பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு

This entry is part 13 of 13 in the series 25 அக்டோபர் 2020

கே.எஸ்.சுப்பிரமணியன் அன்புமிக்க மனிதர், நமக்கெல்லாம் தெரிந்த திறமையான மொழிபெயர்ப் பாளர், மனிதநேயவாதி டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் இன்றிரவு (Saturday 24.10.2020) சுமார் 9.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். ஒரு மனிதராக, மொழிபெயர்ப்பாளராக கே.எஸ். என்று அவருக்கு நெருங்கியவர்களால் அன்போடு அழைக்கப்படும் முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியனை அறிந்தவர்களுக்கு எல்லையற்ற வருத்தம் தரும் செய்தி இது. கடந்த ஒரு மாதமாகவே அவருக்கு உடல்நிலை ஒருபோலில்லை. ஆனாலும் முடிந்தபோதெல்லாம் உற்சாகமாக சமீபத்தில் மொழிபெயர்த்துக்கொண்டி ருக்கும் பிரதிகளை மொழிபெயர்ப்பார். கடந்த மாதம் 10 நாட்கள் […]

‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்

This entry is part 11 of 13 in the series 25 அக்டோபர் 2020

    சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள் பெரும்பாலும் எளியவை. வாசிப்பு அனுபவத்தை மிகவும் ரசிக்கலாம். சிறப்பான சொல்லாட்சிக்குச் சொந்தக்காரர். இவர் கவிதை இயல்புகளில் முன் நிற்பது அழகான கட்டமைப்பாகும். இதற்கு புதிய சிந்தனைகள் துணைபுரிகின்றன. இந்த நூலில் 36 கவிதைகளும் 3 உரைநடைப் பகுதிகளும் உள்ளன.    ‘ வண்ணத்துப் பூச்சியின் பயணம் ‘ — ஒரு வண்ணத்துப் பூச்சி பறக்கிறது. அது முடிவில் சிலந்தி வலைக்குள் விழுந்துவிடுமோ என்று ஒரு சந்தேகம். இதுதான் கவிதைக்கரு. இந்த சாதாரண இயற்கைக் காட்சியை […]

வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி

This entry is part 10 of 13 in the series 25 அக்டோபர் 2020

எஸ்ஸார்சி விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள ஒரு அற்புதமான கவிதைத்தொகுப்பு. தமிழக அளவில் பல்வேறு விருதுகளைப்பெற்றுள்ளது இந்நூல். நல்ல கதாசிரியர் வளவதுரையன். பல சிறுகதைத்தொகுப்புக்களை வாசகர்களுக்குத் தந்தவர். புதினங்கள் சிலவும் சிறப்பாகப்படைத்துள்ளார். எழுத்தாளர் பாவண்ணனுக்கு மிக நெருக்கமானவர். வளவனூரார்.. வளவனூர் மண்ணை மறக்காமல் தன் பெயரோடு இணைத்துக்கொண்டு எழுத்துலகில் வெற்றி நடை போடுகிறார். பெருமிதமாகவே இது என்றும் எல்லோருக்கும் இருக்கிறது கடலூர் மண் அற்புதமான மக்களைப்பெற்றுப் பலபெருமை கொண்டுள்ளது தமிழ் .இலக்கியச்செல்வர்கள் அங்கு இன்றும் ஏராளமானவர்களே.  நடு நாட்டு […]

சூன்யவெளி

This entry is part 9 of 13 in the series 25 அக்டோபர் 2020

ஐ.கிருத்திகா                 பின்னங்கழுத்தில்  சடை  உரசி  கசகசத்தது. முதுகில்  நேர்க்கோடாய்  வழிந்த  வியர்வை  கீழ்வரை  நீண்டு  குறுகுறுக்க  வைத்தது. தீபா  தோளில்  மாட்டியிருந்த  பையை  இரு  கைகளால்  இறுக  பற்றியபடி  நின்றிருந்தாள். பார்வை  அங்குமிங்கும்  அலைபாய்ந்தது. யாராவது  பார்த்துவிடுவார்களோ  என்ற  அச்சத்தில்   தன்னை  அந்த  அரசமரத்துக்குப்  பின்புறம்  மறைத்துக் கொண்டாள். இரண்டாள்  பருமனுள்ள  அரசமரம்  அதற்கு  தோதாகவே  இருந்தது. ரயிலடி  வெறிச்சோடிக்  கிடந்தது. எப்போதுமே  அப்படித்தான். கிராமத்து  ரயிலடிகளின்  சாயல்  அது. வெயிலூரும்  கல்  பென்ச்சில்  காகங்கள்  […]

தேடல்

This entry is part 8 of 13 in the series 25 அக்டோபர் 2020

                                 புஷ்பால ஜெயக்குமார் அவன் காத்துக்கொண்டிருந்தான். அவன் வருவான் என்று. அது ஒரு பொழுது அல்லது ஒரு நாளின் ஒரு பகுதி. நிச்சயமாகக் கனவு அல்ல. அவன் பெயர் முன்னா. அவனது நம்பிக்கை என்றாவது ஒருநாள் நிறைவேறலாம். அல்லது இன்றுகூட நடக்கலாம். யாரது. யார் வர வேண்டும் என்று அவன் நினைத்து காத்திருக்கிறானோ அவனை அவனுக்குத் தெரிந்திருப்பது கூட ஒரு நியமாகப் படலாம். அப்படி யார் வந்தாலும் அவன் ஒன்றும் சொல்லிவிடமுடியாது. மாறாக அது ஒரு ஆரம்பம் […]

யாருக்கு சொந்தம்

This entry is part 7 of 13 in the series 25 அக்டோபர் 2020

அங்காடித் தெருவில் அனாதையாகக் கிடக்கிறது ஐம்பது வெள்ளி பார்த்தான் ஒருவன் பறந்து எடுத்தான் வேறொருவன் ‘என் காசு’ என்றான் பார்த்தவன் ‘இல்லை அது என் காசு’ என்றான் எடுத்தவன் அடாவடிப் பேச்சு அடிதடியில் முடியலாம் ‘ஆளுக்குப் பாதியே நியாயம்’ என்றான் இன்னொருவன் ‘முடியாது நீ முடிந்ததைப் பார்’ எடுத்தவன் ஓடுகிறான் பார்த்தவன் விரட்டுகிறான் ‘அம்மா… அம்மா… அடிக்கா தீங்கம்மா…. சூடு வெக்காதீங்கம்மா….. சம்பாரிச்சு குடுத்திர்றேம்மா…. அம்மா….அம்மா….’ தொலைத்த சிறுவன் வீட்டில் துவைக்கப் படுகிறான் அமீதாம்மாள்

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 6 of 13 in the series 25 அக்டோபர் 2020

                                                      உவரிப்பரு முத்தம் நிரைத்த திருப்                               பள்ளிச்சிவி கைப்புடை உம்பர்வர                         கவரிச் சிறுதென்றல் அசைப்ப மிசைக் கொற்றக் குடைவந்து கவிப்பவுமே.          [181] [உவரி=கடல்; பரு=பெரிய; பள்ளி=இடம்; சிவிகை=பல்லக்கு; உம்பர்=வானின்தேவர்; கவரி=விசிறி; மிசை=மேல்;கவிப்ப=மூட]       கடலிலிருந்து சிந்திய பெரிய நல்ல முத்துகள்கொண்டு இழைக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்து வானத்துத் தேவர்கள் எல்லாரும் உடன்சூழ்ந்து வரத்தென்றல் காற்றானது சாமரம் வீச, மேலே வெண்கொற்றக் குடை விரித்து நிழல்தர திருஞானசம்பந்தர் புறப்பட்டார். =====================================================================================                  மேகத்தொரு பந்தர் எடுத்து உடுவாம்         […]

கோபுரமும் பொம்மைகளும்

This entry is part 5 of 13 in the series 25 அக்டோபர் 2020

ஜோதிர்லதா கிரிஜா (கல்கியின் 24.10.1971 இதழில் வெளியானது: “கோபுரமும் பொம்மைகளும்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.)       தங்கள் பொருள்களை யெல்லாம் மூட்டை கட்டிக்கொண் டிருந்த இரண்டாம் மகனையும் மருமகளையும் பார்க்கப் பார்க்கப் பரமசிவத்தின் நெஞ்சம் வேதனையால் கசந்தது. கசப்போடு கனத்து வலித்த அந்தப் பாழாய்ப்போன மனசைக் கழற்றி வைத்துவிட முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எண்ணிப் பார்த்த அவரிடமிருந்து நீண்ட பெருமூச்சொன்று வெளிப்பட்டது.        “வேலாயி! கடைசியிலே இப்படியாயிடிச்சு, பார்த்தியா? பிள்ளைங்க ரெண்டும் […]

இந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்

This entry is part 4 of 13 in the series 25 அக்டோபர் 2020

அழகியசிங்கர்              இந்திரா பார்த்தசாரதியின் இந்தக் கதையைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.   கதையின் எள்ளல் சுவை சிரிப்பை வரவழைத்தது.             இந்திரா பாரத்தசாரதயின் சிறுகதைகள் தொகுதி 1 என்ற புத்தகத்திலிருந்து இக் கதையைப் படித்தேன்.  கிழக்கு பதிப்பகம் முதல் பதிப்பாக 2010ல் வெளியிட்டிருந்தது.             இப்போது இந்தப் புத்தகம் விற்பனைக்கு இருக்குமா என்று தெரியாது.  இத் தொகுப்பில் ஒரு பெரிய குறையைக் கண்டு பிடித்தேன்.             ‘சூசைம்மாவும் அத்வைதமும்’ என்ற சிறுகதை எப்போது எழுதப் பட்டது என்ற குறிப்பு இல்லை.  அல்லது பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தால் எந்தப் பத்திரிகையில் […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ்

This entry is part 3 of 13 in the series 25 அக்டோபர் 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ் இன்று (24 அக்டோபர் 2020) வெளியிடப்பட்டது. பத்திரிகையைப் படிக்க தளத்தின் முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: கருவாய் உயிராய்  – வித்யா அருண் ஓசை பெற்று உயர் பாற்கடல் – நாஞ்சில் நாடன் பாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல் – பீட்டர் துரைராஜ் சாவித்ரி- ஓர் இசை – மீனாக்ஷி பாலகணேஷ் பாண்டி(த்ய)ஆட்டம் – பானுமதி ந. விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன – ரவி நடராஜன் பலம் மிக்க குற்றக் கூட்டம்- இத்தாலியில் – உத்ரா அறிவிப்பு: வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு கதைகள்: ரீங்கரிப்பு – கமலதேவி கணை – ஐ. கிருத்திகா லா.ச.ரா. நூலகம் – கிருஷ்ணன் சங்கரன் மதுரா விஜயம் – அஸ்வத் யூதாஸ் – சுஷில் குமார் பலிபீடம் – முனைவர் ப. சரவணன் அமுதா அக்கா – பாஸ்கர் ஆறுமுகம் கவிதைகள்: கவிதைகள் – வ. அதியமான் இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு: லூயிஸ் க்ளிக்-  கு.அழகர்சாமி கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார் தவிர: இ-கொலு – ஒளிப்படங்கள் கேளாய் திரௌபதி – காணொளி – தமிழகத்தில் திரௌபதி நாடகங்கள் பற்றிய படம் தளத்துக்கு வருகை தந்து வாசித்த பின், தம் கருத்து ஏதும் உண்டானால், அவற்றைப் பகிர்ந்து கொள்ள அந்தந்தப் பதிவின் கீழே வசதி செய்து கொடுத்திருக்கிறோம். அதைத் தவிர மின்னஞ்சல் மூலமும் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் தம் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரியும் அதுவேதான்.  உங்கள் வருகையை எதிர்பார்க்கும் சொல்வனம் பதிப்புக் குழுவினர்