[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++
தமிழர் புத்தாண்டுசித்திரை முதலா ?தைத் திங்கள் முதலா ?ஓயாத சொல்லடிப் போர் !இதற்கோர் தீர்வு ?ஒரு கல்லடியில் வீழ்ந்தனஇருமாங் கனிகள் ! தைத் திங்கள் தமிழாண்டுதப்புத் தாளம் ஆனது !எல்லாரும்ஏற்பதில்லை தமிழ் உலகில்.சித்திரை முதல் நாளை திருவள்ளுவர் பிறப்பாண்டாய் துவக்கிக் கொள்வோம்.சித்திரை மாதத் தமிழாண்டுபுத்துயிர் பெறும் !ஆண்டு தோறும் நேரும்குருச்சேத்திர யுத்தம் ஓய்ந்ததா ? ++++++++++
தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது தைத் திங்கள் முதலா என்னும் ஆயிரங்காலக் குருச்சேத்திரப் போர், திராவிட அரசியல் ஆளும் கட்சிகளுக்குள் ஆண்டு தோறும் வந்து போகும் தலைவலிக் காய்ச்சலாய் ஆகிவிட்டது. தி.மு.க தைத் திங்கள்தான் தமிழாண்டு துவக்கம் என்று முரசொலி முழக்குகிறது. இல்லை சித்திரை முதல் தேதிதான் தமிழாண்டு துவக்கம் என்று அ.தி.மு.க அலையோசை அடிக்கிறது. அந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சி மேடையில் அமர்ந்ததும் சித்திரை மாதத் தமிழாண்டு மாற்றப்படும் ! அல்லது தைத் திங்கள் தமிழாண்டுக் கொடி ஏற்றப்படும் ! இவற்றுடன் திருவள்ளுவர் நாட்காட்டியும் சிலர் பயன்படுத்தி வருகிறார். மூன்று வெவ்வேறு நாட்காடிகள் தமிழரைக் குழப்பி வருகின்றன. மூன்று ஒன்றாக ஒரு வழி காண்போம்.இந்த தீராப் பிரச்சனையை நீக்க ஏதாவது வழி இருக்கிறதா ? இரண்டு முறைகள் உள்ளன. பலர் ஏற்றுக் கொள்ளும் வழி .
1. திருவள்ளுவர் நாட்காட்டி ஆண்டை சித்திரை மாதம் முதல் தேதியில் துவக்கலாம். 2. அறுபதாண்டு சுழற்சி நாட்காட்டிக்கு தமிழ்ப் பெயர்கள் வைக்கலாம். தமிழாண்டு சித்திரை முதல் தேதி என்பது தொடரும்.3. அறுவடை நாள் பொங்கல் விழாவாய் தை மாதம் நிகழும்.சித்திரை முதல் நாள் துவங்கும் 60 ஆண்டு மீள்சுழற்சித் தமிழாண்டுக்குப் பெயர்கள் இடுவதற்குதமிழர் வரலாற்று நினைவாக முக்கிய நிகழ்ச்சி / மேதைகள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். தற்காலத் தமிழர், பிற்காலத் தமிழர் 60 ஆண்டு மீள்சுழற்சிக் காலத்தைக் கடக்கும் போது தமிழரது / தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அவருக்கு ஒருமுறை நினைவூட்டப் படுகின்றன. இப்பெயர்கள் அட்டவணை ஒர் ஆலோசனைதான். இவற்றில் புதிதாய்ச் சேர்க்கலாம் , நீக்கலாம், இவற்றை மாற்றலாம்; விருத்தி செய்யலாம். சீர்ப்படுத்தலாம், செப்பணிடலாம், நிராகரிக்கலாம். தேவையில்லை என்று குப்பையில் வீசி விடலாம். தமிழக நாட்காட்டிகள், 60 ஆண்டு மீள்சுழற்சி நிரலில் [தமிழ்ப் பஞ்சாங்க முறையில்] அல்லது நீடித்த ஒருபோக்கு முறையில் திருவள்ளுவர் ஆண்டு போல் அல்லது ஆங்கிலக் கிறித்துவ ஆண்டு போல் தமிழர் விருப்பப்படி இருக்கலாம். தமிழ்ப்பஞ்சாங்க முறை நாட்காட்டியைச் சுமார் 60% – 70% தமிழர் பயன் படுத்துகிறார் [என் ஊகிப்பு]. திருவள்ளுவர் ஆண்டைச் சுமார் 10% -15% தமிழர் பின்பற்றலாம். [என் ஊகிப்பு].
இந்த தமிழர் அறுபதாண்டு நாட்காட்டி, தமிழருள் ஒருமைப்பாட்டை நிலைநாட்டும். இந்த அட்டவணைப் பற்றி தமிழ் நண்பர் தமது கருத்துகளைக் கூறலாம்.யூகித்த திருவள்ளுவர் ஆண்டின் நீடிப்பு சித்திரை முதல் தேதி ஆரம்பம் என்று பெரும்பான்மைத் தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தால் திமுக / அதிமுக மாற்றி மாற்றி எறிந்து, பந்தாடாமல் ஒரே திருவள்ளுவர் ஆண்டு நீடித்து நிலையாய் இருந்திருக்கலாம். 60 ஆண்டுகள், பெயர்கள் தேவையின்றி எளியதாக்கி இருக்கலாம். எல்லாம் பருவகால முரணான தைத் திங்கள் தமிழாண்டு இடைச்சொருகால் வந்த வேற்றுமைப் பிரச்சனை.
கனிவுடன்,சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++
தகவல் :
1. https://134804.activeboard.com/t64371605/topic-64371605/
2. https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U
3. https://en.wikipedia.org/wiki/Tropical_year
4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy
5. http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html
6. https://en.wikipedia.org/wiki/Puthandu
+++++++++++++++
வரலாறு
இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)[1] விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காண முடிகின்றது.
எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 – 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.[2]
வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இராசிச்சக்கரமூடு சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், வியாழன் கோள் இயங்கும் ஒரு காலவட்டம் சோதிட ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.[3]ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.[3] [4]
தமிழகமும் அறுபது ஆண்டுகளும்
தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.[5] எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.[6] [7] தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான “அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.[8] விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.[9]
2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.[10] எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.[11][12]
+++++++++++++++
தமிழர் அறுபதாண்டு அட்டவணை
எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரகோரி ஆண்டு | எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரகோரி ஆண்டு | |||
01. | பிரபவ | சங்க முதல்ஆண்டு | Prabhava | 1987–1988 | 31. | ஹேவிளம்பி | திவாகரர்ஆண்டு | Hevilambi | 2017–2018 | |||
02. | விபவ | ஔவையார்ஆண்டு | Vibhava | 1988–1989 | 32. | விளம்பி | அருணகிரிஆண்டு | Vilambi | 2018–2019 | |||
03. | சுக்ல | திருவள்ளுவர்ஆண்டு | Sukla | 1989–1990 | 33. | விகாரி | தியாகராஜர்ஆண்டு | Vikari | 2019–2020 | |||
04. | பிரமோதூத | புத்தர்ஆண்டு | Pramodoota | 1990–1991 | 34. | சார்வரி | ஜி.யூ. போப்ஆண்டு | Sarvari | 2020–2021 | |||
05. | பிரசோற்பத்தி | தொல்காப்பியர்ஆண்டு | Prachorpaththi | 1991–1992 | 35. | பிலவ | கட்டப் பொம்மன்ஆண்டு | Plava | 2021–2022 | |||
06. | ஆங்கீரச | நக்கீரர்ஆண்டு | Aangirasa | 1992–1993 | 36. | சுபகிருது | வீரமாமுனிஆண்டு | Subakrith | 2022–2023 | |||
07. | ஸ்ரீமுக | இளங்கோஆண்டு | Srimukha | 1993–1994 | 37. | சோபகிருது | கால்டுவெல்ஆண்டு | Sobakrith | 2023–2024 | |||
08. | பவ | கண்ணகிஆண்டு | Bhava | 1994–1995 | 38. | குரோதி | தாயுமானர்ஆண்டு | Krodhi | 2024–2025 | |||
09. | யுவ | மணிமேகலைஆண்டு | Yuva | 1995–1996 | 39. | விசுவாசுவ | நாயக்கர்ஆண்டு | Visuvaasuva | 2025–2026 | |||
10. | தாது | சாத்தனார்ஆண்டு | Dhaatu | 1996–1997 | 40. | பரபாவ | குமர குருபரர்ஆண்டு | Parabhaava | 2026–2027 | |||
11. | ஈஸ்வர | கம்பர்ஆண்டு | Eesvara | 1997–1998 | 41. | பிலவங்க | ஆறுமுக நாவலர் ஆண்டு | Plavanga | 2027–2028 | |||
12. | வெகுதானிய | ஒட்டக்கூத்தர்ஆண்டு | Bahudhanya | 1998–1999 | 42. | கீலக | குமரிஆண்டு | Keelaka | 2028–2029 | |||
13. | பிரமாதி | ஆழ்வார்கள்ஆண்டு | Pramathi | 1999–2000 | 43. | சௌமிய | திருத்தணிஆண்டு | Saumya | 2029–2030 | |||
14. | விக்கிரம | சித்தர்கள்ஆண்டு | Vikrama | 2000–2001 | 44. | சாதாரண | காந்தியார்ஆண்டு | Sadharana | 2030–2031 | |||
15. | விஷு | ஆண்டாள்ஆண்டு | Vishu | 2001–2002 | 45. | விரோதகிருது | காமராசர்ஆண்டு | Virodhikrithu | 2031–2032 | |||
16. | சித்திரபானு | ஜெயங்கொண்டார்ஆண்டு | Chitrabaanu | 2002–2003 | 46. | பரிதாபி | இராஜாஜிஆண்டு | Paridhaabi | 2032–2033 | |||
17. | சுபானு | பெருந்தேவனார்ஆண்டு | Subhaanu | 2003–2004 | 47. | பிரமாதீச | பரிதிமால்ஆண்டு | Pramaadhisa | 2033–2034 | |||
18. | தாரண | திருத்தக்கர்ஆண்டு | Dhaarana | 2004–2005 | 48. | ஆனந்த | சிதம்பரனார்ஆண்டு | Aanandha | 2034–2035 | |||
19. | பார்த்திப | வளையாபதிஆண்டு | Paarthiba | 2005–2006 | 49. | ராட்சச | பாரதியார்ஆண்டு | Rakshasa | 2035–2036 | |||
20. | விய | சேக்கிழார்ஆண்டு | Viya | 2006–2007 | 50. | நள | பாரதிதாசன்ஆண்டு | Nala | 2036–2037 | |||
21. | சர்வசித்து | பூங்குன்றனார்ஆண்டு | Sarvajith | 2007–2008 | 51. | பிங்கள | பெரியார்ஆண்டு | Pingala | 2037–2038 | |||
22. | சர்வதாரி | நாலடியார்ஆண்டு | Sarvadhari | 2008–2009 | 52. | காளயுக்தி | அண்ணாதுரைஆண்டு | Kalayukthi | 2038–2039 | |||
23. | விரோதி | முத்தொள்ளாயிரம்ஆண்டு | Virodhi | 2009–2010 | 53. | சித்தார்த்தி | வரதராசர்ஆண்டு | Siddharthi | 2039–2040 | |||
24. | விக்ருதி | அப்பர்ஆண்டு | Vikruthi | 2010–2011 | 54. | ரௌத்திரி | மறைமலையார்ஆண்டு | Raudhri | 2040–2041 | |||
25. | கர | சுந்தரர்ஆண்டு | Kara | 2011–2012 | 55. | துன்மதி | கல்யாண சுந்தரர் ஆண்டு | Dunmathi | 2041–2042 | |||
26. | நந்தன | சம்பந்தர்ஆண்டு | Nandhana | 2012–2013 | 56. | துந்துபி | விசுவநாதம்ஆண்டு | Dhundubhi | 2042–2043 | |||
27. | விஜய | வாசகர்ஆண்டு | Vijaya | 2013–2014 | 57. | ருத்ரோத்காரி | கண்ணதாசன்ஆண்டு | Rudhrodhgaari | 2043–2044 | |||
28. | ஜய | வில்லிபத்தூரார்ஆண்டு | Jaya | 2014–2015 | 58. | ரக்தாட்சி | அப்துல் கலாம் ஆண்டு | Raktakshi | 2044–2045 | |||
29. | மன்மத | புகழேந்திஆண்டு | Manmatha | 2015–2016 | 59. | குரோதன | இளையராசர்ஆண்டு | Krodhana | 2045–2046 | |||
30. | துன்முகி | பட்டினத்தார்ஆண்டு | Dhunmuki | 2016–2017 | 60. | அட்சய | ரகுமான்ஆண்டு | Akshaya | 2046–2047 | |||
தகவல் :
1. https://134804.activeboard.com/t64371605/topic-64371605/
2. https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U
3. https://en.wikipedia.org/wiki/Tropical_year
4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy
5. http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html
6. https://en.wikipedia.org/wiki/Puthandu
+++++++++++++++
நூலுதவி :
- தமிழ் இலக்கிய வரலாறு – டாக்டர் மு. வரதராசனார் , சாகித்திய அக்காதெமி வெளியீடு [2003]
- தமிழ் இலக்கிய வரலாறு -எம்மார். அடைக்கலசாமி எம்.ஏ. ராசி பதிப்பகம் [ 2003]
- கைகொடுக்கும் கை
- புலி வந்திருச்சி !
- பிள்ளை யார்?
- மாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்
- பெற்றோர்கள் செய்ய வேண்டியது
- உன்னாலான உலகம்
- புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு
- கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்
- அறியாமை அறியப்படும் வரை….
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- நான் தனிமையில் இருக்கிறேன்
- எழுத்தாளனும் காய்கறியும்
- எனக்கு எதிர்கவிதை முகம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்
- அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?
- அப்பால்…..
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- நாடு கேட்கிறது
- ஜீவ அம்சம்
- மொழிவது சுகம் ஏப்ரம் 19…2020
- பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு