அங்காடித் தெருவில்
அனாதையாகக் கிடக்கிறது
ஐம்பது வெள்ளி
பார்த்தான் ஒருவன்
பறந்து எடுத்தான் வேறொருவன்
‘என் காசு’ என்றான் பார்த்தவன்
‘இல்லை அது என் காசு’ என்றான் எடுத்தவன்
அடாவடிப் பேச்சு
அடிதடியில் முடியலாம்
‘ஆளுக்குப் பாதியே
நியாயம்’ என்றான் இன்னொருவன்
‘முடியாது நீ
முடிந்ததைப் பார்’
எடுத்தவன் ஓடுகிறான்
பார்த்தவன் விரட்டுகிறான்
‘அம்மா… அம்மா…
அடிக்கா தீங்கம்மா….
சூடு வெக்காதீங்கம்மா…..
சம்பாரிச்சு குடுத்திர்றேம்மா….
அம்மா….அம்மா….’
தொலைத்த சிறுவன்
வீட்டில் துவைக்கப் படுகிறான்
அமீதாம்மாள்
- சி.சு.செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 18
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ்
- இந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்
- கோபுரமும் பொம்மைகளும்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- யாருக்கு சொந்தம்
- தேடல்
- சூன்யவெளி
- வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி
- ‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்
- 2 மொழிபெயர்ப்புக் கவிதைகள்
- பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு