப் பதிவேற்றப்பட்டதை நான் மொழிபெயர்க்காத காரணத்தால். ஆனால், இந்த விவரங்களை நான் என் கவிதைத் திரட்டில் தெளிவுபடுத்தவேண்டிய அவசியமிருக்கிறது. அப்படியில் லாமல், என் கவிதைத் திரட்டு சமகாலத் தமிழ்க்கவிதை வரலாறு என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துதல் சரியல்ல.

 

கொங்குதேர் 26-7-08 அன்று நாகர்கோயிலில் நிகழ்ந்த ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபது இலக்கியக் கூட்டத்தில்’ எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய உரை – கவிதையின் காலடியில் :ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம் – பிப்ரவரி 9, 2018 அன்று அவருடைய இணையதளத்தில் மீள்பதிவேற்றம் செய்யப்பட்டிருக் கிறது.. அன்று பேசிய கருத்துகளில் மாற்றம் உண்டெனில் அதை எழுத்தாளர் கண்டிப்பாகக் குறிப்பிட்டிருப்பார். அப்படி ஏதும் குறிப்பிடாததால் அன்று அவர் மொழிந்த கருத்துகளில் அவருக்கு இன்றும் உடன்பாடுதான் என்றாகிறது. அவருடைய கட்டுரையிலிருந்து சில கருத்துகள் இங்கே தரப்பட்டிருக்கின்றன.

 

 

ராஜமார்த்தாண்டன்தன்னைஒருவாசகனாகபடைப்பின்முன்நிறுத்துகிறார். தன்னில்அவைஉருவாக்கும்விளைவைகவனிக்கிறார். அதன்அடிப்படையில்தன்முடிவுகளைமுன்வைக்கிறார். அவரதுகொங்குத்தேர்வாழ்க்கைதொகுப்பில்பிரம்மராஜன், யவனிகாஸ்ரீராம்போன்றசிலரைஅவர்தவிர்த்துவிட்டாரென்றும், அதைப்பற்றிக்கேட்டபோதுஅவர்கள்தன்னைகவரவில்லைஎன்றுசொன்னாரென்றும்.முருகேசபாண்டியன்சொன்னார். இந்தபெயர்கள்இக்காலகட்டத்தைசார்ந்தவை யாதலால்நமக்குபெரிதாகத்தோன்றுகின்றன. இந்தஆட்களைநாம்அறிவோம்என்பதனால். எழுபதுகளில்கனகதாராஎன்பவர்எல்லாசிற்றிதழ்களிலும்எழுதித் தள்ளினார். அவரதுகவிதைகளைராஜமார்த்தண்டன்சேர்க்கவில்லை. அப்படிஅவர்விட்டுவிட்டஐம்பதுபேரைநான்சொல்லமுடியும்.

 

இப்படிவிடப்பட்டவர்களின்கவிதைகளைமட்டும்கவனித்தால்அவற்றைராஜமார்த்தண்டன்ஏன்விட்டுவிட்டார்என்பதுதெளிவாகவேஇருக்கிற்து. அவைபாசாங்கானவை. செயற்கையானவை. அரசியல்சார்ந்தபாசாங்குகள், மேடைசார்ந்தபாசாங்குகள்நம்கண்ணுக்குஉடனேதெரிகின்றன. அவற்றைராஜமார்த்தண்டன்தவிர்க்கும்போதுநாமும்ஒப்புக்கொள்கிறோம். சிற்றிதழ்சார்ந்தபாசாங்குகள்பலஉண்டு. கலகக்காரன்என்றபாசாங்கு. ‘சூப்பர்அறிவுஜீவிஎன்றபாசாங்கு. பெண்ணியவாதிஎன்றபாசாங்கு. தலித்புரட்சியாளன்என்றரபாசாங்கு. அவைநடுத்தரவற்கத்துஎளியமனிதர்களின்இயலாமையின்விளைவுகள்மட்டுமே. ஒருபுதுகோட்பாடுஇறக்குமதியாகும்போதுஉடனேஅதற்கேற்றபாசாங்குகளும்பிறக்கின்றன.நாற்பதுவருடங்களாகமிகமிகநுணுக்கமாகஒருகலைக்களஞ்சியம்என்றேசொல்லிவிடக்கூடியஅளவுக்குதமிழ்கவிதையைகவனித்துவரும்ராஜமார்த்தண்டன்இதற்குள்எத்தனைபாசாங்குகள்வந்துசென்றதைபார்த்திருப்பார்? ஆகவேஈவிரக்கமில்லாமல்ராஜமார்த்தண்டன்அவற்றைகழித்துவிடுகிறார்.


மூளையைஇலக்கியம்நோக்கிதிருப்புவதுஒருவகைவாசிப்பு. கோட்பாட்டுவிமரிசகர்கள்செய்வதுஅதையே. தமிழில்அம்மூளைகள்திறனற்றவைஎன்பதனால்அதன்பரிதாபகரமானவிளைவுகளைநாம்கண்கூடாகக்காணவும்செய்கிறோம். ஆழ்மனதைபடைப்புகளைநோக்கிதிருப்புவதென்பதுராஜமார்த்தாண்டன்முன்வைக்கும்வாசிப்பு. அவரதுஇலக்கியச்செயல்பாடுஎன்பதுஇதுவே. தன்னைமுழுமையாக, முன்நிபந்தனைகள்இல்லாமல், நிர்வாணமாகபடைப்புமுன்நிறுத்துவது. அப்போதுஒன்றுநிகழ்கிறது, எந்தஆழ்மனஎழுச்சிஇலக்கியப்படைப்பைஉருவாக்கியதோஅதேஆழ்மனஎழுச்சிவாசகதளத்திலும்நிகழ்கிறது. எந்நிலையிலும்முற்றிலும்புரிந்துவகுத்துவிடமுடியாதபண்பாட்டுஆழத்தில்படைப்பும்வாசகனும்உரையாடுகிறார்கள்.

 

 

எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்துக்களை முன்வைப்பது அவருடைய உரிமை. ஆனால், நவீன தமிழ்க்கவிதை ஆர்வலர்கள் பெரும்பாலோர் பிரம்மராஜனையும் யவனிகா ஸ்ரீராமையும் சமகால தமிழ்க்கவிதை வெளியிலிருந்து புறமொதுக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

 

இன்னொன்றையும் இங்கே முக்கியமாகச் சுட்டவேண்டும். ”எழுபதுகளில் கனகதாரா என்பவர் எல்லா சிற்றிதழ்களிலும் எழுதித்தள்ளினார். அவரது கவிதைகளை ராஜமார்த்தண்டன் சேர்க்கவில்லை.” என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். எழுபதுகளில் கனகதாரா என்ற பெயரில் யாரேனும் கவிஞர்கள் இருந்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்து கனகதாரா என்ற பெயரில் சங்கரசுப்பிரமணியன் என்பவர்(நான் சார்ந்திருந்த பார்வையற்றோர் நன்நல அமைப்பில் இருந்தவர் – வங்கி ஊழியர்) எண்பதுகள்-தொண்ணூறுகளில் மீட்சி போன்ற சிற்றிதழ்களில் எழுதினார். எழுதித் தள்ளவில்லை. எழுதினார். நல்ல நவீன தமிழ்க்கவிதைகள் எழுதினார். பிறகு அவருடைய கவிதைகள் வெளிவந்ததாகத் தெரியவில்லை. (நானும் அவரைப் பார்க்கவில்லை) வெளிவராததாலேயே அவர் எழுதவில்லை என்று சொல்ல வியலாது. அதற்குப் பிறகு அவர் கவிதைகளே எழுதவில்லை யென்றாலும் அதற்காக அவர் எழுதிய கவிதைகள் இல்லையென்றாகி விடாது. அதேபோல், அவருடைய கவிதையை திரு.ராஜமார்த்தாண்டன் தன்னுடைய கவிதைத் திரட்டில் சேர்க்கவில்லை என்பதாலேயே அவர் எழுதிய கவிதைகள் ஒன்றுமில்லாதவையாக ஆகிவிடாது.

 

 

 

Series Navigationசுவாசக் குழாய் அடைப்புகவிஞர் பழனிவேளின் தொகுப்பு “கஞ்சா” குறித்து…..
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *